கரும்பின் நன்மைகள்

கரும்பு

வரலாற்றில் ஒரு பார்வை

ஒரு 8000 வருஷத்துக்கு முன்னாடியே தென் பசிபிக் தீவுல கரும்பு முதல் முறையா பயிரிடப்பட்டது. கரும்பின் நன்மைகள் பத்தி இந்த வலைப்பதிவுல பார்க்கலாம்.

இந்தியாவில கி.மு. 500 – ம் ஆண்டு சர்க்கரை தயாரிக்கும் முறை பற்றி தெரிஞ்சுக்கராங்க. கி.மு.100 – ம் ஆண்டில் இது அப்படியே சீனாவுக்குப் பரவுது. தற்காலத்துல 200 – க்கும் மேற்பட்ட நாடுகள்ள கரும்பு பயிர் செய்யப்படுது.

கரும்பு ஒரு பணம் கொழிக்கிற வணிக பயிர். பிரேசில், இந்தியா, சீனா இந்த மாதிரி 50% நாடுகளுக்கும் மேல கரும்பு உற்பத்தி செய்றாங்க.

உலகத்திலேயே அதிகமாக கரும்ப பயிர் செய்யறதால ‘உலகத்தில் சர்க்கரை கிண்ணம்’ அப்படின்னு ‘கியூபாவ’ சொல்லுவாங்க.

கரும்பின் நன்மைகள்

வளர்ப்பு

கரும்பு வெப்பமண்டல பகுதிகளில் தான் சிறப்பாக வளரும். சரியான தட்பவெட்ப நிலை, சூரிய ஒளி, தேவையான ஈரப்பதம் இது எல்லாமே கரும்போட அதிகமா மகசூலுக்கு உதவும். நல்ல மண், பாசனம், அதிக மழை பொழிவு கரும்பு சாகுபடிக்கு ரொம்ப முக்கியமானது.

கரும்பின் நன்மைகள்

சர்க்கரை

சர்க்கரைங்கர வார்த்தை சமஸ்கிருத மொழில ‘சர்க்கரா’ அப்படீங்கர சொல்லுல இருந்து வந்தது. கரும்பு முக்கியமா அதுல இருந்து கிடைக்கிற சாற்ற வெச்சு சர்க்கரை செய்ய பயன்படுது.‌ உலகில் 70 சதவீதம் சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுது.

உலகத்துல அனைவராலும் தினமும் உணவுல பயன்படுத்தபடர சர்க்கரை கரும்பு சாறுல இருந்து தான் தயாரிக்கப்படுது. கரும்பு சாறுல இருந்து பல விதமான சர்க்கரை வேறு வேறு வழிகள்ல செய்யப்படுது. அவை வெள்ளை சர்க்கரை, படிக சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை மற்றும் கற்கண்டு போன்றவை ஆகும்.

நாட்டு சர்க்கரை அப்படிங்கறது கரும்பு சாற்றில் இருந்து எடுக்கப்பட்ட இயற்கையான சர்க்கரை. ஆங்கிலத்தில organic country sugar அல்லது Jaggery powder அப்படின்னு சொல்லுவாங்க.

நாட்டு சர்க்கரை எந்த ஒரு செயற்கையான இரசாயனங்களும் இல்லாம பாதுகாப்பான முறையில கரும்பு சாற்றை மட்டும் பயன்படுத்தி செய்யப்படுது‌. இது உடலுக்கு பல நன்மைகள் தரும்.

ஊட்டச்சத்துக்கள்

கரும்புல அதிக அளவுல நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், புரதம் மாதிரி உடலுக்கு அத்தியாவசியமா தேவைப்படுற பல வகையான சத்துக்கள் அடங்கி இருக்கு.

தமிழர்கள் பண்பாட்டில் கரும்பு

கரும்பில்லாமல் பொங்கல் பண்டிகைய நினைச்சுக் கூட பார்க்க முடியாது. தித்திக்கும் கரும்பு போல வாழ்க்கை நல்லா இன்பமா அமையும் அப்படிங்கறத குறிக்கிறதுக்காக தான் பொங்கல் பண்டிகையில இத நம்ம பயன்படுத்துறோம்‌.

இது நம்முடைய வாழ்க்கைக்கு தித்திப்பு தர்றது மட்டும் இல்லாம; நம்மளோட உடம்பையும் பத்திரமா ஆரோக்கியத்தோட பாத்துக்கும்.

