திராட்சை

திராட்சைப்பழம்

வரலாற்றில் ஒரு பார்வை

காட்டு திராட்சை இக்காலத்துல இருக்க துருக்கி, ஜோர்ஜியா அப்புறம் ஈரான் நாட்டுல தோன்றியதா நம்பப்படுது. இந்த காட்டு வகைகள் தான் தற்காலத்துல நாம அறிந்த திராட்சைகளுக்கு மூதாதையர்கள்னு சொல்லலாம். இந்த வலை பதிவுல நாம திராட்சையின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

எகிப்தியர்கள், ஃபீனீசியர்கள், கிரேக்கர்கள் அப்புறம் ரோமானியர்கள் போன்ற பண்டைய நாகரிகங்களில பழத்திற்காகவும், ஒயின் தயாரிப்பிற்காகவும் திராட்சை பயிரிடப்பட்டுச்சு.

திராட்சை மொராக்கோ, வடக்கு போர்ச்சுகல், தெற்கு ஜெர்மனி, வட ஈரான், மத்திய ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா போன்ற இடங்கள தாயகமாக கொண்டது.

திராட்சை வகைகள்

திராட்சையின் நன்மைகள்

இது விட்டிஸ் பேரினத்த சேர்ந்தது. இப்போ 5000 முதல் 10,000 வரையான திராட்சை வகைகள் இருக்கு.

அதுல சில முக்கிய வகைகள் அப்படீன்னு பார்த்தோம்னா பன்னீர் திராட்சை, அனாப்-சாகி, ம்சன் (விதையில்லா திராட்சை), அர்காவதி, அர்கா சியாம், அர்கா காஞ்சனா, அர்கா ஹான்ஸ், மாணிக்சமான், சோனாகா, சரத்(விதையில்லா திராட்சை) அப்படீன்னு பல வகையான திராட்சைகள் இருக்கு.

திராட்சையின் பண்புகள்

திராட்சையின் நன்மைகள்

திராட்சைப்பழம், இதுக்கு இன்னொரு பெயர் கொடிமுந்திரிப் பழம். இது இலைய உதிர்க்குற பண்பு கொண்ட பல ஆண்டுகள் வளர கூடிய கொடி வகை.

இது சிறிய உருண்டையா முட்டை வடிவ பழங்கள தருது. கனிகள் குலை குலையா காய்க்கும். திராட்சை ஆறுல இருந்து முன்னூறு வரையான பழங்கள கொண்ட குலையா காய்க்குது. இது கறுப்பு, கருநீலம், மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு அப்படீன்னு பல நிறங்கள்ல காணப்படுது.

வெள்ளைத் திராட்சை அப்படீன்னு சொல்லப்படற பச்சை நிறத் திராட்சைகள், சிவப்புத் திராட்சையில இருந்து உருவானது.

நாம திராட்சைய பச்சையா சாப்பிடறது விட அதிகமா உலர் திராட்சையே பயன்படுத்தறோம்.

ஊட்டச்சத்துக்கள்

திராட்சையில பலவகைகள் இருந்தாலும், பொதுவா திராட்சையில அதிக அளவு நீர், மாவுப்பொருள், உப்புநீர் அப்புறம் கொழுப்புச் சத்து இருக்கு.

இதில வைட்டமின் ‘பி’ அப்புறம் சுண்ணாம்புச் சத்து அதிகமா இருக்கு. அதனால குழந்தைகள்ள இருந்து பெரியவர்கள் வரை எல்லாருமே சாப்பிடறதுக்கு உகந்தது. மேலும், இந்தப் பழம் அதிக மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கு.

திராட்சைகளில வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஃப்ரீரேடிக்கல் கூறுகள் அதிகமா இருக்கு. மேலும் இதுல ரெஸ்வெராட்ரோல் அப்படீங்குற பைட்டோ கெமிக்கல் இருக்கு. இது கொழுப்ப குறைக்க உதவுது மேலும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்குது.

சமையல் பயன்பாடுகள்

  • திராட்சைகள் இனிப்பு அப்புறம் புத்துணர்ச்சி தர்ற சுவைகொண்ட பழவகை. திராட்சைய பச்சையாவோ ஜாம், பழரசம் செய்தோ உண்ணலாம்.
  • இதுல இருந்து வினிகர், வைன், திராட்சை விதை பிழிவு, திராட்சை விதை எண்ணெய் அப்படீன்னு நிறைய பொருட்கள் செய்யப்படுது.
  • திராட்சைய இனிப்புகள்ல சேர்க்கும்போது அதுக்கு இயற்கையான இனிப்பு சுவைய குடுக்குது.
  • உலர்த்த திராட்சையையும் நாம பிற உலர் பழங்களோட சேர்த்து சுவையான சத்தான இனிபுகள செய்து சாப்பிடலாம்.
  • இத உறையவெச்சும் ஐஸ்கிரீம் அப்புறம் பிற சிற்றுண்டிகளோட சேர்த்து சாப்பிடலாம்.
  • சிவப்பு அப்புறம் பச்சை திராட்சை ரெண்டையும் சாலடுகள்லயும் சேர்த்துக்கலாம். பச்சை சாலடுகள், சிக்கன் சாலடுகள் இல்லைனா தானிய சாலட்களில நல்ல சுவைய தருது.
  • திராட்சை ஜாம், பெரும்பாலும் பிரட் டோஸ்டுல சேர்த்தோ அல்லது இனிப்புகளுக்கு மேல தடவியோ பயன்படுத்தப்படுது.
  • நிறைய திராட்சைல செய்யப்பட்ட மிட்டாய்களும், திராட்சை ஜாம் தடவப்பட்ட ரொட்டிகள் நமக்கு மிக எளிதா கடைகள்ல கிடைக்கும்.
  • திராட்சை ஒயின் தயாரிப்புல ஒரு முக்கிய மூல பொருளா இருக்கு. ஒவ்வொரு வகை திராட்சைல இருந்து செய்யப்படற ஒயினும் ஒவ்வொவொரு வகையான சுவைய தருது.
  • திராட்சை பழச்சாற மற்ற புத்துணர்ச்சியூட்டுற பானங்களுக்கு அடிப்படையா நாம பயன்படுத்தலாம்.
  • மற்ற பழங்கள் அப்புறம் காய்கறிகளோட நாம இத கலக்கும்போது இது ஸ்மூத்திகளுக்கும் சாலடுகளுக்கும் இயற்கையான இனிப்பு அப்புறம் ஊட்டச்சத்து மதிப்ப சேர்க்குது.
  • திராட்சை பேக்கிங், காலை உணவு, அப்புறம் சிற்றுண்டியாவும் பயன்படுத்தப்படுது.
  • வெளிநாடுகளில இறைச்சிகள், குறிப்பா கோழி அப்புறம் பன்றி இறைச்சியோட சில சாஸ்கள் இல்லைனா சட்னிகள உருவாக்க திராட்சைகள சமைக்கறாங்க.

