கம்பின் நன்மைகள்

கம்பு

வரலாற்றில் ஒரு பார்வை

பொதுவா ஆப்ரிக்கக் கண்டத்தில இது தோன்றியதா கருதப்படுது. இந்தியாவுல நடைபெற்ற அகழ்வாராய்ச்சில கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது தெரியவருது. கம்பின் நன்மைகள் பல பல. அத பத்தி இந்த வலைப்பதிவுல பார்க்கலாம்.

ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகள்ல விளைவிக்கப்பட்டு உணவுப் பொருளா பயன்படுத்தப்பட்டு வருது. குறிப்பா ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள்ல கம்பு மனிதர்களுக்கு உணவா, கால்நடைத் தீவனமா, மேலும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டுட்டு வருது. உலகத்தோட மொத்த சிறுதானிய உற்பத்தியில 55% இடத்த கம்பு பிடிச்சிருக்கு.

கம்பின் பண்புகள்

கம்பு (Pennisetum glaucum, Pearl Millet) ஒரு சிறுதானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப்பயிர். இந்தியால தான் இது அதிகம் உற்பத்தி செய்யப்படுது. மானாவாரியாவும், நீர்ப்பாசனதுலையும் கம்பு பயிர் செய்யப்படுது. இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதம் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணுலயும் விலையுற தன்மையுடையது.

கம்புப் பயிர் வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழல்லையும், குறைவான ஊட்டம் இருக்கும் நிலங்கள்லயும் கூட வளரும் தன்மை உடையது.

அதிகமாகப் பயிரிடப்படற சிறுதானியங்கள்ல கம்பு முதலிடத்த பிடிக்குது. 

ஊட்டச்சத்துக்கள்

தானியங்கள்லயே அதிக அளவா 11.8 சதவிதம் புரோட்டீன் கம்புலதான் இருக்கு. ஆரோக்கியமான தோலுக்கும், கண்பார்வைக்கும் முக்கியமான சத்தான வைட்டமின் ஏ வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியா இருக்க பீட்டா கரோட்டீன் கம்பு பயிர்ல அதிக அளவுல‌ இருக்கு.

100 கிராம் கம்புல, 42 மில்லி கிராம் கால்சியம், 11 முதல் 12 மில்லி கிராம் இரும்பு, பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம், ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் மற்றும் நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் இருக்கு.

வேறு எந்தத் தானியத்துலையுமே இல்லாத அளவு 5 சதவிதம் எண்ணெய் இதுல இருக்கு. இந்த எண்ணெயில 70 சதவிதம் நிறைவுறாக் கொழுப்பு அமிலம் இருக்கு. இது உடலுக்கு ரொம்ப உகந்த கொழுப்பாகும்.

சேமிப்பு முறை

கம்பின் நன்மைகள்

நல்லா உலர வைத்த கம்பு தானியம் சுமார் 3 முதல் 6 மாதம் வரை கெடாம இருக்கும். பின்னர் மீண்டும் ஒருமுறை வெயில்ல காய வைத்து எடுத்து வெச்சுட்டா மேலும் 6 மாதம் கெடாம இருக்கும். அதுமட்டுமல்ல நொச்சி இலைய கம்புடன் கலந்து சேமிச்சு வெச்சா, பூச்சி தாக்குதல் குறையும்.

பாரம்பரிய முறையில் கம்பு சமையல்

கம்பின் நன்மைகள்
கம்பின் நன்மைகள்
  • முதல்ல கம்ப தண்ணீர்ல ஊற வெச்சுக்கனும்.
  • அது நல்லா ஊறிய பின் தண்ணீர வடிச்சுட்டு அந்தக் கம்ப தூய்மையான துணில பரப்பி வைக்கனும்.
  • அதனோட மேற்பரப்புல இருக்க ஈரம் போன அப்புறம் கம்ப எடுத்து உரலில் போட்டு இலேசா குத்தி அதுல இருக்குற உமிய நீக்கனும். அதுக்கு அப்புறம் முறத்துல போட்டு புடைச்சு, மீண்டும் உரலிலிட்டு நன்கு குத்தனும்.
  • அத அடுத்து பெரிய குருணை, சிறிய குருணை, மாவு அப்படீன்னு தனித்தனியே பிரிச்சுக்கனும்.
  • பின்னர் அடுப்புல முதலில் பெரிய குருணைய போட்டு வேக வைக்கனும்.
  • அது வேகக் கொஞ்சம் நேரம் அதிகமா ஆகும். அது வெந்த அப்புறம் சிறிய குருணைய அதனோட சேர்த்து கலக்கி வேக வைக்கனும்.
  • அதுவும் வெந்த அப்புறம் மாவையும் போட்டுக் கலக்கி, ஒரு குறிப்பிட்ட பதத்திற்கு வெந்த அப்புறம் அடுப்ப அணைச்சுட்டு பாத்திரத்த அப்படியே சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
  • அப்புறம் அது கெட்டியா ஆகிடும். அந்த கம்பஞ்சோற்ற கரண்டியில எடுத்து அதனோட குழம்பு, ரசம், அல்லது மோர் சேர்த்து சாப்பிடலாம்.
  • மீதம் ஆகிடுச்சுன்னா சிறுசிறு உருண்டைகளா பாத்திரத்திலிட்டு நல்ல நீரை ஊற்றி வைச்சுட்டோம்னா இரண்டு நாட்களுக்கு கெடாம இருக்கும்.
  • பழங்காலத்துல இருந்து கம்புல இந்த கம்பஞ்சோறு செய்யப்படுது. கம்பங்கூழ், கம்பு ஊறவைத்த நீர் ஆகியவையும் கம்போட பழைய உணவு வகைகள்.

