நாட்டுச்சர்க்கரை

நாட்டுச்சர்க்கரை!

நாட்டுச்சர்க்கரை அப்படிங்கறது கரும்பு சாற்றில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரை. ஆங்கிலத்தில organic country sugar அல்லது Jaggery powder அப்படின்னு சொல்லுவாங்க.

நாட்டு சர்க்கரை எந்த ஒரு செயற்கையான இரசாயனங்களும் இல்லாம பாதுகாப்பான முறையில கரும்பு சாற்றை மட்டும் பயன்படுத்தி செய்யப்படுது‌. இந்த நாட்டு சர்க்கரைலயும் தற்காலத்துல நிறைய கலப்படங்கள் பண்றாங்க.

எனவே, நீங்க தூய்மையான சிறந்த இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட நாட்டு சர்க்கரை வாங்கணும் அப்படின்னா Uyir organic farmers market ல வாங்கலாம்.

நாட்டுச்சக்கரை தயாரிப்பு முறை

கரும்ப காட்டுல இருந்து வெட்டிட்டு வந்து அத கிரஷரில் போட்டு கிரஷ் பண்ணி சாறு எடுத்துக்கணும். அப்புறம் அந்த சாற்ற ஒரு கொப்பரைல ஊத்தி குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு நல்லா கொதிக்க விடணும்.

இந்த சமயத்துல நாட்டு சர்க்கரையிலிருந்து அழுக்கு எடுக்கணும். அழுக்கு எடுக்குறதுக்கு வெண்டைக்காய் தல இல்லன்னா சோடா உப்பு பயன்படுத்துவாங்க.

மேலும், அந்த தூள் போன்ற பதம் வருவதற்காக தேங்காய் எண்ணெய், சுண்ணாம்பு போன்றவற்றையும் சில சமயங்களில் சேர்ப்பாங்க.

இதுக்கப்புறம் இத ஒரு ட்ரேல எடுத்து ஊற்றி நல்லா ஆறவிட்டு உருண்டையா வேணும் அப்படின்னா உருண்டை பிடிப்பாங்க; அப்படி இல்லன்னா தூளா இருக்குற சர்க்கரையை அப்படியே வைப்பாங்க.

இந்த மாதிரி இயற்கையான முறையில் தயாரிக்கிற நாட்டு சர்க்கரை ஒரு நல்ல பழுப்பு நிறத்தில் இருக்கும். கொஞ்சம் ஒட்டும் தன்மையோடவும் இருக்கும். இந்த சர்க்கரையை அதுல வர்ற நல்ல மனத்துக்காகவும் சுவைக்குமாகவே நிறைய பேர் விரும்பி வாங்குறாங்க.

ஊட்டச்சத்துக்கள்!

நாட்டு சக்கரையில் மிகக் குறைந்த அளவை கலோரி இருக்கு. கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க், செலினியம், இரும்புச்சத்து அப்படின்னு பல வகையான சத்துக்கள் கொண்டது நாட்டுச்சக்கரை.

முற்றிலும் இயற்கையான முறையில கரும்புச்சாற்றில் இருந்து செய்யப்படுவதால எந்த வேதிப்பொருட்களும் இல்லாம இயற்கையாகவே அதிக ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இதுல இருக்கு.  அதனால இது உடலுக்கு பல வகையான நன்மைகள் தரக்கூடியது.

வெள்ளை சர்க்கரைக்கு மாற்றா நாட்டுச்சர்க்கரை?

வெள்ளை சர்க்கரையை எடுத்துக்கிட்டோம்னா அதனோட ஜிஐ அதாவது கிளைசெமிக் இன்டெக்ஸ் 58 ல இருந்து 84 வரைக்கும் இருக்கு; அது என்ன பண்ணும் அப்படின்னா உடல்ல இன்சுலின் சுரப்ப பாதிச்சு ரத்த சர்க்கரை அளவ உடனடியாக அதிகப்படுத்தும்.

