தமிழ்நாட்டோட விவசாய நிலப்பரப்புல, ஒரு நாட்டுக் கோழி இனம் அதனோட குறிப்பிடத்தக்க வலிமை அப்புறம் தனித்துவமான பண்புக்காக பெயர் பெற்றது அப்படினா அது அசில் கோழிகள் தான்.
அசில் கோழி ஆந்திரா அப்புறம் தமிழ்நாட்டோட மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்த தாயகமாக கொண்டிருக்கு.
“நாட்டு கோழி” அப்படீங்குற சொல் பல்வேறு உள்ளூர் கோழி இனங்கள உள்ளடக்கி சொல்லப்படுது. இது தமிழ்நாட்டில உள்ள உள்நாட்டு கோழிகளோட பொதுவான வகைய குறிப்பிடுது.
தமிழ்நாட்டுல கோழி இனங்கள் நல்ல செழுமையான பன்முகத்தன்மைய கொண்டிருக்கு. ஒவ்வொண்ணும் அதனோட தனித்துவமான குணங்களுக்காக புகழ் பெற்றது.
இவை தமிழ்நாட்டோட கலாச்சார கட்டமைப்புக்கு பங்களிக்குறது மட்டும் இல்லாம உள்ளூர் பொருளாதாரத்த நிலைநிறுத்தறதுலையும் முக்கிய பங்கு வகிக்குது.
அசிலின் பண்புகள்
அசில் கோழிகள் சண்டை சேவல்களா கருதப்படுது. இவை முதன்மையா சேவல் சண்டைக்கு தான் பயன்படுத்தப்படுது.
பிறந்து சில வாரங்கள் ஆன உடனே இதுங்க சண்டை இட தொடங்குது. இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் இந்த கோழிகள் அடிக்கடி ஆக்ரோஷமா சண்டையிடத் தொடங்குது. அதுக்கு அப்புறம் அதுங்க சாகும்வரை சண்டையிட்டுட்டே இருக்கும்.
கோழி ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில அசில் ஒரு சிறப்பு இடத்த பெற்றிருக்கு.
அசில் கோழிகள் அதுங்களோட வலிமையான, கச்சிதமான உடல் அப்புறம் குறுகிய, இறுக்கமான இறகுகளால வகைப்படுத்தப்படுது. இந்த இனம் கருப்பு, சிவப்பு அப்புறம் வெள்ளை உட்பட பல்வேறு வண்ணங்கள கொண்டிருக்கு. அசிலோட அற்புதமான தோற்றம் அதன் வலிமையான உடலுக்கு அழகா பொருந்துது.
இறைச்சி மற்றும் முட்டை
இந்த கோழிகள் அதிகமா முட்டை இடறது இல்ல, இருந்தாலும் விடுற கொஞ்சம் முட்டைகள நல்ல முறைல அடைகாக்குற பண்புகள கொண்டிருக்கு.
அசில் வகை கோழிகள்ல சிறியவகை அசில்கள் ஆண்டுக்கு ஆறு முட்டைகள் மட்டுமே இடக் கூடியது. பெரிய அசில்கள் ஆண்டுக்கு 40 முட்டைகள் வரை இடும்.
அமெரிக்காவின் கால்நடை பாதுகாப்புக் கழகத்தால இந்த இனக் கோழிகள் “கவனிப்புபட்டியல்” (2012) இல் வைக்கப்பட்டுது. அசில் கோழி இனம் இந்தியாவில குறிப்பாக தமிழ்நாடு அப்புறம் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள்ல பெருமளவில வளர்க்கப்படுது.
அசிலில் வகைகள்
அசிலில பல வகைகள் இருக்கு. அதுல முக்கியமா தமிழ்நாட்டில பிரசித்தி பெற்ற இனம் அப்படீன்னா அது மெட்ராஸ் அசில் அப்புறம் கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில் ஆகும்.
அது மட்டும் இல்லாம அசில் கோழி இனத்துல பிரபலமான வகைகள் அப்படினு பார்த்தோம்னா, ரேசா அசில், குலாங் அசில், சிந்தி அசில், மியான்வாலி, அம்ரோஹா, பாண்டம் அசில், லசானி அசில், பீலா, யாகப், நியூரி, காகர், சிட்டா, ஜாவா, சப்ஜா, டீகார், பீ கோம்ப் அப்படீன்னு பல வகை அசில்கள் இருக்கு.
அசில் கோழி வளர்ப்பின் நன்மைகள் மற்றும் சவால்கள்
அழகும் புத்திசாலித்தனமும் நிறைந்த பறவைகள். இது மேலும் வைட்டமின்கள் அப்புறம் புரதங்கள் நிறைந்த மிகவும் ஆரோக்கியமான இறைச்சி அப்புறம் முட்டை கொண்ட கோழியும் கூட.
இது பழங்காலத்துல இருந்து இந்த காலம் வரை செல்ல பிராணிகளாவும் இருக்கு. எல்லா இடத்துக்கும் ஏற்ப தட்ப வெப்ப சூழ்நிலைகள அனுசரிச்சு, நோய் நொடிகள் வராம வாழக்கூடிய தன்மை கொண்டதும் கூட.
இத்தனை நன்மைகள் இருந்தாலும் கொஞ்சம் பிடிவாத குணமும் ஆக்ரோஷ குணத்தையும் கூடவே கொண்டிருக்கு.
இந்த வகைல ஒரே இடத்துல பல சேவல்களையும் அப்புறம் கோழிகளையு பராமரிக்குறது மிக கடினமானது. ஏன்னா அவை சண்டையிட்டுட்டே இருக்கும். சில சமயங்கள்ல சாகும் வரை கூட சண்டையிடும். மேலும் இவை பல வருடம் வளர்ர தன்மை கொண்டது.
பாதுகாப்பு முயற்சிகள்
நாட்டுக் கோழி இனங்கள பாதுகாப்பதன் முக்கியத்துவத்த தற்காலத்துல எல்லாரும் அறிஞ்சிருக்கறதால, அசீல பாதுகாக்க ஒன்றுசேர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுட்டு வர்ராங்க.
பொறுப்பான இனப்பெருக்க நடைமுறைகள மேம்படுத்துவத நோக்கமா கொண்டு இந்த முயற்சிகள் நடக்குது. இந்த முக்கிய இனமான அசில் ஓட இருப்ப உறுதி செய்ய கோழி ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் முயற்சி செய்துட்டு வர்ராங்க.
முடிவுரை
நாம இந்த வலைப்பதிவுல தமிழ்நாட்டோட மிக பிரபலமான நாட்டுகோழி இனமான அசில் கோழி பத்தி பார்த்தோம். இப்போ இதனோட பல்வேறு சிறப்பு அம்சங்கள பற்றி தெருஞ்சுருப்பீங்க.
மேலும் இந்த மாதிரி பல இயற்கை உணவுகள், காய்கறிகள் அப்புறம் விலங்குகள பற்றி தெரிஞ்சுக்க எங்களோட பிற வலைப்பதிவுகள பாருங்க.