கரும்பின் நன்மைகள்

  • நம்ம ரொம்ப சோர்வா இருக்கும்போது கரும்பு ஒரு துண்டு சாப்பிட்டு பார்த்தோம்னா நம்ம உடம்பு உடனே சுறுசுறுப்பாயிடும். ஏனா அந்த இனிப்பு சுவை காரணமா கரும்புல செயல் திறன அதிகம் ஆக்குற குளுக்கோஸ் இருக்கு. இதை சாப்பிடுவதால் புத்துணர்ச்சி தானா நம்மளுக்கு கிடைக்குது.
  • கரும்பில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைய இருக்கிறதுனால நம்மளோட பற்களும் எலும்புகளும் வலிமையா இருக்கும்.
  • பொட்டாசியம் இருக்கிறதால மன அழுத்தத்தை அதிகப்படுத்துற ஹார்மோனோட சுரப்ப கட்டுப்படுத்தி நம்மளோட மன அழுத்தத்தை குறைக்குது. அது மட்டும் இல்லாம கரும்பு கடிச்சு மென்னு சாப்பிடும் போது நம்மளுக்கு அதுவும் மன அழுத்தத்த குறைக்குது.
  • அதிக அளவுல ஆன்ட்டி ஆக்சிடென்ட், மற்றும் ஃபிளவனோய்டுகள் இருக்கிறதால புற்றுநோய் செல்கள ஆரம்பத்திலேயே எதிர்த்து போராட உதவுது‌.
  • கரும்பு சாப்பிடுவதால் சிறுநீரகத்தோட செயல்படும் மேம்படுது. சிறுநீரகப் பிரச்சனைகள் வராமையும் அது தடுக்குது.
  • கரும்பில் அதிக அளவுல எலக்ட்ரோலைட்ஸ் இருக்கிறதால கல்லீரல் ஓட ஆற்றளையும் மேம்படுத்துது.
  • நம்மளோட நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகுது. நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கறதுக்கு இது ஒரு நல்ல மருந்து.
  • இதுல நார்ச்சத்து அதிகமா இருக்கிறதால நம்ம உண்ணும் உணவுகள சீரா செரிமானம் செஞ்சு தேவையில்லாத கொழுப்பு சேராம தடுத்து, உடல் எடை கூடாம, குறைக்கிறதுக்கும் உதவி செய்யுது.
  • இது ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துது.
  • கரும்பு உங்களுக்கு பிடிக்கும் அப்படின்னா தினம் ஒரு கரும்பு சாப்பிடுங்க. இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட சுவையான ஆரோக்கியமான கரும்பு மற்றும் சர்க்கரை வேணும் அப்படின்னா நீங்க Uyir organic farmers marketல வாங்கிக்கலாம்.

கரும்புச்சாறு

வெயிலுக்கு இதமா உடலுக்கும் ஆரோக்கியம் தரும் ஒரு நல்ல ஜூஸ் அப்படின்னா அது கரும்புதான். கரும்ப ஒரு சிறு துண்டு இஞ்சி, கொஞ்சம் எலுமிச்சம் பழம் எல்லாம் வைத்து சாறு பிழிஞ்சு எந்த ஒரு செயற்கையான சர்க்கரையும் சேர்க்காமல் அப்படியே நல்ல மனத்தோடு குடிக்கிறது உடம்புக்கு ரொம்ப நல்லது.

கரும்பு சாரை அடிக்கடி குடிக்கிறவங்களுக்கு வயிறு மற்றும் குடல் நல்லா சுத்தமாகிடும்.

உணவோட செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களோட சுரப்பையும் இது அதிகப்படுத்துது. கோடை காலத்துல உடல் சூடு அதிகமாக இருக்கும்; அதை குறைப்பதற்கு கரும்பு ஜூஸ் நம்ம குடிக்கலாம்.

கரும்பின் நன்மைகள்

பிற பயன்பாடுகள்

கரும்ப மேலும் நாம பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்

  • எத்தனால் (Ethanol) உற்பத்தி செய்றதுக்கு ஒரு முதன்மை ஆதாரமா இருக்கு.
  • இத புதுப்பிக்கத்தக்க எரிபொருள் அதாவது பயோ டீசலாவும் பயன் படுத்தலாம்.
  • பேகாஸ் (Bagasse) அப்படிங்கற கரும்போட துணை பொருள் காகிதம் மற்றும் மக்கும் பொருள் உற்பத்தியில பயன்படுத்தப்படுது.
  • மற்றொரு துணைப் பொருளான மொலாசஸ் (Molasses) அப்படினு சொல்லற வெல்லப்பாகு, கால்நடைகளுக்கான கால்நடைத் தீவனத்தில துணைப் பொருளா பயன்படுத்தப்படுது.
  • தாவரத்தின் வேர் அமைப்பு மண் அரிப்ப தடுக்க உதவுற மாதிரி இருக்கு. எனவே மண்ணோட நிலைத்தன்மைக்கு பங்களிக்குது.

முடிவுரை

இந்த வலைப்பதிவு மூலம் நீங்க கரும்பின் நன்மைகள் மற்றும் பயன்கள தெரிஞ்சுருப்பீங்க. இதன் மூலம் ஆரோகியமான வாழ்க்கைக்கு சிறந்த இயற்கையான முறையில பயிரிடப்பட்ட உணவ Uyir Organic Farmers Marketல தேர்வு செஞ்சு பயன்படுத்துங்க.