மாதுளை பழம் (pomegranate) சிறுமர இனத்த சோ்ந்த பழ மரம். நவீன ஈரான சேர்ந்தது மாதுளை. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தைய வரலாற்ற கொண்டது. மாதுளையின் நன்மைகள் பத்தி இந்த வலைப்பதிவுல பாக்கலாம் வாங்க.
பண்டைய பாபிலோன், பெர்சியா அப்புறம் எகிப்து நாடுகளில பயிரிடப்பட்டிருக்கு. இது 5000 ஆண்டுகளா ஈரான்லயும், ஆப்கானிஸ்தான்லயும், பலுகிஸ்தான்லயும் பயிரிடப்பட்டு வருது.
இந்தியாவில, குறிப்பாக தமிழ்நாட்டில, மாதுளைகள் புனிதம், கருவுறுதல் அப்புறம் செழிப்பு ஆகியவற்றோட ஒப்பிடப்படுது, அதனால மத நிகழ்வுகள் அப்புறம் கலாச்சார நடைமுறைகள்ல முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கு.
மாதுளைக்கு தமிழில பல பெயர்கள் இருக்கு அவை தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் அப்புறம் கழுமுள்.
மாதுளையின் வகைகள்
ஆலந்தி, தோல்கா, காபுல், மஸ்கட் ரெட், பேனிஷ் ரூபி, வெள்ளோடு, பிடானா, கண்டதாரி அப்புறம் இன்னும் பல வகைகள் இருக்கு. ஒவ்வொரு ரகத்துக்கும் தனிப்பட்ட சுவை இருக்கு. அதே போல சில ரகத்துக்கு தனிப்பட்ட மருத்துவ குணமும் இருக்கு.
மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
- இதுல வைட்டமின் சி நிரம்பி இருக்கு, அதனால நம்ம உடலுக்கு நோயெதிர்ப்பு சக்திய வழங்குது.
- இதுல இருக்க இரும்பு பிற சத்துக்கள உறிஞ்சறதுக்கு உதவுது.
- வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்திற்கும் இரத்தம் உரையரத்துக்கும் பங்களிக்குது.
- இதயம் அப்புறம் தசைகளோட செயல்பாட்டுக்கு தேவையான பொட்டாசியம், டிஎன்ஏ தொகுப்புக்கு முக்கியமான ஃபோலேட், மேலும் சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக தேவையான தாமிரம் போன்ற தாதுப்பொருட்களையும் மாதுளை வழங்குது.
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பா பாலிபினால்கள் நிறைந்த மாதுளை, ஃப்ரீ ரேடிக்கல்கள எதிர்த்து, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்த குறைக்குது. கரையக்கூடிய அப்புறம் கரையாத நார்ச்சத்து இரண்டையும் இது கொண்டிருக்கு, இது செரிமானத்த மேம்படுத்துது. இதுல சிறிதளவு புரதமும் இருக்கு.
- பிரக்டோஸ் அப்புறம் குளுக்கோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள, கொண்டிருக்கறதால இது எந்த சர்க்கரையும் சேர்க்காம இனிப்ப வழங்குது.
- மேலும், புனிகலஜின்கள் அப்புறம் பியூனிசிக் அமிலம் அப்படீன்னு சொல்லப்படுற மாதுளையில இருக்க பைட்டோ கெமிக்கல்கள் உடலுக்கு பலவிதமான ஆரோகிய நன்மைகள வழங்குது.
மாதுளையின் நன்மைகள்
- மாதுளையில பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் அப்புறம் டானின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிரம்பி இருக்கு. இது உடம்புல இருக்க ஃப்ரீ ரேடிக்கல நடுநிலையாக்க உதவுது, மேலும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தயும் குறைக்குது.
- கொலஸ்ட்ரால் அளவ மேம்படுத்துறது மூலமா மாதுளை இதய ஆரோக்கியத்துக்கு பங்காளிக்குது.
- மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்ப (எல்டிஎல்) குறைக்கவும், நல்ல கொழுப்ப (எச்டிஎல்) அதிகரிக்கவும் உதவக்கூடும்னு ஆய்வுகள் சொல்லுது.
- மாதுளையில இருக்க பொட்டாசியம் சோடியம் அளவ சமப்படுத்தி உயர் இரத்த அழுத்தத்த கட்டுப்படுத்த உதவது.
- இது நினைவாற்றலையும் அதிகப்படுத்துது.
- மாதுளை நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்த ஊக்குவிக்க உதவுது மற்றும் மலச்சிக்கல தடுக்குது.
- மாதுளை சரும ஆரோக்கியத்துக்கும் பங்களிக்குது. புற ஊதா கதிர்களால ஏற்படுற சேதத்திலிருந்து சருமத்த பாதுகாக்கறதுக்கும் ஆரோக்கியமான சருமத்திற்கு கொலாஜன் உற்பத்திய ஊக்குவிக்கவும் உதவுது.
