கடலை எண்ணெய்

கடலை எண்ணெய்!

வரலாற்றில் ஒரு பார்வை

நிலக்கடலை எண்ணெய பொதுவா கடலை எண்ணெய் அப்படின்னு அழைப்பாங்க. கடலை எண்ணெய் வேர்க்கடலைச் செடியோட விதைல இருந்து எடுக்கப்படுது. இது ஒரு தாவர எண்ணெய். பெரும்பாலும் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகள்ல கடலை எண்ணெய அதிகமா உணவுல சேர்த்துப்பாங்க. கடலை எண்ணெய் நன்மைகள் பற்றி இந்த வலைப்பதிவுல பார்க்கலாம்.

இந்தியாவோட தென் பகுதில பரவலா பயன்படுத்தப்படர கடலை எண்ணெய் இதயத்துக்கு நல்லது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூட இதயத்துக்கு ஆரோக்கியமான எண்ணெய் இது அப்டினு சொல்லி இருக்கு.

பச்சை கடலைய அப்படியே எண்ணெய் ஆட்டுனா அதுல ஒரு மிதமான சுவை தான் இருக்கும். அதே வருத்த வேர்க்கடலைல இருந்து எண்ணெய் ஆட்டுனா அதுல ஒரு வலுவான வேர்க்கடலை சுவையும் நறுமணமும் இருக்கும்.

கடலை எண்ணெய் நன்மைகள்

கடலை எண்ணெயின் வகைகள்

ஆய்வுப்படி, கடலை எண்ணெயில நாலு வகை இருக்கு. அவை,

  • செக்கு கடலை எண்ணை (Cold-pressed Groundnut Oil)
  • வறுக்கப்பட்ட கடலை எண்ணெய் (Roasted Groundnut Oil)
  • சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய் (Refined Groundnut Oil)
  • கலப்படம் செய்யப்பட்ட கடலை எண்ணெய் (Groundnut Oil blends)

இதுல இயற்கையான முறைல விளைவிச்சு, மர செக்குல ஆட்டுன சுத்தமான கடலை எண்ணெய் தான் உடம்புக்கு ரொம்ப நல்லது.

இயற்கை முறைல விளைவிக்கப்பட்ட தரமான நிலக்கடலை மற்றும் அது சம்மந்தப்பட்ட எல்லா பொருட்களையும் நீங்க Uyir Organic Farmers Marketல வாங்கிக்கலாம்.

சமையல் பயன்பாடுகள்

வேர்க்கடலைய நாம பச்சையா, வேகவெச்சு, வறுத்து அப்டினு பல விதமா சாப்பிடறோம். ஆனா கடலை எண்ணைய பயன்படுத்த பயப்படறோம். குறிப்பா இரத்த அழுத்தம், இதய நோய் இருக்கிறவங்க கடலை எண்ணெய தொடறதே இல்ல.

ஆனா ரீஃபைண்ட் செய்யப்படாத கடலை எண்ணெய உணவுல தாராளமா சேர்த்துக்கலாம். அளவோட உடம்புக்கு சேர்த்துக்கிட்டா இது பலவிதமான பலன்கள தரக்கூடியது.

பசி இல்லாம இருக்கறத சரி பண்ண, ரத்தத்துல சர்க்கரையோட அளவு திடீர்னு அதிகமாறத தடுக்க கடலெண்ணைல வறுத்த வேர்க்கடலைய சாப்பிடலாம்.

கடலை எண்ணைய பயன்படுத்தி நாம எல்லா வகையான உணவுகளையும் சமைக்கலாம். உணவுகள இந்த எண்ணைல பொறிச்சா அது தனி சுவை கொடுக்கும்.

மீன், சிப்ஸ், மாமிச உணவுகள், முட்டை, அணைத்து வகையான காய்கறி, கேக், இனிப்பு வகைகள்னு நாம இந்த எண்ணைய வெச்சு நிறைய வகை வகையா சமைக்கலாம்.

கடலை எண்ணெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள்!

இதுல கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், மொத்த கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட், கால்சியம், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கு.

பிற பயன்பாடுகள்

இந்த எண்ணைய வெச்சு மத்த தாவர எண்ணெய்கள போல சப்போனிஃபிகேஷன் மூலமாக சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துறாங்க. இத மசாஜ் எண்ணெய்யா கூட பயன்படுத்தலாம். அது ரொம்ப பாதுகாப்பானது.

ஒரு சுவாரசியமான தகவல் என்னன்னா ஓட்டோ நிறுவனம் 1900இல் பாரிஸ் கண்காட்சியில டீசல் எஞ்சினுக்கு எரிபொருளா கடலை எண்ணெய பயன்படுத்தலாம் அப்படிங்கறது நிரூபிச்சாங்க‌. அதனால இது பயோடீசல்ல ஒன்றா இருக்கு.

கடலை எண்ணெய் நன்மைகள்!

கடலை எண்ணெய் நன்மைகள்

கடலை எண்ணெய் சாப்படறதால சருமம், தலைமுடி, நினைவாற்றல், நீரிழிவு நோய், எடை இழப்பு எல்லாமே கட்டுபாட்ல இருக்க உதவி செய்யுது.

வேர்க்கடலைல பீட்டா-சிட்டோஸ்டெரால் இருக்கு. இது புற்றுநோய் செல்கள வளர விடாம தடுக்குது. குறிப்பா கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் ஆபத்த குறைக்குது.

நிலக்கடலைல வைட்டமின் பி3 அப்புறம் நியாசின் அதிக அளவுல இருக்கிறதால மூளையோட செயல்பாட்ட அதிகப்படுத்துற ஆற்றல கொண்டு இருக்கு. இதனால வயசாகர அப்போ உண்டாற அல்சைமர், பார்கின்சன் அப்புறம் டிமென்ஷியா போன்ற நோய்களோட தாக்கம் குறையுது.

முடிவுரை

நமக்குப் பிடித்த உணவோட சுவைய அதிகரிக்கிறது மட்டும் இல்லாம பல நோய்க்கு இயற்கையான தீர்வாகவும் இது இருக்கு. இந்த மாதிரி பல கடலை எண்ணெய் நன்மைகள் பற்றிப் பார்த்தோம். இதனை உணவுல சீரான அளவுல சேர்த்து உடலுக்குத் தேவையான சத்துக்கள பெற்று எல்லாரும் ஆரோகியமா வாழலாம்.