பிற பயன்பாடுகள்

திராட்சை பல்வேறு தொழில்கள்ல சமையல் இல்லாத மற்ற பயன்பாடுகளையும் கொண்டிருக்கு.

  • ஒயின் உற்பத்தி தான் இதுல மிக முக்கியான ஒன்னு. திராட்சைகள் நல்லா புளிக்கவைக்கப்பட்டு அதுல இருந்து ஒயின் தயாரிக்கப்படுது.
  • உலர்ந்த திராட்சை, அதுல இருக்கற ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் காரணமா நாட்டுப்புற மருத்துவத்துளையும் மற்ற அழகுசாதனப் பொருட்கள்லயும் பயன்படுத்தப்படுது.
  • திராட்சை விதைகள் அப்புறம் திராட்சை விதை எண்ணெய் ஆகியவை உணவுப் பொருட்கள், தோல் பராமரிப்பு அப்புறம் முடி பராமரிப்புப் பொருட்களில பயன்படுத்தப்படுது.
  • ஒயின் தயாரித்த பிறகு மிச்சமா நமக்கு கிடைக்குற திராட்சை போமாஸ், இயற்கையான வண்ண சாயங்கல உருவாக்க பயன்படுத்தலாம்.
  • இந்த பிரித்து எடுக்கப்படற வண்ண சாயத்த ஜவுளிக்கு நாம சாயமிட பயன்படுத்திக்கலாம்.
  • திராட்சை சாறுகள் வாசனை திரவியம் செய்ய பயன்படுது. இது ஒரு நல்ல சுவையான பழத்தோட நறுமணத்த தர்றதால ரொம்ப பிரபலமானதும் கூட.
  • திராட்சைகளோட ஆக்ஸிஜனேற்ற அப்புறம் வயதாவத எதிர்க்கிற பண்புகளுக்காக அழகுசாதன பொருட்கள்லயும் பயன்படுத்தப்படுது.
  • கலை அப்புறம் கைவினை பொருட்கள்லயும், திராட்சை, அதனோட இலைகள் அப்புறம் கொடிகள் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்படுது.

உலர் மஞ்சள் திராட்சையின் நன்மைகள்

திராட்சையின் நன்மைகள்

இயற்கையான மற்றும் தரமான முறைல விளைவிக்கப்பட்ட உலர் மஞ்சள் திராட்சை உங்களுக்கு வேணும் அப்படீன்னா நீங்க உயிர் உழவர் சந்தைல வாங்கிக்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டியா இருக்கும்.

  • இது ஒட்டுமொத்த உடல் கொழுப்ப குறைக்க உதவுது.
  • ரெஸ்வெராட்ரோல் போன்ற திராட்சை கலவைகள் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டு உள்ளதா ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.
  • அவை உறுப்புகள் மற்றும் எலும்புகளில பொதுவா நேர்மறையான விளைவ கொண்டிருக்குது.
  • மேலும் இது உங்கள இளமையா வெச்சுருக்கும்.
  • மன அழுத்தத்தையும் குறைக்குது.
  • ஒட்டுமொத்தமா, உலர் மஞ்சள் திராட்சைய தினமும் சாப்பிடுவது உங்கள் செரிமான ஆரோக்கியத்த மேம்படுத்தும்.

உலர் மஞ்சள் திராட்சைய எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் சமச்சீரான உணவ சாப்டுட்டு வரீங்க அப்படீன்னா தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிடலாம். உலர் திராட்சை மற்றும் பிற உலர் பழங்கள காலையில சாப்பிடுவது நல்லது.

முடிவுரை

திராட்சைய தினமும் சாப்பிட்டுட்டு வந்தா அதனோட விளைவா, உங்களோட உடம்புக்கு ஒரு நல்ல ஆரோக்கியம் கிடைக்குது. நொறுக்குத் தீனிகள அதிகமாக உட்கொள்வத தவிர்த்துட்டு, உணவுக்கு இடையில சிற்றுண்டியா இதை நீங்க சாப்பிடலாம்.

உங்க உடலுக்கு நல்ல ஆரோகியத்தையும் பொலிவையும் இது வழங்குது. இது இல்லாம மேலும், பிற தரமான இயற்கை உணவுகளையும் நீங்க Uyir Organic Farmers Market ல வாங்கிக்கலாம்.