தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தேங்காய பிழிஞ்சு எடுக்கப்படற எண்ணெய். இத சமையலுக்கு பயன்படுத்திக்கலாம். ஆசியா மற்றும் தென் பசிபிக் பகுதிகளில் இருக்கிற 18 நாடுகளில் இருந்து மட்டுமே உலகத்துக்கு தேவையான 90 சதவீதம் தேங்காய் மற்றும் எண்ணெய் பெறப்படுது.

இந்த எண்ணெயை சமைக்கறதுக்கும், சருமத்து மேல தடவிக்கிறதுக்கும் பயன்படுத்தலாம். கேரள மாநிலத்தில் தான் தேங்காய் எண்ணெய் அதிக அளவில் உணவுல பயன்படுத்துறாங்க.

தயாரிக்கும் முறை

தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய இரண்டு வகையா பிரிச்சு எடுக்கலாம் ஒன்று உலர் தேங்காயிலிருந்து பிரிக்கும் முறை இன்னொன்று ஈரமான தேங்காயிலிருந்து பிரித்தெடுக்கும் முறை.

காய்ந்த தேங்காயிலிருந்து எண்ணெய் எடுக்கும் முறை

தேங்காய 15 நாட்களுக்கு மேல வெயில்ல காய வைக்கணும். இந்த மாதிரி காய்ந்த பருப்புகள மரச் செக்கின்  உதவியோட பிழிஞ்சு அதுல இருக்குற எண்ணைய எடுக்கணும். நமக்கு தேங்காய் புண்ணாக்கும் எண்ணையும் கிடைக்கும். தேங்காய் புண்ணாக்குல அதிக அளவு புரதமும், நார்ச்சத்தும் இருக்கு.

இது மனிதர்களால எளிதா ஜீரணிக்க முடியாது. அதனால ஆடு, மாடுகளுக்கு தீவனமா குடுப்பாங்க. அது வீட்டு விலங்குகள ஆரோகியமா பார்த்துக்கும்.

ஈரத்தேங்காயிலிருந்து எண்ணெய் எடுக்கும் முறை

தேங்காய் எண்ணெய்

இந்த முறையில காய்ந்த தேங்காய்க்கு பதிலா ஈரத் தேங்காய பயன்படுத்துவாங்க. ஈரத் தேங்காய நல்லா துருவியோ, துண்டுகளா வெட்டியோ அரைச்சு பால எடுத்துக்குவாங்க. நமக்கு தேங்காயில் இருக்கிற புரதம், எண்ணெய், தண்ணீர் எல்லாம் கலந்த ஒரு திரவமா கிடைக்கும்.

இந்த திரவத்திலிருந்து தான் எண்ணெய் தயாரிப்பாங்க. இத ரொம்ப நேரம் சூடாக்கி எண்ணைய பிரிச்சு எடுக்கணும். இந்த முறை காய்ந்த தேங்காயிலிருந்து எடுக்கிற முறைய விட ரொம்ப கடினமானது. நம்ம உயிர் விவசாயிங்க தயாரிக்கிறது மிக சிறப்பா இருக்குனு நிறைய வாடிக்கையாளர்கள் சொல்றாங்க.

ஊட்டச்சத்துக்கள்

தேங்காய் எண்ணெயில கலவையா ஊட்டச்சத்துக்கூறுகள் நிறைய இருக்கு. ஆற்றல், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், இரும்பு போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கு.

தேங்காய் எண்ணெய் சமையல் பயன்பாடுகள்

தமிழ்நாட்டு உணவுல முதன்மையானதுனு கூட சொல்லலாம். பல்வேறு உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையும் நறுமணத்தையும் இது சேர்க்குது.

தேங்காய் எண்ணெயில செய்யக்கூடிய சில பொதுவான பிரபலமான சமையல் பயன்பாடுகள இப்போ பார்க்கலாம்.

