முருங்கை

முருங்கை

வரலாற்றில் ஒரு பார்வை

முருங்கை இந்திய துணைக்கண்டத்த பூர்வீகமா கொண்டது. Moringa oleifera என அறிவியல் ரீதியா அறியப்படும் முருங்கை, உலகம் முழுவதுமே உள்ள பல்வேறு கலாச்சாரங்கள்ல ஆழமா பின்னிப் பிணைந்த வரலாற்ற கொண்டிருக்கு. இந்திய ஆயுர்வேதம் முதல் பாரம்பரிய ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க மருத்துவம் வரை முருங்கையோட பயன் இன்றைக்கு வரைக்கும் பரவி இருக்கு.

அதனோட விதைகள், காய்கள் மற்றும் இலைகளுக்காக பரவலாக பயிரிடப்படுது. காய்கறிகளாவும், பாரம்பரிய மூலிகை மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தப்படுது.

முருங்கை மரத்தின் பண்புகள்

இது வேகமாக வளரும் தன்மை கொண்டது. மரவகைய சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரும். அனைத்து வகை மண்ணுலயுமே வளர்ந்தாலும், மணல் சார்ந்த நிலங்கள்ல நல்லா வளரக்கூடியது.

மேலும், நல்லா வறண்ட, பாசன வசதி குறைவா இருக்கற, வெப்பம் அதிகமுள்ள பகுதிகள்ல கூட வறட்சிய எதிர்த்து வளரக்கூடியது.

முருங்கைக் காய் நீளமா, தடி போன்ற வடிவத்துல இருக்கும். முன்னாடியெல்லாம் சிறிதா இருந்த முருங்கைக்காய் இப்போதுலாம் ஒரு மீட்டர் நீளத்துக்கு வளரக் கூடிய அளவுல புதிய ரகங்கள கண்டுபிடிச்சுருக்காங்க.

தமிழ்நாட்டிலுள்ள முருங்கை வகைகள்

தமிழ்நாட்டில யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை மற்றும் சில ஊர்கள்ல கிடைக்கும் நாட்டு முருங்கை வகைகள் இருக்கு.

ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்கள அளிக்கத் தொடங்குது. ஒரு மரத்திலிருந்து 200 முதல் 400 காய்கள் வரை கிடைக்கும்.

சமையல் பயன்பாடுகள்

முருங்கை

பொதுவா தெற்காசிய உணவு வகைகள்ல இத பயன்படுத்தறாங்க. முருங்கைக்காய் உணவுக்கு ஒரு தனித்துவமான சுவைய சேர்க்குது. இது சாம்பார் போன்ற சின்னச் சின்ன உணவுகள்ல கூட பங்களிக்குது.

  • முருங்கைக்காய் பிரட்டல், குழம்பு, சாம்பார் போன்றவற்ற செய்ய பயன்படுது.
  • முருங்கை இலை, கீரை போல வதக்கி, அல்லது வறுத்து உணவுக்குப் பயன்படுத்தலாம். முருங்கை கீரை சூப் பலரால் விரும்பி உண்ணப்படுது.
  • பிரியாணி மற்றும் புலாவ் போன்ற அரிசி உணவுகள்ல, முருங்கைக்காய் அதிக சுவைய சேர்க்குது.
  • முருங்கையோட மென்மையான பிஞ்சு காய்கள நாம ஊறுகாயில பயன்படுத்தலாம்.
  • இலைகள தின்பண்டங்கள் மற்றும் பஜ்ஜிகளாக கூட செய்து சாப்பிட்டு மகிழலாம்.
  • முருங்கை விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுது, அதையும் நாம உணவோட சுவைய மேம்படுத்துறதுக்கு பயன்படுத்தலாம்.
  • முருங்கை இலை மற்றும் விதை பொடிய நாம எல்லா உணவுகள்லயும் சேர்த்துக்கலாம்; அது சத்தோட சுவையும் தருது.

