கிராமப்புறங்களில் எங்கு பார்த்தாலும் உயர உயர வளர்ந்து நிக்கும் தென்னை மரங்கள். கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்கும் தென்னங்காய்கள். காற்றோடு சேர்ந்து ஆடும் அழகே தனி! அப்படி ஆடும் போது அது விழுந்துட்டா உடனே தேங்காய் போடுபவர வர வைத்து விடுவாங்க.
இளநீர் போட்டு ரசித்து ருசித்து குடிச்சுட்டு, மற்ற முற்றிய தேங்காய்கள சேமித்து வைத்து மட்டை வாங்கி மாத கணக்கில் பயன்படுத்துவோம்.
இப்போ டவுன்ல வளரவங்களோ பல பேரு தென்னை மரத்தையே பெருசா பாத்திருக்க மாட்டாங்க. உப்பில்லா பண்டம் குப்பையிலே அப்படினு சொல்லுகிற மாதிரி தேங்காய சேர்க்காத உணவும் சுவையற்ற உணவே.
வரலாற்றில் ஒரு பார்வை
இது தென்ன மரத்தோட பழம். தெங்கம் பழம்னு இன்னொரு பேரும் இருக்கு. இது கெட்டியா இருக்கிறதால பழமாக இருந்தாலும் காய்னு பெயர் வந்துச்சு.
ஆங்கிலத்தில தேங்காய Coconut அப்படின்னு சொல்லுவாங்க. இது இந்தோனேசிய தீவுகள பூர்வீகமா கொண்டது. இலங்கை வழியா தமிழ்நாடு அப்புறம் கேரள கடற்கரைகள அடஞ்சு இங்கேயும் அப்படியே வாழ்ந்திருச்சு அப்படின்னு வரலாறு சொல்லுது.
சமையல் பயன்பாடுகள்!
உலகம் முழுவதுமே தேங்காய சமையலுக்கு பயன்படுத்திட்டு வராங்க. இதுல முக்கியமா இந்தியாவுல தான் தேங்காயோட பயன்பாடு ரொம்ப அதிகமா இருக்கு. தேங்காய துருவி பொரியல்லையும் குழம்புலயும் மசாலாவோட சேர்த்து சமைச்சா மிகவும் சுவையா இருக்கும்.
அது மட்டும் இல்லாம தேங்காய பயன்படுத்தி பல வகையான இனிப்புகளையு செய்ய முடியும். அதுல நம்ம எல்லாத்துக்குமே புடிச்சதுனு பார்த்தோம்னா தேங்காய் பர்பி, தேங்காய் பால், கொழுக்கட்டை, தேங்காய் பூ சாதம், பால் சாதம், சட்னி, பல்வேறு வகையான குருமா, மிட்டாய் அப்படின்னு சொல்லிட்டே போலாம்.
- இளநீர்
இது இயற்கை மனிதர்களுக்கு தந்த பொக்கிஷம். வாதம், பித்தம், கபம் இது மூன்றுமே தீர்க்கக்கூடிய ஒரு அரு மருந்து. உடம்புல நீர் சத்து குறையாமயும் பாத்துக்கும்.
பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம் மற்றும் குளோரைடு மாதிரி பல வகையான சத்துக்கள் தாதுக்கள் இளநீர்ல இருக்கு.
சமையல் அல்லாத பிற பயன்பாடுகள்!
தேங்காய் எண்ணெய்
- தேங்கா எண்ணெய தினமும் உடம்புக்கு தேய்த்து மசாஜ் செஞ்சோம் அப்படின்னா உடல்ல இருக்க வலிகள் எல்லாம் நீங்கும்.
- மன அழுத்தத்தையும் போக்கக்கூடிய தன்மை இதுக்கு இருக்கு.
- தோல்ல வளரக்கூடிய பாக்டீரியாக்கள எதிர்க்கும் தன்மை இருக்கிறதால இது தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும். குடலுக்கும் நல்ல பாதுகாப்பு தருது.
- தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்கிறது நல்லது.
- தலையில இருக்குற தோலும் முடியும் வறண்டு போகாம இது பாத்துக்கும்.
