புதினா

புதினா (Puthina – Mint leaves)

புதினா (மெந்தா), வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட மூலிகைச் செடி. தமிழ்நாட்டோட சமையல் அப்புறம் இயற்கை மருத்துவ முறையில முக்கிய பங்கு வகிக்குது. தமிழகத்துல இத ஒரு மருத்துவ மூலிகை செடியா பல்லாண்டு காலமா பயன்படுத்திட்டு வர்ராங்க.

தமிழ்நாட்டில புதினா பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி இருந்து, பாரம்பரிய மருத்துவம் அப்புறம் சமையல் நடைமுறைகள்ல பயன்படுத்த பட்டுட்டு வருது. இந்த மூலிகை செடியோட குளிரூட்டும் பண்பு வெப்பமண்டல காலநிலையில மிக உபயோகமா இருக்கு.

வரலாற்றில் ஒரு பார்வை

புதினா வரலாற்றுல பழங்காலதுல இருந்தே இடம் பெற்றுட்டு வருது. குறைந்தபட்சம் கி. மு. 2000 க்கு முன்னாடி இருந்தே பல்வேறு கலாச்சாரங்கள்ல அதனோட பயன்பாடு இருந்துருக்கு.

ஈபர்ஸ் பாப்பிரஸ் (ஒரு மருத்துவ ஆவணம்) அப்படீங்குற எகிப்தோட பண்டைய நூல்கள்ல மருத்துவத்துக்காக புதினாவ பயன்படுத்தியதா குறிப்புக்கள் இருக்கு.

புதினா அதனோட நறுமண மற்றும் மருத்துவ குணங்களுக்காக கிரேக்க அப்புறம் ரோமானிய சமூகங்கள்ல ரொம்ப மதிக்கப்பட்டுச்சு. கிரேக்கர்கள் புதினா இலைகள தங்களோட குளியல் நீரின் வாசனைய அதிகரிக்க பயன்படுத்தினாங்க.

மறுமலர்ச்சியின் போது இது ஐரோப்பிய சமையலறைகளில பிரதான உணவா மாறுது. சாஸ்கள், சாலடுகள் மற்றும் இனிப்புகளில முக்கியமா இடம் பெருது. டியூடர் இங்கிலாந்தில, புதினா சாஸ் மட்டன் உணவுகளுக்கு ஒரு பாரம்பரிய துணையா மாறுச்சு.

21 ஆம் நூற்றாண்டில, புதினா ஒரு உலகளாவிய சமையல்ல மூல பொருளா ஆகிடுச்சு. தற்காலத்துல இது பல்வேறு வகையான உணவு வகைகள்ல முக்கியமா இடம்பெறுது.

புதினாவின் பண்புகள் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள்

புதினா

புதினா எல்லா பருவ காலத்துலையும் நமக்கு கிடைக்குற ஒரு அற்புத பொருள்.

இதுக்கு மிளகுக்கீரை அப்படீன்னு இன்னொரு பெயரும் இருக்கு. மிளகுக்கீரை (மெந்தா × பைபிரிட்டா) அப்புறம் ஸ்பியர்மிண்ட் (மெந்தா ஸ்பிகேட்டா) ஆகியவை தமிழ்நாட்டில பரவலா காணப்படுற வகைகள்.

புதினா ஒரு நல்ல வாசனை தர கூடிய தாவரம். புதினா சதுர வடிவ தண்டுகள கொண்டது. சிறிய இலைகள் அப்புறம் மெந்தால் எண்ணைய தன்னோட இலைகள்ல கொண்டிருக்கு.

இதுல வைட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்து இருக்கு. புதினா, புத்துணர்ச்சியூட்டும் சுவை மட்டும் இல்லாம, ஊட்டச்சத்து நன்மைகளையும் வழங்குது.

இத எளிதா வீட்டுலயே வளர்க்க முடியும். வீட்டு தொட்டிகள்ல புதினாவ வளர்த்து, தினமும் பயன்படுத்திக்கலாம்.

புதினா எண்ணெய்

புதினா

புதினாவோட இலைகள மற்றும் பூக்கள உலர்த்தி காய வெச்சு அதுல இருந்து மெந்தால் எண்ணெய் செயப்படுது. இத ஆல்கஹால் தயாரிக்கறதுக்கு பயன்படுத்தறாங்க.

இந்த எண்ணெய் மாத்திரை வடிவத்துல கூட கிடைக்குது. நிறைய உணவுப் பொருட்கள்ளையும் பயன்படுத்தப்படுது.

மெந்தால் நம்ம மனசுக்கு ஒரு அமைதிய குடுக்கற தன்மை கொண்டு இருக்கு. அதனால இந்த எண்ணெய்ய இயற்கை வைத்தியங்கள் அப்புறம் அரோமோதெரபிகள்ள பயன்படுத்தறாங்க. மேலும், வயிற்று பிரச்சனைகள் அப்புறம் நெஞ்செரிச்சல சரி செய்யுது.