இதே நாட்டு சர்க்கரையோட கிளைசெமிக் இன்டெக்ஸ் 50ல இருந்து 54 வரைக்கும் தான் இருக்கு. அதனால ரத்தத்தில் சர்க்கரை அளவு ரொம்ப மெதுவா தான் அதிகரிக்கும்.

இதுல கலோரியோட அளவு ரொம்ப கம்மியா இருக்கிறதால உடல் பருமனையும் தடுக்குது. டைப் 2 நீரிழிவு நோயையும் இது கட்டுக்குள்ள வச்சுக்குது.

இதுதான் மக்கள் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலா நாட்டு சக்கரை பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம்‌.

நாட்டுச்சர்க்கரையின் நன்மைகள்

  • நம்ம உடம்புல ஓடுற ரத்தத்துல நம்ம சாப்பிடற தீங்கான பொருட்களால, பல வகையான ரசாயனங்கள் அழுக்குகள் வந்து சேரும்‌. நாட்டு சர்க்கரைய நம்ம உண்ணும் போது இந்த மாதிரி ரத்தத்தில் கலந்து இருக்கிற அழுக்குகள அது நீக்கிடும்.
  • உடம்புல தேவையில்லாத கொழுப்பு சேருவதையும் இது தடுக்குது. அதனால, இதயம் சம்பந்தமான எந்த நோய்களும் நமக்கு ஏற்படாம பாத்துக்கும்.
  • பொதுவா வெள்ளை சர்க்கரை சாப்பிடறவங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகம். ஆனா, அதே நாட்டு சர்க்கரை சாப்பிட்டா குடலுக்கு நல்ல வலு ஏற்பட்டு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராம இருக்கும்.
  • நாட்டு சர்க்கரையில் நோய் எதிர்ப்பு சக்தியும் இயற்கையாகவே இருக்கு. இத நம்ம தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நம் உடலுக்கு வலுவூட்டி வேற எந்த கிருமி தொற்றும் ஏற்படாம தடுத்து நம்ம பத்திரமா பாத்துக்கும்.
  • கரும்பு சாறும் நாட்டு சர்க்கரையும் அதிக அளவு பயன்படுத்துற மக்களுக்கு புற்றுநோய் வர அபாயம் கூட குறையுது அப்படின்னு சில ஆய்வுகள் சொல்லுது.

நாட்டுச்சர்க்கரை சமையல் பயன்பாடுகள்

நம்ம வெள்ளை சர்க்கரை பயன்படுத்துற அனைத்து உணவுப் பொருட்களுக்குமே அதுக்கு பதிலா நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டுக்கு சொல்லணும் அப்படின்னா எல்லா வகையான பழச்சாறுகள், டீ, காபி, பல வகையான இனிப்பு மற்றும் கேக்  பண்றதுக்கு கூட நாம நாட்டு சர்க்கரைய பயன்படுத்தலாம்.

முடிவுரை

பல பேர் இனிப்புகளை வெள்ளை சர்க்கரை பயன்படுத்துறதுனால சாப்பிடாம தவிர்த்திடுறாங்க. வாழ்க்கையில் கிடைக்கிற சின்ன சின்ன மகிழ்ச்சிகள இழந்துட்டு‌ இருக்காங்க.

ஆனா நம்ம நாட்டு சர்க்கரை பயன்படுத்தி சமைக்கிற எல்லா உணவுகளையுமே மகிழ்ச்சியா சாப்பிடலாம். அதனால எந்த நோயும் நம்மளுக்கு வராது. உடலுக்கும் நன்மை தரும்.

இந்த வலைப்பதிவு மூலம் நீங்க நாட்டுச்சர்க்கரையோட நன்மைகளை தெரிஞ்சுருப்பீங்க. ஆரோகியாம வாழ்க்கைக்கு சிறந்த உணவ தேர்வு செஞ்சு பயன்படுத்துங்க.