வரலாற்றில் ஒரு பார்வை
எள் விதைகள உலகின் மிகச்சிறந்த எண்ணெய் விதைகளில் ஒன்றாக கருதராங்க. நல்லெண்ணெய் அப்படினு நாம சொல்றது எள் தானியத்துல இருந்து எடுக்கப்படற எண்ணெய்.
எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களோட கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்). ஆனா எண்ணெய்ங்கற சொல் எல்லா நெய்களையும் குறிக்குற பொதுச் சொல் ஆகிவிட்டதனால, எள்ளின் நெய்யக் குறிக்க நல்லெண்ணெய்ங்கற சொல் பயன்பாட்டுக்கு வந்தது.
இது பொதுவா சமையலுக்குப் பயன்படுது. இத தென்னிந்தியாவுல அதிகமா சமையலுக்குப் பயன்படுத்தறாங்க. சீனர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் தங்களோட சமையல்ல நல்லெண்ணெய உபயோகிக்கறாங்க.
நல்லெண்ணெய் இந்திய மருத்துவ முறையைல பல பல பயன்பாடுகள கொண்டிருக்கு. இது எதிர் ஆக்சிகரணியா செயல்பட்டு இரத்த அழுத்தத்த கட்டுப்படுத்த பயன்படுது. இது பிடித்துவிடல், உருவுதல் போன்ற ஆயுர்வேத மருத்துவ முறைகளில அதிகமா பயன்படுது.
தயாரிக்கும் முறை
முதல்ல எள்ளை தூசி, பொட்டு, பொக்கு நீக்கி, வெயில்ல நல்லா காய வெச்சுக்கணும். அடுத்து இந்த எள்ளோட, தூய்மையான பனங்கருப்பட்டி சேர்த்து மர செக்குல ஆட்டி எடுத்தோம்னா நமக்கு நல்லெண்ணெய் கிடைக்கும்.
எள் இயல்பா சூட்டுத்தன்மை உடையது. எள்ளிலிருந்து கிடைக்கற எண்ணெய் குளிர்ச்சியானது. இந்த சூட்டுத்தன்மை மிக்க ஒரு மூலபொருள்ல இருந்து குளிர்ச்சித்தன்மையுடைய எண்ணெய உருவாக்குற ‘ரசவாதத்த’ பனங்கருப்பட்டிதான் நிகழ்த்துது.
மனித வாழ்க்கைல ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான உணவுகள்ல முக்கியமான ஒன்று எண்ணெய். தற்போது சந்தைல கிடைக்கற பாதி எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டது. தூய்மையான மரசெக்குல ஆட்டுன எண்ணெய் வேணும் அப்படினா நாம உயிர் உழவர்களால தூய்மையான முறைல செய்யப்பட்ட எண்ணெய்கள Uyir Organic Farmers Marketல வாங்கிக்கலாம்.
நல்லெண்ணெய் ஊட்டச்சத்துக்கள்
நல்லெண்ணெயில வைட்டமின் ஈ சத்து அதிகமா இருக்கறதால மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட்ஆ செயல்படுது. இது உடல்ல கொழுப்பு சத்த குறைச்சு உயர் ரத்த அழுத்தம் ஏற்படாம குறைக்குது.
நல்லெண்ணெயில உள்ள துத்தநாகம், எலும்புகள பலப்படுத்துது. நம்ம உடலுக்கு தேவையான தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புக்களையும் கொண்டிருக்கு.
எள் எண்ணெயின் நன்மைகள்
- எள்ளுல ‘செசமே’ மற்றும் ‘செசமோலின்’ அப்படீங்குற இரண்டு வகையான “லிக்னான்கள்” அல்லது எள் விதைகளில் காணப்படும் நன்மை பயக்கும் இழைகள் இருக்கு. இந்த லிக்னான்கள் கொலஸ்ட்ரால் அளவ குறைப்பதா அறிவியலாளர்கள் சொல்ராங்க.
- இந்த எண்ணெய் இரத்த அழுத்தத்த குறைப்பதில் உதவுது.
- சருமத்த ஆரோக்கியமாக வைச்சுக்கறதுக்கும் உதவுது.
- இது நம்ம வயிற்றுக்கு மென்மையாவும், உணவோட சுவைய அதிகரிக்கவும் செய்யுது.
- எள் எண்ணெய் வாய் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும்.
சமையல் பயன்பாடுகள்
- சமைக்கவும், இட்லி மற்றும் பருப்புப் பொடிகளுடன் கலந்து உண்ணவும் பயன்படுத்தலாம்.
- இது மாரினேட்ஸ், சாஸ்கள் மற்றும் வினிகிரெட்டுகள் ஆகியவற்றில முதன்மையான பொருளா இருக்கு.
- காய்கறிகள் மற்றும் இறைச்சிகள வறுக்க அதிக புகை புள்ளி கொண்ட எண்ணெய் இது.
- பருப்பு வகைகள் மற்றும் கறி போன்ற உணவுகளில் மசாலாப் பொருட்கள இந்த எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம்.
- ஆசிய மற்றும் மத்திய கிழக்கு உணவு வகைகள்ல சாலட் டிரஸ்ஸிங்கிற்கான அடிப்படை இந்த எண்ணெய் தான்.
- சுவைய அதிகரிக்கறதுக்காகவும் அரிசி ஒண்ணுமேல ஒன்னு ஒட்டாமல் இருக்கவும் சமைத்த அரிசியின் மேல் இத தெளிக்கலாம்.
- சுவையான டிப்பிங் சாஸ்களான சோயா சாஸ் மற்றும் பூண்டு சாஸோட கலக்கப்படுது.
- பாரம்பரிய இனிப்புகள செய்றதுக்கு சில கலாச்சாரங்கள்ல பயன்படுத்தப்படுத்து.
- உணவுகளுக்கு சுவை மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள் இரண்டையும் தருது.
பிற பயன்பாடுகள்
எள் சமைக்க மட்டும் இல்லாம பல விஷயங்கள்ல பயன்படுது.
- பொதுவா, வாய் கொப்பளிக்கவும் (Oil Pulling), எண்ணெய் குளியலுக்கும், விளக்கேற்றவும் பயன்படுத்தலாம்.
- எள் எண்ணெய் வெப்பம் மற்றும் இரசாயனங்களுக்கு அதிக எதிர்ப்ப கொண்டிருக்கறதால தொழில்துறை லூப்ரிகண்டுகளுக்கு (Lubricants) அடிப்படையாகப் பயன்படுத்தப்படுது.
- சோப்புகள், லோஷன்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள்ல எள் எண்ணெய் ஒரு பொதுவான மூலப்பொருளா இருக்கு. ஏன்னா இதுல ஈரப்பதம் மற்றும் மென்மையாக்கும் தன்மை இருக்கு.
- எள் எண்ணெய பயோடீசலாக மாற்றலாம்.
- எள் எண்ணெய் சில சமயங்கள்ல மரத்த ஈரப்பதம் மற்றும் பூச்சிகளிலிருந்து பாதுகாக்க இயற்கை மரப் பாதுகாப்புப் பொருளா பயன்படுத்தப்படுது.
- துணிகள மென்மையாக்குறதுக்கும் கண்டிஷனிங் செய்றதுக்கும் ஜவுளித் தொழில்ல எள் எண்ணெய பயன்படுத்துவாங்க.
- அதன் ஊட்டமளிக்குற மற்றும் கண்டிஷனிங் பண்புகளுக்காக ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் உட்பட முடி பராமரிப்பு பொருள்கள்ல பயன்படுத்தப்படுது.
- மசாஜ் செய்வதற்காக பயன்படுத்தும் எண்ணைகள்ல அடிப்படை எண்ணெயா பிரபலமானது இது.
- எள் எண்ணெய் வண்ணப்பூச்சுகள் மற்றும் வார்னிஷ்கள் உருவாக்குறதுக்கும் பயன்படுது. இதுதான் அதோட நீடித்த தன்மைக்கும், பூச்சுக்கும் காரணமா இருக்கு.
- எள் எண்ணெய்கு பூச்சி விரட்டும் பண்புகள் கூட இருக்கு அதனால இயற்கையான பூச்சி விரட்டி கலவைகள் செய்றதுக்கு பயன்படுத்தப்படலாம்.
முடிவுரை
இந்த வலை பதிவுல நல்லெண்ணெயின் பல்வேறு நன்மைகளையும் பயன்பாடுகளையும் பார்த்தோம். இத தினசரி வாழ்க்கைல பயன்படுத்தி அதனோட ஆரோகிய நன்மைகள பெற்று மகிழலாம். எள்ளு மற்றும் நல்லெண்ணெய் மட்டுமில்லாம மேலும் பிற இயற்கை முறையில விளைவிக்கப்பட்ட தரமான உணவு பொருட்களையும் நீங்க Uyir Organic Farmers Marketல வாங்கிக்கலாம்.