No products in the cart.
Show:
Showing 1–16 of 46 results
Urad Dal White (For Fry) / உளுத்தம்பருப்பு தாளிப்பு 250g
Rated 5.00 out of 5
1 Ratings
₹50.00 Add to cart
Weight Based Shipping
உளுத்தம் பருப்பில் என்னற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் பெண்கள் உளுத்தம் பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது. உளுத்தம் பருப்பு சட்னி ஒரு பாரம்பரிய உணவுப்பொருள். இன்னும் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் செய்து சாப்பிடப்படும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும் .உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தான் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்
வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிட, சற்றே ஊட்டச்சத்து குறைவு. இதில் கார்போஹைட்ரேட்டும் புரதமும்ப, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் இருக்கின்றன. இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான மனித உடல் வளர்ச்சியைத் தூண்டும்.உளுந்தங்களி பெண்களுக்கு உகந்தது. மாதவிடாயைச் சீராக்குவது மட்டுமில்லாமல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும். தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு, உளுந்து மாவைக் கொடுக்கலாம். சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.மன அழுத்தம்,ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு அதிகமாகிறது.சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும்.
தோல் நீக்கப்படாத உளுந்தை அதன் முழுசத்தும் குறையாமல் உடைத்து பயன்படுத்துவது உளுந்து பொட்டு என்று அழைக்கப்படுகிறது . இயற்கைமுறையில் விளைந்த கறுப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது இந்த கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது.ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் “Leuconostoc mesenteroides” என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு, இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாம். இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது
இயற்கைமுறையில் விளைந்த கறுப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது இந்த கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது.ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் “Leuconostoc mesenteroides” என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு, இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாம். இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது
பருப்பு என்றாலே அது மஞ்சள் நிறம் கொண்ட துவரம் பருப்புதான். சாம்பார், பருப்பு சோறு, அரிசி பருப்பு சாதம் தொடங்கிப் பல உணவுப் பண்டங்கள் இதை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படுகின்றன., உடலுக்குச் சரிவிகித உணவைத் தருவதோடு கொலஸ்ட்ரால் கொஞ்சம்கூட இல்லை மேலும் புரதசத்து , வைட்டமின் சி சத்து, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகம்.
பாசிபயறு பொதுவாக பாசிப்பருப்பு ,பயத்தம்பருப்பு என்ற இருவேறு பெயர்களில் அளிக்கப்படுகிறது. பயறு வகைகளில் அமினோ அமிலங்கள் குறிப்பாக லைசின் அதிகமா உள்ளது . வைட்டமின் B காம்பிள்ஸ்க் ,ரிபோபிளேவின் உள்ளது .நன்கு முதிர்தந்த பயறு வகைகளில் அதிக சத்துக்களும் குறைந்த ஈரப்பதமும் இருக்கும் .அனைத்து வகையான இனிப்புகளும் ,சத்துமாவு செய்யவும் ஏற்றது .