உடனடி உணவுக் கலவை

தற்காலத்துல கம்பு உணவு அதிகம் சமைக்க எல்லாராலயும் முடியறது இல்ல. ஏன்னா கம்ப உணவை மாற்ற நிறைய வேலை செய்யணும். அதுக்கு நேரம் நிறைய செலவு ஆகும்.

இந்த குறைய போக்க, எளிதா கம்பு சமையல் செய்ய கோவைல இருக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உடனடி கம்மஞ்சோற்றுக் கலவைய உருவாக்கி அதுக்கு காப்புரிமை பெற்றுருக்காங்க.

பிற வகையான கம்பு சமையல்கள்

  • கம்பிலிருந்து பொதுவா கூழ், அடை, சாலட், கிச்சடி போன்றவற்ற செய்ய பயன்படுத்தலாம்.
  • கம்ப மாவா அரைச்சு கம்பங்களி, ரொட்டி அப்புறம் பிரட் செய்யலாம்.
  • லட்டு அல்லது சக்லி போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்கள் கூட செய்யலாம்.
  • முளைகட்டி வெச்சு கம்ப முளைப்பு வந்த பிறகு சாப்பிட்டா அதிக சத்தானதாவும் ஆரோக்கியமானதாவும் இருக்கும்.
  • புளித்த உணவு நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களோட வளர்ச்சிய ஊக்குவிக்கும். அதனால கம்ப ஒரே இரவில் ஊறவைத்து இட்லி, தோசை மற்றும் ஊத்தப்பம் செய்துகூட சாப்பிடலாம்.

கம்பின் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்

  • உடல் உஷ்ணமடைவத குறைக்குது.
  • வயிற்றுப்புண் மலச்சிக்கல் போன்றவற்ற தவிர்க்க உதவுது.
  • கூழ் செஞ்சோ அல்லது சாதமாவோ தினமும் சாப்பிட்டுட்டு வந்தோம்னா, உடல்ல இருக்க கெட்ட கொழுப்பு குறையும், உடல் நல்ல வலிமையாகும்.
  • இரத்தசோகையால அவதிப்படறவங்க கம்பு சாப்பிட்டு வந்தா அது குணமாகும்.
  • நீரிழிவு பிரச்சனை இருந்தா அரிசி உணவ தவிர்த்துட்டு, கம்பு மாதிரியான சிறுதானிய உணவுகள சாப்பிட்டோம் அப்படினா நம்ம உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும்.
  • நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.
  • குடல் புற்றுநோய தடுக்கவும் உதவும்.

முடிவுரை

பல சத்துக்கள் நிறைந்த கம்ப நாம, அளவோடு சாப்பிட்டு வந்தோம் அப்படினா நம்மோட உடல் மிகுந்த ஆரோகியத்தோட இருக்கும். இரவு நேரங்கள்ல சாப்பிடாம காலை உணவா அல்லது மதிய உணவா எடுத்துக்கிட்டா ரொம்ப நல்லது.

கம்பு பற்றிய பல்வேறு ஆரோக்கிய நன்மைகள விரிவா இந்த வலைப்பதிவுல பார்த்தோம். இயற்கையான முறைல விளைவிக்கப்பட்ட நாட்டுக் கம்பு மற்றும் அது சம்பத்தப்பட்ட பிற பொருட்களையும் நீங்க Uyir Organic Farmers Marketல வாங்கிக்கலாம்.