காலிஃபிளவர் பழங்காலத்தில் இருந்து மக்களால் பயன்படுத்தப்படும் காய்கறி. பல்வேறு நாடுகளில் பெரிதும் அறியப்பட்ட இக் காய்கறி முகலாயர்களால் இந்தியாவை வந்தடைந்தது.
காலிஃபிளவரில் உள்ள சத்துக்கள் முழுவதும் கிடைக்க வேண்டும் எனில் அதனை மிகக் குறைந்த நேரமே நாம் சமைக்க வேண்டும் என்பது சமையல் வல்லுனர்களின் கருத்து. காலிஃபிளவர் பற்றிய தகவல்களை இவ் வலைப்பதிவில் காணலாம்.
சமையல் பயன்பாடுகள்
காலிஃபிளவர் கொண்டு வறுவல், குழம்பு, கிரேவி, பொரியல், மஞ்சூரியன், உருளைக்கிழங்கு கிரேவி, காலிஃபிளவர் 65 மற்றும் வடை என பல்வேறு சுவையான வகை வகையான உணவுகளைச் சமைத்து மகிழலாம்.
பயன்படுத்தும் முறை!
இதனை பச்சையாகவோ, ஊற வைத்தோ, சமைத்தோ அல்லது ஊறுகாய் போல பதப்படுத்தியோ உட்கொள்ளலாம். காலிஃபிளவரை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து நன்று கழுவ வேண்டும். பிறகு அதனை சுடு நீரில் 5 நிமிடங்கள் சமைத்து அணைத்து உணவுகளிலும் பயன்படுத்தலாம்.
ஊட்டச்சத்துக்கள்!
இது ஒரு ஊட்டச்சத்துக்களின் மையமாகும். குறைந்த கலோரிகள் கொண்ட காலிஃபிளவரில், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளது.
மேலும் இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்களையும் கொண்டுள்ளது.
மருத்துவ குணங்கள்!
- கருவில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் முதுகு தண்டுவட வளர்ச்சிக்கும் இதன் சத்துக்கள் பெரும் பங்காற்றுகிறது.
- இது புற்று நோயினை தடுக்கும் தன்மையினையும் கொண்டுள்ளது.
- மூட்டு வலியினை குறைப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது.
- இரத்தத்தில் கொழுப்பு சேர்வதைத் தடுத்து இதய ஆரோக்கியதை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
முடிவுரை
நமது உடல் முழுவதும் இத்தனை நன்மைகளை கொண்டுசேர்க்கும் காலிஃபிளவரை அனைவரும் உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.