வரலாற்றில் ஒரு பார்வை
நாகப்பட்டினம் மாவட்டத்துல இருக்க, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்த சேர்ந்த உம்பளச்சேரி ஊராட்சியோட பெயர கொண்டு இந்த வகை மாடுகள் உம்பளச்சேரி மாடுகள் அப்படீன்னு அழைக்கப்படுது.
நாகை, திருவாரூர் மாவட்ட சதுப்பு நிலப் பகுதியில இருக்க உப்பன் அருகு அப்படீன்னு அழைக்கப்படுற உப்புச்சத்து நிறைந்த புல் வகைகள மேய்ந்து இனவிருத்தி செய்ததால உப்பளச்சேரி மருவி உம்பளச்சேரி அப்படீன்னு பெயர் பெற்றது.
இந்த இனம் காங்கயம் காளை போன்ற குணங்கள கொண்டிருக்கு. மேலும், திருவாரூர் டெல்டா பகுதியில உழவுக்கு பயன்படுத்தப்படுது.
உருவ அமைப்பு
கன்றுகள் பிறக்கும் போது சிவப்பு நிறத்துல இருக்கும் அப்புறம் 6 மாதங்கள் கழித்து சாம்பல் நிறமா மாறும்.
இவை பிற காளைகள விட குட்டையானவை அப்படீனாலும், இதன் கால்கள் நல்ல உறுதியானவை, ஆழமான சேற்றில இறங்கி நன்கு உழக்கூடியவை.
இந்த காளையோட நடு நெற்றியில வெள்ளையா பொட்டு மாதிரியே நல்ல அழகான ஒரு வடிவம் இருக்கும். நான்கு கால்களும் அப்புறம் வாலும் வெள்ளையா இருக்கும். கால் குழம்பும் பிற மாடுகள்ட்ட இருந்து வித்தியாசப்படுது.
இந்த இனக் காளைகள் குறைந்த உணவு சாப்பிட்டுட்டு ஆறுல இருந்து சுமார் ஏழு மணி நேரம் வரை உழவு செய்யும் ஆற்றல் கொண்டது.
அதுமட்டுமில்லாம, 2500 கிலோ கொண்ட பாரத்த கூட சுமார் 20 கிமீ தூரம் வரை எளிதா இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது.
உம்பளச்சேரி பசுவின் பால்
இந்த இனப் பசுக்கள்ட்ட இருந்து குறைந்த அளவே பால் கறக்க முடியும். அதாவது சுமாரா 2.5 லிட்டர் வரை நமக்கு கிடைக்கும்.
ஆனாலும் இதனோட பால் நல்ல கெட்டித்தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியும் நம்ம உடம்புக்கு தரக் கூடியது.
“முத்துமுத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளச்சேரி மோருக்கு சோறு கிடைக்காது”
அப்படீன்னு காளமேகப்புலவர் பாடல் வரிகள் மூலமா உம்பளச்சேரியின் பெருமைய அங்கீகரிச்சுருக்காரு.
நாட்டுப் பசு நெய்
மேலும், நாட்டுப் பசு நெய் நம்ம உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது. பசு நெய்யில கரோட்டின் வைட்டமின் ஏ இருக்கறதால, கண் மற்றும் மூளையோட செயல்பாட்டுக்கு நல்லது. இது செரிமானத்துக்கும் உதவுது. மேலும் இந்த நெய் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு அப்புறம் ஆக்ஸிஜனேற்ற பண்புகள கொண்டிருக்கு. நீங்க உயிர் இயற்கை உழவர் சந்தையில (Uyir Organic Farmer’s Market) நல்ல சுவை, தரம் மற்றும் ஆரோக்கியமான நாட்டுப் பசு நெய் வாங்கிக்கலாம்.
உம்பளச்சேரி மற்ற பெயர்கள்
இந்த இனக் காளைகள தெற்கத்தி மாடு, மோழை மாடு, மொட்டை மாடு, தஞ்சாவூர் மாடு அப்படீனும், பசுக்கள ஆட்டுக்காரி மாடு, வெண்ணாமாடு, சூரியங்காட்டுமாடு, கணபதியான்மாடு அப்படீனும் காரணப் பெயர்களால அழைக்கறாங்க.
உம்பளச்சேரி பாதுகாப்பு நடவடிக்கைகள்
உள்ளூர் நாட்டு மாட்டு இனங்கள் அழிஞ்சுட்டு வர்ரதுனால இந்த உம்பளச்சேரி மாட்டினத்த பாதுகாக்கணும் அப்படீங்குற நோக்கத்துல தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்புல திருவாரூர் மாவட்டம், கொருக்கையில மாவட்ட கால்நடை பண்ணை நடத்தப்பட்டுவருது.
ஜல்லிக்கட்டு
இந்த காளைகள் எல்லாம் விவசாயத்துக்கு மட்டும் இல்லாம ஜல்லிக்கட்டுலையும் பயன்படுத்தப்பட்டுட்டு வருது. உம்பளச்சேரி மாடுகள தேர்ந்தெடுத்து நல்ல காளைய பழக்கப்படுத்தினா அது சொன்னபடி கேட்டு நடக்கும்.
மேலும், நல்ல பழக்கப்படுத்தப்பட்ட காளைய அடக்குறதும் ரொம்ப கஷ்டம் அதனால ஜல்லிக்கட்டுல உங்களுக்கு பரிசுகள அள்ளி தர்றதுக்கும் நல்ல வாய்ப்பு இருக்கு.
இந்த காளையோட முக அமைப்ப தவிர மற்றபடி உடல் அமைப்பு காங்கேயம் காளை போல இருக்கறத நம்மளால பாக்க முடியும். ஆனா உருவத்துல கொஞ்சம் சிறிது.
முடிவுரை
நாட்டு மாடுகள நாம வெறும் கால்நடையா மட்டும் பார்க்க கூடாது; ஏன்னா இவை இந்தியாவோட கலாச்சாரம் மற்றும் பரம்பரியத்தோட அடையாச்சின்னமா இருக்கு.
நாட்டு மாடுகள பயன்படுத்தறது, அவற்றோட பால தேர்ந்தெடுத்து குடிப்பது நம்மளோட உடல் ஆரோக்கியம், நம்ம நாட்டோட பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வுக்கு பங்களிக்குது.
இதுல முக்கியமான ஒரு இனமான உம்பளச்சேரி மாடுகள பத்தி நாம இந்த வலைப்பதிவுல தெளிவா பாத்தோம்.
இந்த இனங்கள் அழியாம பாத்துக்கறதும் நம்மளோட கடமை தான். எனவே மாடு வளர்க்க ஆசை படறவங்க நம்ம நாட்டு மாட்டு இனங்கள தேர்ந்தெடுத்து வளருங்க.