வரலாற்றில் ஒரு பார்வை
ராஜமுடி அரிசி தன்னோட பெயரிலயே கம்பீரமா இருக்கறதோட மட்டும் இல்லாம மன்னர்கள் காலத்துல இருந்தே பயன்படுத்தப்பட்டுட்டு வர்ற பழைய பாரம்பரிய அரிசி. ஒரு காலத்துல மகாராஜாக்களுக்கு ரொம்ப பிடிச்ச உணவு.
அரச சமையலறைகள்ல அதிகமா விரும்பப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஒரு உணவும் கூட. ராஜமுடி அரிசி கேரளாவோட பாலக்காடு மாவட்டத்துல இருந்து வந்தது.
“ராஜமுடி” அப்படீங்குற பெயர் “ராஜாக்களின் கிரீடம்” அப்படீன்னு பொருள்தரும். மேலும், இந்த அரிசி வகை பழைய திருவிதாங்கூர் ராஜ்யத்த சேர்ந்த அரச குடும்பத்துக்காக மட்டுமே வளர்க்கப்பட்டுச்சு.
இதுக்கு மைசூர் உடையார் காலத்துலையும் வரலாறு உண்டு. புராணப்படி, மைசூர் மன்னருக்கு வரி செலுத்த முடியாதவங்க, அதுக்குப் பதிலாக சத்தான ராஜமுடி அரிசிய காணிக்கையா செலுத்த சொல்லிருக்காங்க.
பண்புகள்
இப்போ சிறிய அளவுல தான் சாகுபடி செய்யப்படுது. அதனால இது பாதுகாக்கப்பட வேண்டிய அரிசியும் கூட. இந்த அரிசி மேலும் தனித்துவமான சுவையையும் கொண்டு இருக்கு.
ராஜமுடி அரிசிய பிற அரிசிகள்ட்ட இருந்து முக்கியமா வேறுபடுத்தறது என்னனா அதனோட தனித்துவமான சுவையும், நறுமணமும் தான். தானியங்கள் குட்டையாவும், பருமனாவும், சிவப்பு-பழுப்பு நிறத்துலையும் இருக்கும்.
இது ஆறு அடி உயரம் வரை வளரக்கூடியது. சிவப்பு, வெள்ளை, வெளிர் மஞ்சள் அப்படீன்னு மூணு வகையான நிறங்கள்ல இது விளையுது.
ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள்
- வைட்டமின் சத்துக்கள், நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகிய எல்லாமே இதுல அடங்கும்.
- மேலும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் அப்புறம் ஜிங்க் இதுல நிறைய இருக்கு.
- இது நம்ம உடம்புல நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்கிறது மட்டும் இல்லாம, நோயால அவதிப்படறவங்களையும் சீக்கிரமே குணமாக்குது.
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம்மளோட உடம்ப தொற்றுல இருந்து பாதுகாக்குது.
- சத்தான இந்த ராஜமுடி அரிசிய தினமும் சாப்பிடறது நல்லது. இது நல்ல நார்ச்சத்து கொண்டது.
- இதுல, மேலும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிரம்பி இருக்கு.
- ராஜமுடி அரிசியில உள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்புச் சக்திய மேம்படுத்தி உடல விரைவா மீட்கவும், குணமடையவும் செய்யுது.
- இது இதயத்த பாதுகாக்கற பண்பையும் கொண்டிருக்கு.
- ராஜமுடி அரிசி எலும்புகளுக்கு வலிமை தர்றதாவும் அறியப்படுது.
- மேலும், இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டையும் கொண்டிருக்கு.
சமையல் பயன்பாடுகள்
- கேரளா பிரியாணி தயாரிப்புல அடிக்கடி பயன்படுத்தப்படுது, அதனோட சுவை அப்புறம் நறுமணம் எல்லாம் சேர்ந்து உணவோட ஒட்டுமொத்த சுவையையும் மேம்படுத்துது.
- பாரம்பரியமா செய்யப்படுற பால் பாயாசத்துல இத பயன்படுத்தலாம்.
- இட்லி மற்றும் தோசைகளுக்கும் இத நாம பயன்படுத்தலாம்.
- பொங்கல் தயாரிப்புல பயன்படுத்தப்படுது.
- இது நெய், கருப்பு மிளகு அப்புறம் சீரகம் எல்லாம் சேர்த்து அரிசி பருப்பு சாதம் செய்யவும் பயன்படுத்தப்படுது.
- புளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தேங்காய் சாதம் போன்ற கலவை சாத வகைகள செய்யவும் பயன்படுது.
மேலும், அரிசி பிலாஃப், முறுக்கு, அரிசி மாவு ஹல்வா, கீர், இடியாப்பம், அரிசி புட்டு போன்ற நிறைய உணவு வகைகள இந்த அரிசி கொண்டு சமைக்க முடியும்.
பிற பயன்பாடுகள்
- ராஜமுடி அரிசி பயிரிடப்படற பாலக்காடு மாவட்டம் உட்பட கேரளாவோட சில பகுதிகள்ல, குறிப்பிட்ட அரிசி வகைகள் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கு. அதனால பெரும்பாலும் பாரம்பரிய சடங்குகள்ல பயன்படுத்தப்படுது.
- தனித்துவமான இதனோட சிவப்பு-பழுப்பு நிறதுனால கலைப் படைப்புகள், ரங்கோலி வடிவமைப்புகள் அப்புறம் கைவினைத் பொருட்கள் அப்படீன்னு இதனோட தானியங்கள் பலவிதமா பயன்படுத்தப்படுது.
- ராஜமுடி அரிசியிலிருந்து பிரித்து எடுக்கப்படற அரிசி நீர், அதனோட பண்புகளுக்காக தோல் பராமரிப்புலையும் பயன்படுத்தப்படுது.
- ஆயுர்வேதத்தில, ராஜமுடி உள்ளிட்ட அரிசி வகைகள் அதனோட ஆரோக்கிய நலன்களுக்காக மருந்தாவும் பயன்படுது.
இந்த மாதிரி சமையல் அல்லாத பிற பயன்பாடுகளையும் ராஜமுடி அரிசி கொண்டு இருக்கு.
முடிவுரை
இந்த வலைப்பதிவுல நாம ராஜமுடி அரிசியோட பண்புகள பார்த்தோம். இத உங்களோட உணவுல சேர்த்து அதனோட ஆரோகிய நன்மைகள பெருங்க.
இயற்கையான முறைல விளைவிக்க பட்ட நல்ல தரமான ராஜமுடி அரிசிய நம்ம உயிர் இயற்கை உழவர் சந்தைல நீங்க வாங்கிக்கலாம்.
இந்த மாதிரி மற்ற பாரம்பரியமான அரிசி வகைகள், இயற்கையான முறைல வளர்க்கப்படுற பிற உணவு பொருட்கள் எல்லாமே நீங்க Uyir Organic Farmers Market ல வாங்கிக்கலாம்.