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவ குறைக்கவும் இன்சுலின் உணர்திறன மேம்படுத்தவும் உதவுது.
சமையல் பயன்பாடுகள்
- மாதுளை விதைகள புத்துணர்ச்சியூட்டும் ஒரு சத்தான சிற்றுண்டியா நாம அப்படியே சாப்பிடலாம்.
- பழ சாலட்கள் அப்புறம் பச்சை காய்கறி சாலட்லயும் மாதுளைய சேர்த்து சாப்பிடலாம்.
- சாறு பிழிந்து ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
- மேலும் மாதுளை பழச்சாறு எலுமிச்சைப் பழம் கொண்டு செய்யப்படுற புத்துணர்ச்சியூட்டுற பானங்கள் தயாரிப்புல சேர்க்கப்படுது.
- மாதுளை சாற்ற நல்லாகொதிக்கவைப்பதன் மூலம் நம்மளால ஒரு தடிமனான இனிப்பு-புளிப்பு சுவை கொண்ட மொலஸ்ஸஸ் செய்யமுடியும். இத நாம இறைச்சி, கோழி இல்லைனா வறுத்த காய்கறிகளுக்கு மேல பயன்டுத்தலாம்.
- இறைச்சி செய்யும்போது அத ஊறவைக்க செய்யப்படுற சாஸ்ல நாம மாதுளம்பழ சாற்ற சேர்த்துக்கலாம். இது அந்த இறைச்சிக்கு ஒரு இனிப்பு கசப்பு கலந்த சுவைய தருது.
- கேக்குகள், ஐஸ் கிரீம், அப்புறம் புட்டிங் எல்லாத்துலயும் மாதுளம்பழத்த நாம அப்படியே சேர்த்துக்கலாம்.
- நாம மாதுளம் பழம் கொண்டு ஜாம் கூட செஞ்சு சாப்பிடலாம்.
சமையல் அல்லாத பிற பயன்பாடுகள்
- விதைகள் மற்றும் மாதுளைச் சாறு, அதனோட ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக பாரம்பரிய மருத்துவத்துளையும் அப்புறம் மூலிகை மருந்துகள் செய்யுறதுக்கும் பயன்படுத்தப்படுது.
- மாதுளம்பழம் கொண்டு செய்யப்படுற மருந்துகள் மாத்திரை வடிவத்துலையும், பொடியாவும் கிடைக்குது.
- மாதுளை சாறுகள் சரும பராமரிப்புல பயன்படுத்தப்படற லோஷன்கள், கிரீம்கள் அப்புறம் சீரம் போன்ற பொருட்களில அதனோட ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக பயன்படுத்தப்படுது. ஏன்னா, இது சரும ஆரோக்கியத்த மேம்படுத்த உதவும்.
- மாதுளை விதை எண்ணெய் சருமத்துக்கு ஈரப்பதம் குடுக்கக்கூடியது.
- டானின் அப்படீங்குற ஒரு மூலக்கூறு மாதுளை தோலுல இருக்கு, அவை ஜவுளிகளுக்கு இயற்கையான சாயமாக நாம பயன்படுத்தலாம்.
- சாயமிடும் செயல்முறைய பொறுத்து தோல்கள் மஞ்சள்ல இருந்து பழுப்பு நிறம் வரை வண்ணங்கள தரக்கூடியது.
- மாதுளை சாறுல மை தயாரிக்கப்பட்டு வரலாற்று ரீதியா எழுதுரத்துக்கும் வரையரத்துக்கும் பயன்படுத்தப்பட்டுருக்கு.
- விதைகளில இருந்து எடுக்கப்படற அத்தியாவசிய எண்ணெய், அதனோட இனிமையான வாசனைக்காக அரோமாதெரபினு சொல்லப்படுற நறுமண சிகிச்சையில பயன்படுத்தப்படுது.
- மாதுளை விதை எண்ணெய் சில நேரங்களில ஷாம்புகள் அப்புறம் கண்டிஷனர்கள்ல மற்றும் பிற முடி பராமரிப்பு பொருட்களில பயன்படுத்தப்படுது.
- மாதுளை சாறுகள் அதனோட பாக்டீரியா எதிர்ப்பு அப்புறம் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுக்காக துப்புரவு செய்ய பயன்படுத்தப்படலாம்.
முடிவுரை
மாதுளை பல ஆரோக்கிய நன்மைகள நமக்கு குடுத்தாலும், அது சீரான உணவோட ஒரு பகுதியா இருக்கனும். எனவே, மிதமான அளவுல இத உட்கொண்டு ஆரோகியமா வாழலாம்.
மேலும், இயற்கையான முறைல பயிரிடப்பட்டு கிடைக்குற பழங்களையே எப்பவும் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க. அதுதான் உடம்புக்கு நல்லது.
இயற்கையான முறையில விளைவிக்கப்பட்ட தரமான உணவு பொருட்கள் உங்களுக்கு வேணும் அப்படீன்னா நீங்க உயிர் இயற்கை உழவர் சந்தைல வாங்கிக்கலாம்.