சமையல் பயன்பாடுகள்

புதினா
  • உயிர் இயற்கை உழவர் சந்தைல புதினா தொக்கு கூட விற்பனை செய்யப்படுது. இது இயற்கையான முறைல விளைவிக்கப்பட்டு நல்ல தரமான முறைல விற்பனைக்கு வர்ரது.
  • இதனோட வாசனையால பிரியாணி, தக்காளி சாதம், காய்கறி சாதம் போன்ற கலவை சாதங்கள்ல பயன்படுத்தப்படுது.
  • மேலும் புதினா சட்னி, சர்பத், புதினா சாதம், துவையல், பொரியல், ஜூஸ், சாலட் அப்படினு பல விதமா நாம சாப்பிடலாம்.
  • நிறைய மருத்துவ குணங்கள கொண்டு இருக்கறதால இந்த புதினா இலைகள்ல நீங்க டீ போட்டும் குடிக்கலாம்.
  • மேலும் புதினா இலைகள நல்லா அரைச்சு அதுல இருந்து சாறு எடுத்து, அனைத்து வகையான மாவோடவும் சேர்த்து சமைத்து புதினா தோசை, சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா அப்படினும் செய்து சாப்பிட்டு மகிழலாம். இது ஒரு புத்துணர்ச்சியான சுவைய நமக்கு அளிக்குது.
  • தினமும் காலைல  சுமார் 7 முதல் 10 புதினா இலைகள் வரை ஒரு டம்ளர் தண்ணீர்ல 5 நிமிடம் கொதிக்க வெச்சு, வடிகட்டி, காலையில குடிங்க. புதினா தேநீர் குடிச்சுட்டு வந்தீங்கன்னா உங்களோட கவலையான மனநிலை, வயிற்று வலி, சோர்வு, ஜலதோஷம் போன்ற எல்லா பிரச்னைகள்ல இருந்து தீர்வு கிடைக்கும்.

பிற பயன்பாடுகள்

  • வாயில இருக்குற துர்நாற்றத்த போக்க இத வாயில போட்டு மெல்றதால நல்ல புத்துணர்ச்சி கிடைக்குது.
  • அதனால தான் மெந்தோ ஃபிரஸ், சுவீங்கம், மவுத் வாஷ் போன்ற பொருட்கள்ல கூட புதினா சேர்க்கப்படுது.
  • இந்த இலையில இருந்து பெறப்படுற எண்ணெய் நம்மளோட உடம்பு வலிகள நீக்க உதவுது.
  • மேலும் சோப்பு, டூத் பேஸ்ட் போன்ற பொருட்கள் செய்யறதுலையும் பயன்படுது.

புதினா மருத்துவ குணங்கள்

  • தினசரி உணவுல நாம பயன்படுத்துற புதினா எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள கொண்டிருக்கு.
  • இது உடம்புக்கு நல்ல குளிர்ச்சிய குடுக்கக் கூடியது. தலைவலி, ஜீரண சக்தி, அப்புறம் வாய் ஆரோக்கியம் அப்படீன்னு பல விஷயங்களுக்கு பயன்படுது.
  • புதினாவில இருக்கற வைட்டமின் ஏ அப்புறம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியதுக்கு மிக நல்லது.
  • புதினாவுல அதிக ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுது. அதனால இது ஒவ்வாமைக்கு நல்ல மருந்தா பயன்படும்.
  • ஜீரண சக்திய அதிகரிக்கறதால செரிமான கோளாறுகளுக்கும் இது நல்லது. அசைவ உணவு சாப்பிட்ட அப்புறம் புதினா தண்ணீர் குடிப்பாங்க அதுக்கு இது தான் காரணம்.
  • புதினா வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள குணப்படுத்தும். வீக்கம், வாயு, மாதவிடாய் அந்த மாதிரி வலிகளுக்கும் கூட நிவாரணம் அளிக்குது.
  • இது தலைவலியில இருந்தும் நிவாரணம் அளிக்குது. வாய் துர்நாற்றத்த முழுமையா நீக்குது.
  • குடல் எரிச்சல் நோயில இருந்தும் விடுதலை அளிக்குது.
  • வாந்தி, குமட்டல் போன்ற நிலைமையையும் இந்த இலைகளோட நறுமணம் தடுக்குது.
  • புதினாவுல இருக்கற மெந்தால் மூக்கடைப்ப சரி செய்யுற தன்மை கொண்டது.
  • இருமல் மற்றும் அதனால ஏற்படுற எரிச்சல்ல இருந்து நிவாரணம் அளிக்குது.
  • ஜலதோஷத்துக்கும் இது ஒரு நல்ல மருந்து.
  • தொண்டை வலி, காய்ச்சல் போன்றவற்ற கூட குறைக்குற வல்லமை இதுக்கு இருக்கு. சருமத்த மென்மையாவும் இது ஆக்குது.
  • சருமத்தில உள்ள தொற்று, அரிப்புகள குணப்படுத்துது.
  • முகப்பருவையும் சரிசெய்யுது.

முடிவுரை

இந்த வலைப்பதிவுல புதினாவோட வரலாறு, பண்புகள், ஊட்டச்சத்து நன்மைகள், சமையல் அப்புறம் சமையல் அல்லாத பிற பயன்பாடுகள், மற்றும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரிஞ்சுக்கிட்டோம்.

இதனோட நன்மைகள உணர்ந்து நீங்க புதினாவ தினமும் உங்க உணவுல சேர்த்து நல்ல ஆரோக்கியம் பெற்று மகிழுங்க.

மேலும், ஆரோக்கியமான இயற்கையான முறையில விளைவிக்கப்பட்ட பிற உணவு பொருட்களையும் நீங்க Uyir Organic farmers Marketல வாங்கிக்கலாம்.