கோழிகள்

கோழிகள்!

கோழிகள்: வரலாற்றில் ஒரு பார்வை

உலகத்துல இருக்கிற எல்லா கோழி இனங்களுமே இந்தியாவ தாயகமாக கொண்ட சிவப்பு காட்டுக் கோழிகள்( Red Jungle Fowl )  அப்படின்னு சொல்ற  பறவைல இருந்து  தான் தோன்றுச்சு, அப்படின்னு சொல்றாங்க.

கோழிகள் முதல்ல ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா அந்த மாதிரி இடங்கள்ல சண்டைக்காக தான் வளத்தாங்க. அதுக்கப்புறம் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்க ஆரம்பிச்சாங்க.

உலகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் இருக்கிற பறவை அப்படின்னா அது கோழி தான். இறைச்சிக்காக உண்ண படுற பறவைகள்ளயும் முதலாவது கோழி தான்.

நாட்டு கோழிகளின் பண்புகள்

நாட்டு கோழி எல்லா உணவையு சாப்பிடக்கூடிய பறவை, அதனால அத அனைத்துண்ணினு சொல்லலாம். காடுகள்ள வாழுற கோழிகள் எல்லாம் நிலத்த நல்லா கிளறி விதைகள், பூச்சிகள், பல்லி, எலி அந்த மாதிரி எல்லாத்தையுமே சாப்பிட்டு வாழும்.

வீட்டு கோழிகள் மனுஷங்க கொடுக்கிற தானியங்களையும், பயிர்களையும், சாதத்தையும், சிறு பூச்சிகளயும் சாப்பிட்டு வாழும். அது எந்த இனத்த சேர்ந்ததோ அத பொருத்து 5 லிருந்து 10 வருஷத்துக்கு வாழும்.

கோழிகளால நீண்ட தூரம் பறக்க முடியாது. சில எடை குறைந்த கோழிகள் வேலிகள் மேல அப்புறம் மரத்து மேல ஏறுறதுக்காக பறக்கும். தனக்கும் தன்னோட குஞ்சுகளுக்கும் ஆபத்து அப்படின்னா சில சமயங்களில் கோழிகள் ரொம்ப உயரமாக கூட பறக்கும்.

கோழி இனங்கள்

கோழில நாட்டுக்கோழி, கறிக்கோழி, முட்டைக்கோழி, கினி கோழி, வான்கோழி, காட்டுக்கோழி அப்படின்னு பல வகை இருக்கு.

இதுல நாட்டுக்கோழியில இன்னும் உட்பிரிவு வகைகளும் உண்டு. தமிழ்நாட்டில சிறுவிடை, பெருவிடை, கடக்நாத் கலப்பு இது மூன்றும் ரொம்ப அதிகமா எல்லாரு வீட்டிலயு  வளர்க்கப்படக்கூடியது.

கோழிகள்

கோழிகள் சமையல் பயன்பாடுகள்

பல பேர் வீட்ல செல்ல பிராணிகளா வளர்க்கப்பட்டாலும் முக்கியமா இத இறைச்சிக்காக தான் பயன்படுத்துறாங்க.

நாட்டுக்கோழி குழம்பு, மலாய் , கடாய் , பட்டர் ,  பூனா மசாலா,  டிக்கா மசாலா, கோழி கீரை கறி, பிரியாணி, சிக்கன் 65,  கோர்மா, தந்தூரி, சில்லி, பக்கோடா, செட்டிநாடு, ஹைதராபாத் சிக்கன் பிரியாணி, சிக்கன் பிரைடு ரைஸ், ஷவர்மா, சிக்கன் மஞ்சூரியன், பாப்கார்ன் சிக்கன், பூண்டு சிக்கன், ப்ரை, லாலிபாப்னு கோழி கறி பயன்படுத்தி செய்யப்படுர பல்வேறு வகையான உணவுகள அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோழி முட்டைய வைச்சும் பல பல வகையான உணவுகள சமைக்க முடியும். கோழி சமைக்க தேவையான அனைத்து மசாலா பொருட்களுமே Uyir Organic Farmers Marketல நீங்க வாங்கலாம்.

கோழிகள்

கோழிகள் பிற பயன்பாடுகள்!

சேவல் சண்டை

இது தென் இந்தியால புகழ்பெற்ற ஒரு விளையாட்டு. ரெண்டு சேவல்களுக்கு நடுவுல நடக்குற சண்டைய தான் சேவல் சண்டைனு சொல்ரோம்.

இந்த மாதிரி சண்டைக்காகவே வளர்க்கிற சேவல ‘கட்டு சேவல்’ அப்படின்னு சொல்லுவாங்க. இதுக்காக தனியா சேவல் கட்டு தரைனு ஒரு இடத்த ஒதுக்கி சேவல்களுக்கு பயிற்சி கொடுப்பாங்க.

இந்த மாதிரி தயாரான சேவல்கள் லட்சம் ரூபாய்க்கு கூட விற்க முடியும்.

கோழிகள்

உரம்

கோழியோட எருல நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மாதிரியான சத்துக்கள் அதிகமா இருக்குறதுனால மண் வளத்த அதிகப்படுத்துது.

மேலும் மண்ணோட நீரை பிடித்து வெச்சுக்கிற தன்மையையு இது அதிகப்படுத்துது‌. அதனால் இத செடிகளுக்கு உரமாவும், மீன்களுக்கு உணவாவும் கூட பயன்படுத்தலாம்.

ஊட்டச்சத்துக்கள்!

கோழி இறைச்சில அதிகமான புரதச்சத்து இருக்கு. மேலும் செலினியம், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், துத்தநாகம், இரும்பு, வைட்டமின் பி6, பி12, மற்றும் டி எல்லாமே அதுல அதிகமா இருக்கு. நோய் எதிர்ப்பு சக்திய இது அதிகப்படுத்துது‌.

கோழி முட்டை

கோழிகளின் முட்டைல மெலனின் புரத சத்தும் இருக்கு. அடிக்கடி நாட்டு கோழி முட்டைய சாப்பிடுறவங்களுக்கு தலை முடி அப்புறம் நகம் ஆரோக்கியமா இருக்கும்.

கர்ப்ப காலத்துல பெண்கள் நாட்டு கோழி முட்டை சாப்பிட்டா அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் அதுல இருந்தே அவங்களுக்கு கிடைச்சிடும். நாட்டு கோழி முட்டை அவ்வளவு சிறப்பானது.

கோழிகள்

மருத்துவ குணங்கள்!

  • நம்முடைய உடல் எடைய பராமரிப்பதற்கும் நாட்டு கோழி இறைச்சி உதவி செய்யும்.
  • கோழியில் இருக்கிற பாஸ்பரஸ் நம்மளோட பற்கள், எலும்புகள் எல்லாத்தையும் ஆரோக்கியமா பார்த்துக்குது.
  • சிறுநீரகங்கள், கல்லீரல், நரம்பு மண்டலம் எல்லாத்துலையும் சரியான செயல்பாடு இருக்கிறத உறுதி செய்யும்.
  • கோழியில் இருக்கிற நியாசின் அப்படிங்கற ஒரு வகையான விட்டமின் பி புற்றுநோய் அப்புறம் சில மரபணு சிக்கல்கள் வராம உடல பாதுகாக்குது.

முடிவுரை

இந்த வலைப்பதிவுல கோழியோட சிறப்பு அம்சங்கள் அப்புறம் பயன்கள் பற்றி பார்த்தோம். அதனால கோழி இறைச்சிய உங்களோட தினசரி உணவுல சரியான அளவு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்‌.