  • காய்கறி அப்புறம் இறைச்சிகள சமைக்குறதுக்கு தேங்காய் எண்ணெய் மிகச் சுவையாக இருக்கும்.
  • தேங்காய் எண்ணெய பொதுவா தேங்காய் சட்னிகள் செய்றதுக்கு பயன்படுத்தலாம். இது தோசை, இட்லி, உப்புமா, சேமியா போன்ற பல உணவு பொருள்களுக்கு தொட்டு சாப்பிட பயன்படுது. இந்த சட்னில துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் அடங்கும்.
  • தேங்காய் பர்ஃபி, தேங்காய் பால், இனிப்புகள் மற்றும் அச்சு முறுக்கு (ஒரு வகை வறுத்த சிற்றுண்டி) போன்ற பல்வேறு பாரம்பரிய இனிப்புகள செய்றதுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுது.
  • தமிழ்நாட்டுல சில பகுதிகள்ல தேங்காய் எண்ணெய சுவைக்காக அரிசி கஞ்சியில சேர்த்துப்பாங்க.
  • பொரியல் போன்ற உணவுல காய்கறிகள கிளறி வறுக்கவும் தேங்காய் எண்ணெய் அடிக்கடி பயன்படுத்தப்படுது. இந்த தயாரிப்பு முறை காய்கறிகளின் இயற்கையான சுவையைத் தக்கவைக்க உதவுது.
  • பண்டிகை மற்றும் விசேஷ சமயங்கள்ல செய்யற முறுக்கு, வாழைப்பழ சிப்ஸ் மற்றும் சீடை போன்ற தின்பண்டங்கள் இந்த எண்ணைல செய்யலாம்.
  • தேங்காய் சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் போன்ற பாரம்பரிய அரிசி உணவுகள தயாரிப்பதில தேங்காய் எண்ணெய் சில சமயத்துல பயன்படுத்தப்படுது.

இந்த மாதிரி பல வகையா சமையலுக்கு தேங்காய் எண்ணெய பயன்படுத்தலாம்.

சமையல் அல்லாத பிற பயன்பாடுகள்

தேங்காய் எண்ணெய்
  • நம்ம உயிர் விவசாயிங்க தேங்காய் எண்ணையில் இருந்து குளியல் சோப்பு கூட தயாரிக்கறாங்க.
  • தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர். இது நம்மளோட சருமத்த ஈரப்பதம் குறையாம பாத்துக்கும் மேலும் ஊட்டமளிக்கவும் செய்யும். வறண்ட சருமம் உள்ளவங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதா இருக்கும்.
  • தேங்காய் எண்ணெய நம்மளோட கூந்தல் கண்டிஷனராகப் பளபளப்ப அதிகரிக்கவும், உதிர்வத குறைக்கவும் பயன்படுத்தலாம்.
  • முடி ஆரோக்கியத்த மேம்படுத்த உச்சந்தலையில தேங்கெண்ணெய்ய மசாஜ் செய்யலாம்.
  • தேங்காய் எண்ணெய் மென்மையான ஒப்பனை நீக்கியாகவும் இருக்கும். இது பிடிவாதமான மேக்கப்ப கூட எளிதா துடைத்து எடுக்க உதவும்.
  • அதன் ஈரப்பதமூட்டும் தன்மையால, தேங்காய் எண்ணெய உதட்டுல தடவினா, உதடு வெடிப்பு ஏற்படாம தடுத்து, ஈரப்பதத்தோட வெச்சுக்கும்.
  • விரல் நகங்கள் மேல தேங்காய் எண்ணெய தேய்ப்பது அவற்ற மென்மையாவும் ஈரப்பதமாவும் வெச்சுக்கும்.
  • இதனோட நல்ல வாசனை மற்றும் மென்மை தன்மைக்காக, மசாஜ் எண்ணையாவும் பயன்படுத்தலாம்.
  • தேங்காய் எண்ணையோட கொஞ்சமா எலுமிச்சை சாறு கலந்து மரச்சாமான்களுக்கு இயற்கையான மர பாலிஷ் கூட உருவாக்கலாம்.
  • வீட்டுலயே தயாரிக்கிற மெழுகுவர்த்திகள்ள தேங்காய் எண்ணெய ஒரு மூலப்பொருளா பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெயில இந்த மாதிரி பல பயன்பாடுகள் இருக்கு.