தேங்காய் புண்ணாக்கு
தேங்காயை நன்றாக காய வைத்து ஆட்டி எண்ணெய் எடுத்ததுக்கப்புறம் கிடைக்கிறது தான் புண்ணாக்கு. இந்த புண்ணாக்க மாட்டுக்கு உணவா கொடுப்பாங்க, செடிகளுக்கு உரமாவும் பயன்படுத்துவாங்க. ஹோட்டல்ள நல்ல சுவையான தேங்காய் சட்னி சாப்பிட்டிருக்கீங்களா அதுல தேங்காய் புண்ணாக்கு சேர்க்கப்படுது.
தேங்காய் தொட்டி அல்லது கொட்டாங்கச்சி
தொட்டிகளுக்கு எக்கச்சக்கமான பயன்கள் இருக்கு. வீடுகளில் விறகு அடுப்பு பயன்படுத்துற மாதிரி இருந்தா அதுல எரிப்பதற்கு பயன்படும். கலைப் பொருட்கள் செய்யலாம்.
பல நாடுகள்ல பல வேறு விதமான மருந்துகள தயாரிக்க கூட மூலப்பொருளா இத பயன்படுத்துறாங்க. இதனோட வேதியல் தன்மைய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து ஆக்டிவேடட் சார்கோல் (Activated charcoal ) அதாவது கறி தூள் உருவாக்கி விஷத்தன்மைய முறியடிக்க கூடிய ஒரு மருந்தா கூட பயன்படுத்தலாம் அப்படின்னு கண்டுபிடிச்சுருக்காங்க.
இது மட்டும் இல்லாம நிறைய வகையான திரவங்கள், கொசுவர்த்தி சுருள், வர்ணம், வெடிபொருள் தயாரிப்பு இந்த மாதிரி பல விஷயங்கள்ல இந்த தேங்காய் தொட்டிகள் பயன்பாடு அதிகரிச்சுட்டே வருது. இதனால இந்தியாவுல இருந்து பல நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி அதிகமாகி இருக்கு.
தேங்காய் நார்
தேங்காய்ல இருக்க நார் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு கெடுதலையும் தராது. எளிதா மறுசுழற்சி செய்யலாம். அதை வச்சு நம்ம பல பொருட்கள செய்ய முடியும். மீன் வடிகட்டி, கம்பளம், தூரிகை, படுக்கை விரிப்புகள், தலையணை கவர்கள் என எல்லாமே நம்மளால செய்ய முடியும்.
தேங்காய் நார் தூள் அல்லது கோகோ பீட்
தேங்காய் நார மெஷின் கொண்டு நல்லா அரைச்சு கோகோ பீட் செய்வாங்க. கோகோ பீட்ல இயற்கையாகவே உப்பு நிறைய இருக்கு. இத விவசாயத்துல நம்ம பயன்படுத்தலாம்.
இதை பெரும்பாலும் சதுர வடிவத்தில் தான் நம்மளுக்கு கிடைக்குது அதனால ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள இத பயன்படுத்திடனும். இல்லனா உடைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா போயிரும்.
அதனோட உறிஞ்சும் தன்மைய வைச்சு 800% ஈரப்பதத்த அதனால தேக்கி வச்சுக்க முடியும். எனவே முக்கியமா இது வறண்ட பகுதிகள்ள பயன்படுத்துவாங்க.
தேங்காய் மருத்துவ குணங்கள்!
தேங்காயில் புரதம் அப்புறம் செலினியம் அதிகமா இருக்கு. அதனோட சதைப்பகுதில மக்னீசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருக்கு. இது முடி உதிராம அடர்த்தி குறையாம பாத்துக்கும்.
மேலும் அதுல இருக்கிற நீர்ச்சத்து சருமத்தை பாதுகாக்குது. அல்சர், வயிற்றெரிச்சல், அல்சீமர் போன்ற நோய்கல சரி செய்ய உதவுது.
முடிவுரை
தினமும் தேங்காய, மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள சிறிதளவு உண்டு வர்ரது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள கொடுக்கும்.
இத புரிஞ்சுகிட்டு எல்லாருமே தேங்காய சரியான முறையில பயன்படுத்தி அதனோட அனைத்து பயன்களையும் பெற்று மகிழ வேண்டும்.