காங்கேயம் காளை

காங்கேயம் காளை

வரலாற்றில் ஒரு பார்வை

காங்கேயம் காளை தமிழகத்தில திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுக்கா உட்பட்ட பகுதிகளான ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரம் பகுதிகளில் விவசாய பணிக்காக வளர்க்கப்படும் ஒரு வகை நாட்டு மாட்டு இனம்.

இந்தியாவின் மிகப் பிரசித்தி பெற்ற உள்நாட்டு பசுக்களுள் இதுவும் ஒன்று. தென்னிந்தியாவோட அடையாளச் சின்னமாக கூட இந்த காளைகள் போற்றப்படுது.

இந்த இன மாடுகள் வறண்ட பகுதிகள்ளையும் வாழற தன்மை கொண்டது. சிந்து வெளியில கிடைத்த காளை முத்திரையில இப்போது தமிழகத்தில் இருக்கிற காங்கேயம் காளை போன்ற தோற்றம் மற்றும் உருவ அமைப்பு இருக்கிறதா ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

பண்புகள்

காங்கேயம் காளைகள் இயல்பா 4000லிருந்து 5000 கிலோ எடையிலான வண்டியை கூட இழுத்துட்டு போற திறன் கொண்டது. கடுமையான காலநிலையிலும் உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தக்க வச்சி வாழக்கூடியது.

எல்லாம் நல்லா இருக்கிற சூழ்நிலையில் மட்டும் இல்லாம, கடுமையான வெயில் மற்றும் பஞ்ச காலத்துலையும் பனையோலை, எள்ளுச்சக்கை, கரும்புத்தோகை, வேப்பந்தழை அப்படின்னு கிடைக்கிறத சாப்பிட்டு உயிர் வாழக்கூடியது.

காங்கேயம் பசுக்களின் பால்

இந்த பசுக்களோட பால் ரொம்ப உயர்தரமானது. இந்த வகை பசுக்களோட பால் இயற்கையாகவே நல்ல அடர்த்தியா இருக்கும். இயற்கையான தீவனத்தை மட்டுமே சாப்பிட்டு நம்மளுக்கு பால் தர்றதுனால அதனுடைய சத்துக்களும் அதிகமா இருக்கும். 

பொதுவா பால் உற்பத்தி நேரத்துல இந்த வகையான இனங்கள் ஒரு நாளைக்கு 1.8 லிட்டர்ல இருந்து 2.0 லிட்டர் பால் வரை கொடுக்கும் தன்மை கொண்டது.

வெளிநாட்டு மாட்டு இனங்களோட வருகையால இந்த மாட்டு இனத்தோட அளவு குறைஞ்சிட்டு இருக்கிறத நம்மளால பாக்க முடியுது‌.

ஜல்லிக்கட்டுக்காக நடந்த மிகப்பெரிய போராட்டத்துக்கு அப்புறம் காங்கேயம் மாடுகளோட அளவு அதிகரிச்சிட்டு வருது. கேரளா, கர்நாடகா, அது மட்டும் இல்லாம ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு உழவு வேலைக்காக விரும்பி வாங்கி செல்றத நம்மளால பார்க்க முடியுது.

காங்கேயம் பசுக்களின் ஏற்றுமதி

இந்த காங்கேயம் காளைகள் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா அந்த மாதிரி மாநிலங்களுக்கு மட்டும் விற்பனையாக்கப்படாமல் இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேயா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுது.

இதுல முக்கியமா பிரேசில்ல இந்த வகை காளைய சிறப்பாக பாதுகாத்துட்டு வர்றாங்க. மரபு வள மையங்கள் மூலமா இதுக்கு சிறப்பு கவனம் செலுத்தி இந்த காளையை பாதுகாக்குறாங்க.

வெளித்தோற்றம்

காங்கேயம் காளை

காங்கேயம் மாடுகள பொறுத்த வரைக்கும் பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். ஒரு ஆறு மாத காலத்துக்கு அப்புறம் சாம்பல் நிறத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா மாறும்.

காளைகள் பொதுவா சாம்பல் நிறத்தில் இருக்கும். அதனுடைய திமில், முன் பகுதி, பின்கால் பகுதி எல்லாம் அடர்ந்த நிறத்தில் இருக்கும். பிற இடங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

அதே பசுக்கள் சாம்பல் நிறத்தில் இல்லையென்றால் வெள்ளை நிறத்தில் இருக்கும். காங்கேயம் காளைகளுக்கு உள்ளேயே நிறைய உட்பிரிவு இருக்கு.

முதலாவது மயிலை வெள்ளி நிறத்தில் இருக்கும். இரண்டாவது பிள்ளை வெண்மை நிறத்தில் இருக்கும். மூணாவது செவலை சிவப்பு நிறத்தில் இருக்கும். நாலாவது காரி கருப்பு நிறத்தில் இருக்கும்.

ஜல்லிக்கட்டு

காளை சண்டைய தான் ஜல்லிக்கட்டு அப்படின்னு சொல்லுவாங்க. தமிழ்நாட்டுல வர்ஷா வருஷம் ஜனவரி மாதத்தில நாலு நாள் அறுவடை திருவிழா கொண்டாடும் சமயத்துல ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இது ஒரு உடல் ரீதியான பலத்த நிரூபிக்கிற போட்டி. காளைச் சண்டை வீரர்கள் காளையை அடக்கி அதோட கொம்புல கட்டி இருக்க துணிய அவிழ்க்க முயற்சி செய்வாங்க.

ஹீரோ மாதிரி பல காளைகளை எதிர்த்து வீரர்கள் போராடி வெற்றி பெற்றாலும் காங்கேயம் காளைய தோக்கடிக்கறது ஒரு தனி சவால் தான். பல திரைப்படங்கள்ல ஹீரோ எப்பேர்பட்ட பலசாலி அப்படின்னு காட்டுறதுக்காக காங்கேயம் காளையவே தோக்கடிச்ச மாதிரி காட்டி இருப்பாங்க.

முடிவுரை

நாட்டு மாடுகள் வெறும் கால்நடை மட்டும் அல்ல; இந்தியாவோட கலாச்சார பரம்பரியத்தோட அடையாளமா இருக்கு. நாட்டு மாடுகளோட நற்பண்புகள் நம்ம நாட்டோட பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வுக்கு பங்காளிக்குது.

இதுல முக்கியமான ஒரு இனமான காங்கேயம் மாடுகளை பத்தி நாம இந்த வலைப்பதிவுல பாத்தோம். இந்த இனங்கள் அழியாம பாத்துக்கறது நம்மளோட கடமை.