பிற பயன்பாடுகள்

முருங்கை
  • முருங்கை விதைல எண்ணெய் வளம் நிறைத்திருக்கு. இந்த எண்ணெய்  சமையலுக்கு மட்டும் இல்லாம பல்வேறு விஷயங்களுக்கு பயனளிக்குது.
  • பென் எண்ணெய்னு இத அழைப்பாங்க. பயோடீசல் உற்பத்தி, லூப்ரிகண்டுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளில  பயன்படுத்தப்படுது.
  • எண்ணெய் அழகுசாதனப் பொருட்கள், தோல் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு இயற்கையான தீர்வா பயன்படுத்தப்படுது.
  • பெரும்பாலும் கிரீம்கள் மற்றும் லோஷன்கள்ல பயன்படுத்தப்படுது. அதன் ஈரப்பதம் மற்றும் மென்மையாக்கும் பண்புகள் தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு நன்மை தருது.
  • முருங்கை விதைகள், இயற்கையான உறைதல் பண்புக்கு பெயர் பெற்றது. நொறுக்கப்பட்ட விதைகள நீர் சுத்திகரிப்பு செயல்முறைகள்ல கூட பயன்படுத்தலாம். இது அசுத்தங்கள அகற்ற உதவுது மேலும் தண்ணீர பாதுகாப்பானதா மாற்றுது.
  • இலை, பட்டை, பொடி ஆகியவற்றுல நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி இருக்கு. அதனால, மண்ணோட வளம் மற்றும் கட்டமைப்ப மேம்படுத்த அவற்ற இயற்கை உரமா நாம பயன்படுத்தலாம் அல்லது உரத்தில் சேர்த்துக்கலாம்.
  • சில கலாச்சாரங்கள்ல, வரலாற்றுல பார்த்தோம்னா பாரம்பரிய ஜவுளி வேலைகளுக்கு பயன்படுத்தப்படுது. மரத்தோட பட்டை மற்றும் பசைய சாயமிடுதல் அப்புறம் துணிகள துவைக்கும் போது அசுத்தங்கள அகற்றவும் பயன்படுத்தலாம்.
  • முருங்கை இலைகள் அப்புறம் காய்கள் கால்நடைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து தருது. விலங்குகளோட ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன மேம்படுத்த விவசாயிகள் பெரும்பாலும் அவற்ற துணைத் தீவனமா பயன்படுத்துறாங்க.
  • மரத்தோட பல்வேறு பகுதிகள் பூச்சிக்கொல்லி பண்புகள கொண்டிருக்கு. அவை இயற்கையான பூச்சிக் கட்டுப்பாட்டில பயனுள்ளதா இருக்கும். சில பூச்சிகள்ல இருந்து பயிர்கள பாதுகாக்க மரத்திலிருந்து எடுக்கப்படும் சாற்ற பூச்சிக்கொல்லியா நாம பயன்படுத்தலாம்.
  • முருங்கை மரத்தின் மரம் இலகுவானது மற்றும் மென்மையானது. சிறிய அளவிலான கட்டுமானம் மற்றும் கருவிகள தயாரிக்க ஏற்றது. கூடுதலா, பட்டையிலிருந்து வரும் நார்கள கயிறுகள் தயாரிக்க பயன்படுத்தலாம்.
  • இந்த மரத்தின் விரிவான வேர் அமைப்பு மண் அரிப்ப தடுக்க உதவுது. முருங்கை மரங்கள சரிவுகள் அல்லது அரிப்பு ஏற்படற இடங்கள்ல நடறது  மண் பாதுகாப்புக்கும் பங்களிக்கும்.

ஊட்டச்சத்துக்கள்

முருங்கைல இலைகள் மிகவும் சத்தான பகுதி; இதுல கேரட், ஆரஞ்சு அப்புறம் பாலை விடவும் அதிக சத்துக்கள் இருக்கு. இலைகள்ல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி இருக்கு. இதுல வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ அப்படீங்குற பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவையான அளவுல இருக்கறதால வளரும் நாடுகள்ல இது ஊட்டச்சத்து உணவா பரிந்துரைக்கப்பட்டுட்டு வருது.

இயற்கை முருங்கை இலை சூப் பொடி

முருங்கை

உயிர் ஆர்கானிக் உழவர் சந்தையில இருந்து கிடைக்குற இது ஒரு தனித்துவமான தயாரிப்பு.

இத உட்கொள்ள பொதுவான வழிகள் அப்படினு பார்த்தோம்னா; அவற்ற பழ சாறுகளில் சேர்க்கலாம், வறுத்த காய்கறிகளோடவும் பயன்படுத்தலாம். சைவம் சாப்பிடறவங்களுக்கு ஆட்டு இறைச்சி எலும்பு சூப்க்கு பதிலா இது ஒரு சிறந்த மாற்றா அமையுது.

  • இந்த சூப்பின் அதிக ஆக்ஸிஜனேற்றம் கண் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்த குணப்படுத்த நல்லது.
  • அதன் குறைந்த கலோரி உள்ளடக்கம், அதிக செறிவு, அத்தியாவசிய வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் சர்க்கரைய வெகுவா குறைக்க உதவுது.
  • தினசரி சூப்பை உட்கொள்வது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை கற்கள தடுக்க உதவும்.
  • செரிமானத்துக்கும் உதவுது.
  • கலோரிகள், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள பயன்படுத்தக்கூடிய வடிவங்களாக மாற்றுவதன் மூலம் இது சில வைரஸ் தொற்றுகள தடுக்க உதவுது.
  • அதிக வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் காரணமா பல்வேறு சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க உதவுது.
முருங்கை
முருங்கை

மேலும் முருங்கையிலை பொடி, முருங்கைக் கீரை சாத பொடி போன்றவற்றையும் Uyir Organic Farmers Marketல நீங்க வாங்கிக்கலாம். இதுல சாதப்பொடி கொண்டைக்கடலை, வங்கப்பருப்பு, எள், பூண்டு, சிவப்பு மிளகாய், மாம்பழம் மற்றும் இந்துப்பும் சேர்க்கப்பட்டு செய்யப்படுது.

முடிவுரை

நாம இந்த வலைப்பதிவுல முருங்கையோட பயன்கள அப்புறம் நன்மைகள  பார்த்தோம். அத புரிந்து ஏதோ ஒரு வகைல நாம முருங்கைய தினசரி உணவுல சேர்த்துட்டு வந்தோம்னா நாம ஆரோகியமான வாழ்க்கை வாழலாம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *