கருஞ்சீரகம்

கருஞ்சீரகம்

வரலாற்றில் ஒரு பார்வை

பாரம்பரிய மருத்துவ முறைகள்ல பயன்படுத்தப்படற ஒரு முக்கியமான விதைனா அது கருஞ்சீரக விதை. ஆயுர்வேதம், யுனானி அப்புறம் இன்னைக்கு நவீன மருத்துவத்துலையும் கருஞ்சீரகம் கலவையா பயன்படுத்தப்படுது. அவ்வளவு சிறப்பு மருத்துவ குணம் கொண்டது இது.

ஆங்கிலத்தில Nigella sativa இல்லனா Black seed or Black cumin அப்படினு அழைக்கப்படுது. கருஞ்சீரகத்தின் தாயகம் தென் ஐரோப்பா, தெற்கு மற்றும் தென் மேற்கு ஆசியப்  பகுதிகளாகும். இந்தியத் துணைக் கண்டதோட சில மாநிலங்கள்லயும் இவை காட்டுச் செடியா வளருது.

கருஞ்சீரகம் பழங்காலத்துல இருந்து வாசனை திரவியமா பயன்பட்டுட்டு இருக்கு. மிகப் பழைமையான மொழிகள்ல ஒன்றான ஹீப்ரு மொழியில கருஞ்சீரகம் பற்றிய விளக்கங்கள் பதிவு செய்யப்பட்றுக்கு. பிளின் என்ற புகழ் பெற்ற பழங்கால மருத்துவ நிபுணர் தன்னோட புத்தகத்துல கருஞ்சீரகத்த பத்தியும் அதனோட மருத்துவ குணங்கள பதியும் விளக்கி கூறி இருக்காரு. சுமார் 3,300 வருடங்களுக்கு முன்பே இந்த விதைய எகிப்து மக்கள் பயிரிடப்பட்டு பயன்படுத்தி இருகாங்க.

தமிழகத்துலயும் தொன்றுதொட்டு நாம கருஞ்சீரகத்த மருத்துவத்துல மற்றும் சமையல்ல பயன்படுத்திட்டு வரோம்.

ஊட்டச்சத்துக்கள்

மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தோட விதையில இருக்க `தைமோகுயினன்’ (Thymoquinone) அப்படீங்குற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்துலையுமே இல்ல. இது, நோய் எதிர்ப்பு சக்திய தரக்கூடியது.

இதுல உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருக்கு. மேலும், அமினோ அமிலங்கள்,  வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்ற பல உடலுக்கு நன்மை தர விஷயங்கள் இதுல உள்ளது. அதுமட்டுமில்லாம சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட்ஆ செயல்படக்கூடியது.

சமையல் பயன்பாடுகள்

கருஞ்சீரகம்
  • இந்தியாவுல மிக பிரசித்தி பெற்ற கரம் மசாலா அப்புறம் மத்திய கிழக்கு ஆசியாவுல பிரசித்தி பெற்ற ஜாதார் போன்ற புகழ்பெற்ற மசாலா கலவைகள்ல இது முக்கிய பங்கு வகிக்குது.
  • உணவோட தரத்த உயர்தரதுக்கு நுணுக்கமான அப்புறம் கொஞ்சம் கசப்பான சுவைய இது தருது.
  • ரொட்டிகள் அப்புறம் பேக்கரில செய்யுற பேஸ்ட்ரிகள் மேல பேக்கிங் செய்றதுக்கு முன்னாடி இத தூவுவாங்க.
  • காய்கறி உணவுகளோட சேர்க்கும்போது இது அதோட ஆழ்ந்த சுவைய மேம்படுத்துது.
  • ஊறுகாய்கள்ல மற்றும் சட்னிகள்ல இது ஒரு தனித்துவமான சுவைய குடுக்குது.
  • அரிசி, பருப்பு அல்லது பருப்பு வகை சமையல்கள்லயும் இத சேர்த்துக்கலாம்.
  • மூலிகை தேநீர்ளயும் கருஞ்சீரகத்த பயன்படுத்தலாம்.
  • பதப்படுத்தப்பட்ட எண்ணெய்கள் மற்றும் வினிகர்களில் உட்செலுத்தப்படுது.
  • முறுக்குகள்ல நாம முக்கியமா இத பயன்படுத்தறோம்.
  • சூப்கள்ல சுவையூட்டும் பொருளா பயன்படுத்தப்படுது.
  • கசாயங்கள்ல வைத்தியத்துக்காக சேர்க்கப்படுது.

பிற பயன்பாடுகள்

கருஞ்சீரகம்

அதன் சமையல் பயன்பாடுகளுக்கு மேல, கருப்பு சீரகம் பல்வேறு சமையல் அல்லாத பயன்பாடுகளுக்காக, குறிப்பா பாரம்பரிய மருத்துவம் மற்றும் தோல் பராமரிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டுருக்கு.

  • அவை அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்குற பண்புகள கொண்டிருக்கு.
  • கருஞ்சிரக எண்ணெய் அதனோட ஈரப்பதமூட்டுற பண்புகளுக்காக தோல் பராமரிப்புல பயன்படுத்தப்படுது. இது சருமத்துக்கு ஊட்டமளிக்க உதவுது.
  • கருஞ்சீரக அத்தியாவசிய எண்ணெய அதனோட நறுமண பண்புக்காக நறுமண சிகிச்சையில பயன்படுது.
  • கருஞ்சீரக எண்ணெய முடி பராமரிப்பு பொருட்களில பயன்படுத்தப்படுது. இது பொடுகு குறைய உதவும் மற்றும் ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியத்த மேம்படுத்தும்.
  • மேலும், பாக்டீரியா எதிர்ப்பு அப்புறம் பூஞ்சை காளான் பண்புகளுக்காக ஆய்வு செய்யப்படுது.
  • கருஞ்சீரக எண்ணெய் ஆவிய உள்ளிழுத்து சுவாச நன்மைகள் தருவதா நம்பப்படுது, இது ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை போன்ற சூழ்நிலைல அறிகுறிகள எளிதாக்குது.
  • இது மூட்டு ஆரோக்கியத்த கூட மேம்படுத்துது.
  • நோயெதிர்ப்பு மண்டலத்த ஆதரிக்கும் இம்யூனோமோடூலேட்டரி விளைவுகள கொண்டிருக்கிறதா நம்பப்படுது.
  • எடை மேலாண்மை மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்த ஆதரிக்கறதுல கருஞ்சீரகம் ஒரு பங்க கொண்டிருக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்குது.
  • சில கலாச்சாரங்களில, இத மங்களகரமானதாக கருதப்பட்டு, பல்வேறு சடங்குகள் அப்புறம் விழாக்களில பயன்படுத்தப்படுது.

நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்

கருஞ்சீரகம்
  • கருப்பு சீரகத்துல அழற்சி எதிர்ப்பு விளைவுகள கொண்ட கலவைகள் இருக்கு, இது உடல்ல ஏற்படுற வீக்கத்த குறைக்க உதவுது.
  • கருஞ்சீரகத்தோட விதைகளில ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருக்கு. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்துல இருந்து செல்கள பாதுகாப்பத்துல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பங்கு வகிக்குது அப்புறம் ஒட்டுமொத்த ஆரோகியத்துக்கும் பங்களிக்குது.
  • இது நோயெதிர்ப்பு மண்டலத்த பலப்படுத்துது, தொற்று அப்புறம் நோய்களுக்கு எதிரா சிறந்த பாதுகாப்பு தருது.
  • ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற அறிகுறிகள போக்க உதவும்.
  • இதய ஆரோகியத்துக்கும் பங்களிக்குது.
  • சில ஆய்வுகளில ஆண்டிமைக்ரோபியல் பண்புகள இவை கொண்டிருக்குனு நிரூபிச்சுருக்காங்க, பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிரா இருந்து நமக்கு நன்மைகள குடுக்குது.
  • மேலும், சில ஆய்வுகள் கருஞ்சீரகம் புற்றுநோய எதிர்க்கும் பண்புகள கொண்டிருப்பதா கூறுது. கருஞ்சீரகத்தில உள்ள சில கலவைகள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சிய தடுக்குது.
  • இது இரத்த சர்க்கரை அளவ கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறன மேம்படுத்தவும் உதவும்.
  • அறிவாற்றல் செயல்பாட்ட ஆதரிக்கும் அப்புறம் நரம்பியக்கடத்தல் நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

முடிவுரை

பல மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த கருஞ்சீரகத்த அப்பப்போ உணவுல சேர்த்துக்கறது உடல் நலத்துக்கு உத்தரவாதம் தரும்.

இந்த மாதிரி இயற்கை உணவு பொருட்கள தேர்ந்தெடுத்து உண்டு ஆரோகியமா வாழுங்க.