மண்புழு!

மண்புழு!

மண்புழுக்கள மழைப்புழுனும் கூப்பிடுவாங்க. இத சித்த மருத்துவத்துல பூமி வேர், நாங்கூழ் புழுனு சொல்லுவாங்க. அதுல பல வகை உண்டு. இந்த கட்டுரைல மண்புழு நன்மைகள் பத்தி எல்லா விஷயங்களையும் பாக்கலாம்.

உழவர்களோட நண்பன் அப்படின்னு இத புகழ்ந்து சொல்லுவாங்க. ஏன்னா இது தாவரத்தோட கழிவுகள சாப்பிட்டு அதனால அதனுடைய உடம்புல இருந்து வர்ற செரிமான கழிவால மண்ண நல்லா வளப்படுத்துது.

இதுங்களோட வயிற்றில ஏற்படுற மண் சுளர்ச்சியாள மண் மேலும் மேலும் மிருதுவா ஆகுது. மிருதுவான மண்ணுல காற்றோட்டமு நீரும் அதிகமா தங்கும், அது தாவரத்தோட வேருக்கான தேவைகள பூர்த்தி செய்து.

நம்ம வயல்கள்ல இதுனோட எண்ணிக்க அதிகமா இருந்துச்சுன்னா மண் வளத்த அதிகரிக்கச் செஞ்சு செடிகள் செழிப்பா வளர உதவி செய்து.

உடற்கூறியல்

மண்புழுவோட வழக்கமான நீளம் சுமார் 10 மில்லி மீட்டர்ல இருந்து 3 மீட்டர் வரை இருக்கும். தோராயமா சொன்னா ஒரு 25 மில்லி மீட்டர் இருக்கும்.

ஒரு விசித்திரமான விஷயம் என்னன்னா மண்புழு தன்னோட தோல்ல தான் சுவாசிக்கும்; நம்ம கண்களுக்கு தெரியாத அளவுக்கு நல்ல மில்லியன் துலைகள் அதனோட உடம்பு முழுக்க இருக்கும்.

மண்புழுக்கள் ஹெர்மாஃப்ரோடைட்டுகள் வகைய சேர்ந்தது; அதாவது ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் எல்லா ஒரே உடம்புல இருக்கும்.

ஆனாலும் அது இனச்சேர்க்கையும் செய்யும். அப்படி செய்யும் போது இரண்டு மண்புழுக்கள் அதனோட விந்தணுக்கள பரிமாறி  முட்டைகள உரமாக்கிடும்.

அதனோட உடம்புல வெளிப்புறத்தில் பார்த்தோம்னா, ஒரு மெல்லிய அடுக்குமாறி இருக்கும் இது மண்புழுவோட தோலை ஈரமா வச்சுக்கும், மண்ணுக்குள்ள எளிதா புதயரதுக்கு உதவி செய்யும்.

மண் புழு வகைகள்

நமக்கு தெரிஞ்சு மண்புழுனா ஒன்னு தான இருக்கு அப்படின்னு நினைப்போம். ஆனா இந்த உலகத்தில் 3000 வகைகளுக்கு மேல மண்புழு வகைகள கண்டுபிடிச்சிருக்காங்க. இந்தியாவுல மட்டும் 384 வகை இருக்கு. இதுல 6 வகையான மண்புழுக்கள் உரம் தயாரிக்க உகந்ததுனு சொல்ராங்க.

முக்கிய பயன்பாடுகள் மற்றும் மண்புழு நன்மைகள்

மண்புழு உரம்

மண்புழு நன்மைகள்

மண்புழு உரத்துக்கு (Vermicompost) திடக்கழிவு மேலாண்மைல முக்கிய பங்கு இருக்கு. இயற்கையா கிடைக்கிற விவசாயத்தில இருந்து வர்ற கழிவு பொருட்கள அதாவது சாணம், இலை, தழை இந்த மாதிரி விஷயங்கள் எல்லாத்தையும் சாப்பிட்டு தன்னுடைய எச்சமா சிறு சிறு உருண்டையா மண்புழு வெளியேற்றும். இதுதான் நம்ம மண்புழு உரம் அப்படின்னு சொல்றோம். 45 லிருந்து 60 நாள்ல மண்புழு உரம் உற்பத்தி ஆயிடும்.

மண்புழு நன்மைகள்

மண்புழு உரம் உற்பத்தி முறை

  • இடவசதி இருகரதுக்கு தகுந்த மாதிரி ஒரு மீட்டருக்கு மேல போகாம, அரை அடி ஆழத்துக்கு குழி வெட்டி, சுற்றுச்சுவர அமைச்சுக்கனும்.
  • முதல்ல தொட்டி அடில செங்கல் அல்லது கூழாங்கற்கள பரப்பனும்.
  • அதுக்கு மேல மணல பரப்பி பண்ணை கழிவ‌ நெரப்பனும்.
  • அந்த குழில தென்னைநார் கழிவ கொட்டி, அதுக்கு மேல கரும்பு கூழ் கழிவ தூவனும்.
  • அதுக்கு அப்புறம் நல்லா காஞ்ச எரு பொடிய பரப்பி, ஈரமான சாணத்த அதுமேல கொட்டி அதுல மண்புழுக்கள விடனும். அந்த சாணத்த உணவா எடுத்துக்கிட்டு மண் புழு வெளியேற்றுற கழிவு தான் நமக்கு உரமா கிடைக்குது.
  • நம்ம வயல்ல, பண்ணைல சேர்ர கழிவுகள, அடுத்தடுத்த தொட்டிகள்ள நிரப்பி நாம உரமா பயன்படுத்திக்கலாம்.
  • இந்த உரத்தோட பயன் கருதி தமிழக வேளாண் துறை மூலமாவும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மூலமாவும் அரசாங்கம் மக்களுக்கு பயிற்சி குடுத்துட்டு வர்றாங்க‌.

மண்புழு உரத்தில் உள்ள சத்துக்கள்!

மண்புழு நன்மைகள்

மண்புழு உரத்துல தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மாதிரி எல்லாமே இருக்கு. அது மட்டும் இல்லாம மேலும் இரும்பு, கார்பன், துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனிசு, சத்துக்களு ஊட்டச்சத்து பி மற்றும் சைட்டோகைனின் போன்ற பயிர்கள ஊக்கப்படுத்துற பொருட்களும் உள்ளடங்கி இருக்கு.

முடிவுரை

இந்த வலை பதிவுல மண்புழு நன்மைகள் பற்றி பாத்தோம். அவை உலகத்துக்கு ஒரு இன்றியமையாத உயிரினமா இருக்கு.

செயற்கையான உரங்களுக்கு பதிலா மண்புழு உரத்த பயன்படுத்தி இயற்கையான முறைல உணவு பொருட்கள விளைவிச்சு எல்லாரும் ஆரோகியமான வாழ்கை வாழலாம்.

உங்க பயிர்களுக்கான தரமான முறையில உருவாக்கப்பட்ட மண்புழு உரம் உங்களுக்கு வேணும் அப்படின்னா நீங்க Uyir Organic Farmers Marketல வாங்கிக்கலாம்.