எள்ளின் நன்மைகள்

எள்

வரலாற்றில் ஒரு பார்வை

எள் விதை மனிதகுலம் அறிந்த பழமையான ஒன்று. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படக்கூடிய பயிர் வகை. குறைந்தது 5500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வளர்க்கப்பட்டதா கூறப்படுது. மெசப்பட்டோமியா மற்றும் இந்தியா இடையே எள் வணிகம் கி மு 2000 ஆண்டு சமயத்துல நடந்ததா வரலாறு சொல்லுது. இந்த வலைப்பதிவுல எள்ளின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

எள்ளின் நன்மைகள்

எள்ளின் பண்புகள்

இது வறட்சியான பகுதிகள்ளையும் வளரக்கூடியது. வெள்ளை, கருப்பு, செந்நிறம் அப்படின்னு மூன்று வகைகள் இருக்கு.

நல்லெண்ணெய இந்த விதைகள பிழிஞ்சு தான் எடுப்பாங்க.  மேலும் இதுக்கு பல மருத்துவ குணங்களும் இருக்கு.

எள் செடியோட இலை, பூ, காய், விதை இந்த மாதிரி எல்லாமே மருத்துவ பயன்கள் கொண்டது.

வறண்ட பகுதியில கூட இது நல்லா செழித்து வளரும். பயிரிடும்போது ஒரே ஒருமுறை தண்ணீர் விட்டா போதும் பிறகு தண்ணியே நம்ம விடத் தேவையில்லை, அந்த அளவுக்கு வறட்சிய தாங்கிக் கொள்ற தன்மையும் இந்த செடிக்கு உண்டு.

சமையல் பயன்பாடுகள்

எள்ள நாம அப்படியே பச்சையாவும் சாப்பிடலாம் வறுத்து இல்லன்னா பொடி பண்ணியும் சாப்பிடலாம். எள்ளுருண்டை, எள் எண்ணெய், எள் பர்பி, எள் லட்டு அப்படின்னு பலவிதமான உணவுகள செஞ்சு சாப்பிடலாம்.

எல்லா சமையல்களிலுமே நாம எள்ள பயன்படுத்தலாம். பொடி செஞ்சு குழம்புகள்ல சேர்த்திக்கலாம். சமையல் செஞ்சு முடிச்ச அப்புறம் கூட உணவு மேல தூவி சாப்டுக்கலாம். இது உணவுக்கு தனித்துவமான சுவைய தருது.

எள்ளின் நன்மைகள்

ஊட்டச்சத்துக்கள்!

எள்ளுல இருபது சதவீதம் புரதமும் 50% எண்ணையும் 16 சதவீதம் மாப்பொருளும் இருக்கு.

இத உடம்புக்கு சேர்த்துட்டு வந்தோம்னா அது உடலுக்கு நல்ல பலத்த கொடுக்கும். அது மட்டும் இல்லாம எள்ளுல இரும்புச்சத்து, துத்தநாகம் இதெல்லாம் அதிகமா இருக்கு.

எள்ளில் இருக்கிற எண்ணெய் தோலுக்கு நல்ல பளபளப்பு தருது.

அதே மாதிரி தோல்ல ஏற்படுற நோய்களான சொரி, சிரங்கு, படை மாதிரியான எல்லா நோய்களையும் எளிதா, விரைவா குணப்படுத்திடும்.

மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், மற்றும் வைட்டமின் ஏ, பி போன்ற சத்துக்கள் எல்லாமே இதுல உள்ளடங்கி இருக்கு.

இத சரியான அளவுல நம்ம உணவுல சேர்த்துக்கிட்டு வந்தோம்னா நம்ம உடம்புக்கு தேவையான பலன்கள் கிடைக்கும்.

எள்ளின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்

கருப்பு எள் சாப்பிடறவங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்கும், அது மட்டும் இல்லாம புற்று நோய் வந்தவர்களுக்கும் இது அரு மருந்தா இருக்கும் அப்படின்னு  சில ஆராய்ச்சிகள்ள கண்டுபிடிச்சு இருக்காங்க.

தாய்லாந்துல சியாங் மாய் பல்கலைக்கழகம், எள் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்றாங்க. அதுல கருப்பு எள் புற்றுநோய் காண செல்கள உருவாகாம தடுக்குது அப்படின்னு கண்டுபிடிக்கிறாங்க.

அது மட்டும் இல்லாம மூளையோட செல்களையும் திரும்பி வளரச் செய்து அப்படின்னு கண்டுபிடிச்சிருக்காங்க.

புற்றுநோய் வராம நம்மள காப்பாத்துறதுக்குன்னு  ஒரு மூலக்கூறு இருக்கு. எள்ளு இத இயற்கையாவே கொண்டிருக்கு. மத்த தாதுக்கள விட இந்த குறிப்பிட வேதிப்பொருள் வந்து எதிர்ப்பு சக்திய தூண்டி நேரடியா புற்றுநோய் செல்கள தடை செய்து.

இது ஆண்கள் பெண்கள் அப்படின்னு இரு விதமா அதனுடைய பயன தருது. பெண்கள் தினமும் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் அவர்களுக்கு வராமல் தடுக்கப்படுது.

ரத்த நாளங்கள்ளையும் புற்றுநோயோட செல்கள் வளராம இது தடுக்குது. மேலும் பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்குது, சுத்தமாவும் வச்சிக்குது.

இதுல ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் எல்லாமே அதிகமா இருக்கறதால இள நரைய கூட தடுக்குது. உடம்புல சேர்ந்திருக்கும் கழிவுகள இது எளிதா வெளியேற்றிடும்.

செரிமான கோளாறு இருக்குன்னு வச்சுக்கோங்க, ஒரு தேக்கரண்டி தினமும் சாப்பிட்டு வந்தோம்னா இது சரியாயிடும்.

குறிப்பா அரிசியோட சேர்த்து நம்ம சாப்பிட்டோம்னா அதனுடைய முழு பயனும் நமக்கு அப்படியே கிடைக்கும்.

உடல்நிலை சரி இல்லாதவங்க மட்டும் மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவது நல்லது.

நல்லெண்ணெயின் பயன்கள்

நல்லெண்ணைய பத்தி பார்த்தோம்னா அதுல சீசேமோலின் அப்படிங்கிற ஒரு வேதிப்பொருள் இருக்கு. இது இதயத்துக்கு பாதுகாப்பு அளித்து இதய நோய் வராமல் பார்த்துக்கும். கால்சியம் அதிகமா இருக்குறனால எலும்புகள் பலமா வலுவோடு இருக்கும்.

சர்க்கரை வியாதி இருக்கிறவங்க, உயர் ரத்த அழுத்தம் இருக்கிறவங்க மற்ற எண்ணெய்கள ஒதுக்கிட்டு நல்லெண்ணைய சாப்பிடலாம்.

தினமும் காலையில நல்லெண்ணெயில வாய் கொப்பளிச்சிட்டு வந்தோம்னா பல் சொத்தை எல்லாம் நீங்கி, பற்களும் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்கும்.

எள்ளின் நன்மைகள்

முடிவுரை

இந்த மாதிரி எள்ளின் நன்மைகள் பல பல. அதனால அனைவரும் எள்ள சீரான அளவுல உடம்புக்கு சேர்த்துக்கிட்டு ஆரோக்கியமா வாழலாம்.

உங்களுக்கு இயற்கையான முறைல தரமான எள்ளோ அல்லது அது சம்பந்தப்பட்ட வேற எந்த பொருட்களோ வேணும் அப்டினா Uyir Organic Farmers Marketல வாங்கிக்கலாம்.