தேங்காய் எண்ணெய் நன்மைகள்

தேங்காய் எண்ணெய்

இந்த எண்ணெயோட நன்மைகள் ஒன்னு ரெண்டு கிடையாது பல இருக்கு.

  • தேங்காய் எண்ணெய லேசா சூடு படுத்தி வாய் கொப்பளிச்சிட்டு வந்தோம்னா வாயில துர்நாற்றம் நீங்கும். பற்களில் ஏற்படற ஓட்டைகள், ஈறுகளில் ஏற்படுகின்ற நோய்கள் போன்ற எல்லாத்தையுமே இது தடுக்கும். வாயில வளர பாக்டீரியாவையும் அகற்றிடும்.
  • ஹார்மோன்கள் தான் உடல் எடை ரொம்ப அதிகமாகறதுக்கு முக்கியமான காரணம்; இத சமநிலையில் வைத்து நம் உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கும்.
  • தேங்காய் எண்ணெய்க்கு பாக்டீரியா எதிர்க்கும் சக்தி மட்டும் இல்லாம ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் இருக்கு. அது என்ன செய்யும் அப்படின்னா சரும ஆரோக்கியத்தை மீட்டு எடுக்க உதவும், சேதமடைந்த சருமத்தை குணப்படுத்தும் மேலும் புண்களால ஏற்படும் வடுக்களையும் தடுக்கும். அரிக்கும் தோல் அலர்ஜி அதாவது சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள்; இந்த மாதிரி பல வகையான நோய்கள குணப்படுத்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
  • இதில் இருக்கிற லாரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்கிது.
  • சிறுநீர் பாதையில் ஏற்படுகிற நோய்த்தொற்றுகள் குணமடைய உதவி செய்து.
  • இரத்த சர்க்கரை அளவ கட்டுப்படுத்தி நீரிழிவு பிரச்சினைகளிலிருந்து நம்மை காப்பாற்றுது.‌

தேங்காய் எண்ணெயின் பலன்கள்

இத வைத்து செய்யப்படற தைலங்கள் பல வகையான நோய குணப்படுத்துது. ரொம்ப நாளா தீராத புண்ணு மேல நாம இதை மருந்தா தேய்க்கும் போது தோல் நோய்கள், வாத வலிகள் எல்லாத்தையும் குணப்படுத்துது. மத்தம் தைலம், கரப்பான் தைலம், கற்பூராதி தைலம், நீலபிரிங்காதித் தைலம், வெப்பாலைத் தைலம், பொடுதலைத் தைலம் மாதிரி பல வகையான தைலங்கல்ல தேங்காய் எண்ணெயோட பங்கு முக்கியமானது.

தேங்காய் எண்ணெய் மிக எளிதா ஜீரணம் ஆயிடும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லா சத்துமே தேங்காய் பாலில் இருக்கு. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து நம்ம குடிச்சோம் அப்படின்னா வறட்டு இருமல் கட்டுப்படும்.

முடிவுரை

தினமும் தேங்காய் எண்ணைய சிறிதளவு உண்டு வர்ரது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள கொடுக்கும்.

இத உணர்ந்து எல்லாருமே தேங்காய சரியான முறையில பயன்படுத்தி அதனோட அனைத்து பயன்களையும் பெற்று மகிழ வேண்டும். இயற்கையான முறைல விளைவிக்கப்பட்ட தேங்காய் மற்றும் எண்ணெய் மேலும் அது சம்பத்தப்பட்ட பிற பொருட்களையும் நீங்க Uyir Organic Farmers Marketல வாங்கிக்கலாம்.