தூயமல்லி அரிசி

தூயமல்லி அரிசி

இந்திய உணவு வகைகள்ல, தூயமல்லி அரிசி பல நூற்றாண்டுகளா போற்றப்படற பாரம்பரிய வகைகள்ல ஒன்று.

தூய்மைனு  பொருள்படற “தூய” அப்படிங்கற வார்த்தையும் அப்புறம் இது பார்க்கறதுக்கு மல்லிகை பூ மொட்டு மாதிரி இருக்கறதால மல்லிகை பூவைக் குறிக்குற “மல்லி” என்ற வார்த்தையும் சேர்ந்து பெயர் பெற்றது இந்த அரிசி.

இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள வழங்குது. வழக்கமான பொன்னி அரிசி மாதிரியே, வேகவைத்த தூயமல்லி அரிசியையும் பலவகையான உணவுகள்ல சேர்க்கலாம்.

இந்த வலைப்பதிவுல அதனோட தோற்றம், சமையல் முறைகள், ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் தூயமல்லி அரிசி ஏன் தற்காலத்துல பிரபலமாகிட்டு வருது அப்படினு பார்க்கலாம்.

வரலாற்றில் ஒரு பார்வை

பண்டைய காலத்துல பேரரசர்களோட விருப்பமான தேர்வா தூயமல்லி அரிசி இருந்துச்சு. இது ஒரு வளமான கலாச்சார பாரம்பரியத்த கொண்டிருக்கு.

சமையல் பயன்பாடு

தூயமல்லி அரிசி

தூயமல்லி அரிசிய 2 கப் தண்ணீர் மற்றும் 1 கப் அரிசி என்ற எளிய விகிதத்தில தயாரிக்கலாம். இந்த அரிசி வகை பிரியாணி போன்ற பாரம்பரிய உணவுகள செய்றதுக்கு ஏற்றது.

அதுமட்டும் இல்லாம கொழுக்கட்டை, பொங்கல், இட்லி/தோசை மாவு, அப்புறம் பலவிதமான சுவையுள்ள அரிசி உணவுகள இந்த அரிசி கொண்டு சமைக்கலாம்.

தூயமல்லி அரிசி: ஊட்டச்சத்துக்கள்

தூயமல்லி அரிசி நல்ல ஆற்றல் மிக்கது. இது புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது.

இது நரம்பு மண்டலத்த பலப்படுத்துது, நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்குது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்குது.

தூயமல்லி அரிசியின் நன்மைகள்

தூயமல்லி அரிசி

இதனோட நன்மைகள் சமையலுக்கு அப்பாற்பட்டது.

  • இது நோயெதிர்ப்பு மண்டலத்த மேம்படுத்துது.
  • ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால, சருமத்த இளமையாவும், ஆரோக்கியமாவும், மிருதுவாவும் வெச்சுக்குது, சுருக்கங்கள் ஏற்படாம தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கு.
  • வேகவைத்த தூயமல்லி அரிசிய உட்கொள்வது உள் உறுப்புகள வலுப்படுத்த, நீண்ட காலம் இளமையா வைத்திருக்க உதவுது.
  • இது நரம்பு மண்டலத்தோட சரியான செயல்பாட்டுக்கும் பங்களிக்குது, உடல்ல உள்ள நரம்புகளையும் முழு வலையமைப்பையும் சுறுசுறுப்பாவும் வலுவாகவும் வைத்திருக்கும்.
  • இந்த அரிசியோட இயற்கையான பண்புகள் என்னனா நம்மளோட மனத சுறுசுறுப்பா வெச்சுக்கும், நம்மோட நினைவாற்றல மேம்படச் செய்யுது மற்றும் சிறந்த செரிமானத்துக்கு பங்களிக்குது.
  • தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் அப்புறம் இரசாயனங்கள் இல்லாம பாரம்பரிய விவசாய முறைகள பயன்படுத்தி வளர்க்கப்படுது.
  • நிலையான விவசாய நடைமுறைகள ஆதரிக்குது, சுற்றுச்சூழல் நல்வாழ்வ மேம்படுத்துது.
  • பசையம் (குளுட்டன்) இல்லாதது, இது செலியாக் நோய் அப்புறம் பசையம் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு ஏற்றது.
  • குறைந்த கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது, இது எந்த உணவிற்கும் ஆரோக்கியமான கூடுதலா இருக்கும்.
  • உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு, தூயமல்லி அரிசி ஒரு சிறந்த தேர்வா இருக்கு. இது குறைந்த கார்போஹைட்ரேட்டுகள், போதுமான புரதங்கள், கால்சியம் அப்புறம் இரும்புச்சத்து, மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள வழங்குறதால உடல் எடை குறைய உதவுது.
  • இது 57 கிளைசெமிக் குறியீட்ட கொண்டிருக்கு, இது மற்ற அரிசி வகைகள விட குறைவானது. இரத்த சர்க்கரை அளவ சமநிலைப்படுத்த விரும்புறவங்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையுது.
  • எல்லாத்துக்கும் மேல, இது எலும்புகள் மற்றும் தசைகள பலப்படுத்துது. இதனால தூயமல்லி அரிசி வெள்ளை அரிசிக்கு ஒரு நல்ல மாற்றா அமையுது.

முடிவுரை

இந்த பாரம்பரிய அரிசியின் உண்மையான மற்றும் இயற்கையான தயாரிப்ப விரும்புறவங்களுக்கு, உயிர் ஆர்கானிக் உழவர் சந்தையில (Uyir Organic Farmers Market) விவசாயிகளால அக்கறையுடன் பயிரிடப்படும் தூயமல்லி அரிசி கிடைக்கும். எனவே இந்த அரிசிய அனைவரும் தினசரி உணவுல சேர்த்து ஆரோகியமான வாழ்க்கை வாழலாம்.