சிவப்புமிளகாய் ( Sigappu Milagai Red Chillies )+சிகப்பு மிளகாயின் நன்மைகள்

சிவப்புமிளகாய் ( Sigappu Milagai / Red Chillies )

சிகப்பு மிளகாயின் நன்மைகள்

வரலாற்றில் ஒரு பார்வை (History of Red chillies)

சிவப்பு மிளகாய் மெக்சிகோவில தோன்றுச்சு. அப்புறம் போர்ச்சுகீசிய வணிகர்களால இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுச்சு. அமெரிக்காவுல சில பகுதிகள்ல பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்ட இந்த சிகப்பு மிளகாய்கள் பின்னாடி கடல் வாணிபத்துல ஐரோப்பிய நாடுகள சென்றடையுது. அதுக்கு அப்புறம் அங்கேயிருந்து உலகத்தோடு எல்லா நாடுகளுக்கும் பரவுச்சு. இப்போது காய்ந்த மிளகாய் சாகுபடியில இந்தியா முதலிடத்தில இருக்கு.

இது இல்லாம இந்திய பாரம்பரிய வகை மிளகாய்களும் நிறைய இருக்கு.

சிகப்பு மிளகாயில் உள்ள ஊட்டச்சத்துகள்

வரமிளகாய் அப்படீன்னு சொல்ல கூடிய சிவப்பு மிளகாய் உடலுக்கு தரும் நன்மைகள் பல பல.

  • நாம சாப்புடற பல உணவுகளுக்கு காரத்தையும் சுவையையும் சேர்க்கிறது மட்டும் இல்லாம பல ஊட்டச்சத்து நன்மைகளையும் வழங்குது.
  • சிவப்பு மிளகாயில குறிப்பா வைட்டமின் சி நிரம்பி இருக்கு.
  • இதுல பீட்டா கரோட்டின் இருக்கு, இதை நம்மளோட உடல் வைட்டமின் ஏ ஆக மாத்திக்கும்.
  • சிவப்பு மிளகாயில சிறிதளவு பொட்டாசியம், மிதமான அளவுல இரும்பு,  மக்னீசியம் எல்லாம் இருக்கு.
  • இதுல உள்ள காரத்துக்கு காரணமான கலவை பேரு கேப்சைசின். இது வளர்சிதை மாற்றம், வலி ​​நிவாரணம் அப்புறம் அழற்சி எதிர்ப்பு விளைவுகள எல்லாம் தரக்கூடிய பல ஆரோக்கிய நன்மைகள கொண்டது.

சிகப்பு மிளகாயின் நன்மைகள்

சிவப்பு மிளகாய் பல ஆரோக்கிய நன்மைகள வழங்குது, அவை

  • சிவப்பு மிளகாயில இருக்க கேப்சைசின் அப்படீங்குற வேதிப்பொருள், வளர்சிதை மாற்றத்த அதிகரிக்கலாம்.
  • கேப்சைசினினால உருவாகிற வெப்பம் பசிய குறைக்க உதவுது. இதனால எடையை நாம எளிதா குறைக்கலாம்.
  • மேலும், கேப்சைசின் இரத்த ஓட்டத்த மேம்படுத்தி, இரத்த அழுத்தத்த குறைச்சு இதய நலனுக்கு உதவுது.
  • இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவ குறைக்கறதுக்கும் உதவுது.
  • கேப்சைசின் அழற்சி நிலைகள நிர்வகிகரத்துக்கும் நன்மை பயக்குது.
  • மேலும், கேப்சைசினின் வலியோட உணர் திறன கொறச்சு வலி நிவாரணத்துக்காகவும் பயன்படுது. குறிப்பா கீல்வாதம் அப்புறம் நரம்பியல் போன்ற நிலைகளில ஏற்படும் கடுமையான வலிய தாங்கிக்க உதவுது.
  • சிவப்பு மிளகாய் நோயெதிர்ப்பு மண்டலத்த பலப்படுத்துது.
  • இதுல இருக்க வைட்டமின் ஏ, பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு பயன்படுது.
  • சிவப்பு மிளகாயில இருக்க ஆக்ஸிஜனேற்றிகள் உடம்புல இருக்க  ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்த எதிர்த்துப் போராட உதவுது. இது நாள்பட்ட நோய்களோட அபாயத்த குறைக்குது.
  • கேப்சைசின் செரிமான திரவங்களோட உற்பத்திய தூண்டி செரிமானத்துக்கு உதவுது.
  • புற்றுநோய் உயிரணுக்களோட வளர்ச்சிய தணிக்க காப்சைசின் உதவறதா ஆய்வுகள் சுட்டிக்காட்டுது. இது புற்றுநோயால இறக்கும் அபாயத்த குறைக்குறதுல பங்கு கொண்டிருக்குது.
சிகப்பு மிளகாயின் நன்மைகள்

சமையல் பயன்பாடுகள்

சிவப்பு மிளகாய் சமையல்ல ஒரு முக்கிய மூலப்பொருளா இருக்கு. இது பல்வேறு வகையான உணவுகளுக்கு காரத்த சேர்க்குது. சிவப்பு மிளகாயின் சில பொதுவான சமையல் பயன்பாடுகள இப்போ பாக்கலாம்.

  • அரைத்த சிவப்பு மிளகாய் தூள கறிகள், சூப்கள் மற்றும் பிற கார உணவுகள்ல சேர்க்கப்படுற ஒரு முக்கிய மசாலா.
  • கார சாரமான சாஸ்கள், சால்சாக்கள், சட்னிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பதில சிவப்பு மிளகாய் ஒரு முக்கிய பங்குவகிக்குது.
  • உலர்ந்த சிவப்பு மிளகாய் பல நாட்கள் கெடாம இருக்கும். கறிகள் மற்றும் குழம்புகள் செய்ய பயன்படுத்தப்படுது.
  • சிவப்பு மிளகாய் தூள், செதில்கள் அப்புறம் பேஸ்ட் அப்படினு பல வடிவங்கள்ல கிடைக்குது.
  • நல்ல காரசாரமான உணவுகள சாப்பிடறவங்க அப்படியே முழு மிளகாய தயிர் சாதத்துக்கோ அல்லது மோர் சாதத்துக்கோ கூட கடிச்சுக்குவாங்க. அப்படி இல்லைனா சிறு கீறல்கள் போட்டு எண்ணைல வதக்கியும் சாப்பிடலாம்.
  • தற்காலத்துல அதிகம் விரும்பி உண்ணப்படுற பார்பிக்யூ சாஸ், ஹாட் விங் சாஸ் மற்றும் காரமான மயோனைஸ் போன்ற சாஸ்கள்ல சிவப்பு மிளகாய் ஒரு பொதுவான பொருளா இருக்கு.
  • சிவப்பு மிளகாய காக்டெய்ல் அல்லது காரமான ஹாட் சாக்லேட் போன்ற பானங்களில பயன்படுத்தப்படுது.

பிற பயன்பாடுகள்

  • பூச்சி விரட்டிகளில மற்றும் மிளகு ஸ்ப்ரேக்களில பயன்படுத்தப்படுது.
  • இயற்கை பூச்சிக்கொல்லியாவும் செயல்படுது.
  • கேப்சைசின் கிரீம்கள் அப்புறம் பேஸ்ட்களில சேர்க்கப்பட்டு மூட்டுவலி மற்றும் பிற வலிகளுக்கு வலி நிவாரணம் அளிக்குது.

முடிவுரை

சிவப்பு மிளகாயோட காரத்தின் அளவு அது வளரும் சூழ்நிலை, எந்த வகைய சேர்ந்தது அப்படீங்குறத பொறுத்து மாறுபடலாம். இத நினைவுல கொண்டு அவுங்க அவுங்களோட காரத்த தாங்குற தன்மைய பொறுத்து இத அளவா உட்கொண்டு இதனோட ஆரோக்கிய நன்மைகள பெற்று மகிழுங்க.

நம்ம உயிர் இயற்கை உழவர் சந்தைல சம்பா வர மிளகாய் மற்றும் சம்பா வர மிளகாய் தூள் இயற்கை முறைல விளைவிக்கப்பட்டு தரமான முறைல கிடைக்குது.

மேலும் அனைத்து வகையான இயற்கை உணவு பொருட்களையும் நீங்க நம்ம Uyir Organic Farmers Marketல வாங்கிக்கலாம். மேலும் மற்ற உணவு பொருட்களை பத்தி தெரிஞ்சுக்க நீங்க எங்களோட பிற வலைப்பதிகள பாருங்க.