கொத்தமல்லி இலைகள்

கொத்தமல்லி இலைகள்

இத நாம தமிழுல ‘தனியா’ அப்படீனும் அழைப்போம். பொதுவா இதனோட இலைகள் அப்புறம் காய்ந்த விதைகள் தான் உணவுகளில சமைக்க பயன்படுத்தப்படுது. இது ஒரு பழமையான மூலிகை. கி.மு 5000-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்படுது. கொத்தமல்லி இலைகள சேர்க்காம பல பேருக்கு சமையலே முடிவடையாது. அப்படிப்பட்ட கொத்தமல்லியின் நன்மைகள் என்ன என்ன அப்படீன்னு இந்த வலைப்பதிவுல பாக்கலாம் வாங்க.

வரலாற்றில் ஒரு பார்வை

இந்த மூலிகை செடி தோன்றியது இத்தாலியில தான்.

கொத்தமல்லி பல நூற்றாண்டுகளா தமிழ் சமையல்ல முக்கிய உணவா இருந்துட்டு வருது. இது பல்வேறு உணவுகளுக்கு நல்ல சுவையயும் புத்துணர்ச்சியயும் தருது.

தமிழர்களோட வீடுகளில கொத்தமல்லி வெறும் மூலிகை செடி மட்டுமில்லாம; ஒரு பாரம்பரிய உணவு பொருளாவும் இருக்கு. சாம்பார், ரசம் அப்புறம் சட்னி ஓட சுவைய உயர்தர ஒரு முக்கிய பொருளாவும் இருக்கு.

எகிப்து போன்ற பழங்கால நாகரிகங்களில கூட பயன்படுத்தப்பட்டு வந்ததா வரலாறு கூறுது.  இது ஒரு நறுமண மூலிகை செடி அப்படீனும் சொல்லலாம். இத ஆங்கிலத்துல Coriander அல்லது Cilantro அப்படீன்னு அழைப்பாங்க.

கொத்தமல்லியில் உள்ள சத்துக்கள்

கொத்தமல்லி இலைகள் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள கொண்டு இருக்கு.

  • கொத்தமல்லி இலையில இருக்க வைட்டமின் ஏ ஆரோக்கியமான கண்பார்வைய பராமரிக்க உதவுது.
  • இதுல இருக்க வைட்டமின் சி நோய்த்தொற்றுகளுக்கு எதிரா உடல பாதுகாக்குது.
  • அடுத்து இதுல இருக்க வைட்டமின் கே இரத்தம் உறையறதுக்கும், எலும்பு ஆரோகியத்துக்கும் முக்கிய பங்கு வகிக்குது.
  • பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் ஆரோக்கியமான இதயம், வலுவான எலும்புகள் அப்புறம் ஒட்டுமொத்த நல்வாழ்வ பராமரிக்க பங்களிக்குது.

கொத்தமல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • இதுல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைஞ்சுருக்கு. அது உடலில இருக்க ஃப்ரீ ரேடிக்கல்கள எதிர்த்துப் போராட உதவுது; அதன் மூலமா நோய்கள தடுக்குது.
  • கொத்தமல்லியில உள்ள பீட்டா கரோட்டின் சரும ஆரோக்கியத்துக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்துல இருந்தும் பாதுகாக்க உதவுது.
  • கொத்தமல்லியில இருக்க நார்ச்சத்து செரிமான நொதிகளோட உற்பத்திய தூண்டி ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவி, மலச்சிக்கல தடுக்குது.
  • கொத்தமல்லி கொலஸ்ட்ரால் அளவு அப்புறம் இரத்த அழுத்தத்த குறைக்கறது மட்டும் இல்லாம, ஆரோக்கியமான இதயத்துக்கும் பங்களிக்குது.
  • கொத்தமல்லி எல்.டி.எல் (கெட்ட) கொழுப்போட அளவ குறைச்சு, இதய நோய்கள் வர்ற வாய்ப்பையும் குறைக்குது.
  • மேலும், மூட்டு வலி அப்புறம் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்குது.
  • கொத்தமல்லி இலையோட சாறு மூளை செல்கள சேதத்துல இருந்து பாதுகாக்குது. அதோட நினைவாற்றலையும் மேம்படுத்துது.

இதனோட இந்த நன்மைகள பெற நீங்கள் சாப்பிடற அனைத்து உணவுகள்லயுமே இத நீங்க சேர்த்துக்கலாம்.

சமையல் பயன்பாடுகள்

 உலக அளவுல கொத்தமல்லியோட சமையல் பயன்பாடு ரொம்ப முக்கியமானதா இருக்கு.

  • மெக்சிகன் சல்ஸாகள்ல இருந்து இந்திய கறிகள் வரை கொத்தமல்லியோட, தண்டுகள் மற்றும் விதைகள் அனைத்தும் பயன்படுத்தப்படுது.
  • முக்கியமா கொத்தமல்லி வெச்சு சட்னிகள் அப்புறம் சாஸ்கள் செய்யப்படுது.
  • இது சூடான உணவு குளிர்ந்த உணவு அப்படீன்னு எல்லாத்துலயும் பயன்படுத்தப்படுது.
  • சூப்கள்ள அப்புறம் சாஸ்கள்ல இது பயன்படுத்தபடுது.
  • தாய்லாந்துல மிக பிரபலமான டாம் யம் சூப்ல முக்கிய சமையல் பொருள் கொத்தமல்லி இலைகள் தான். அதனோட சுவை அதுல இருந்துதான் அதுக்கு கிடைக்குது.
  • மேலும் தமிழக உணவுகள்ல, கொத்தமல்லி சாதம், மல்லி இலை உளுந்த வடை, கொத்தமல்லி துவையல், கொத்தமல்லி சிக்கன் கிரேவி, மல்லி சிக்கன், கொத்தமல்லி தேங்காய் சட்னி, கார சாரமான கொத்தமல்லி பகோடா, பொடி, காபி, தோசை, வடை, சப்பாத்தி, தயிர் பச்சடி, ரசம், ஊறுகாய், பரோட்டா அப்படீன்னு பல விதமான உணவு வகைகள கொத்தமல்லி கொண்டு சமைத்து சாப்பிட முடியும்.

சமையல் அல்லாத பிற பயன்பாடுகள்

கொத்தமல்லி இலைகள்
  • பாரம்பரிய மருத்துவத்தில, கொத்தமல்லி அதனோட அழற்சி எதிர்ப்பு அப்புறம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்காக பயன்படுத்தப்படுது, இது பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில உதவுது.
  • அப்புறம் வாசனை திரவியத் தொழிலிலயும் உபயோகப்படுது.
  • கொத்தமல்லியில இருந்து பிரித்தெடுக்கப்படுற அத்தியாவசிய எண்ணெய் நறுமண சிகிச்சையில பயன்படுது. இது மன நலத்துக்கு பங்களிக்குது.

முடிவுரை

இந்த வலைப்பதிவுல கொத்தமல்லி இலைகளோட அனைத்து பயன்களையும் நன்மைகளையும் பார்த்தோம். இயற்கையான முறைல வளர்ந்த கொத்தமல்லி இலைகள நீங்க தேர்ந்தெடுத்து வாங்கி உணவுல சேர்த்துக்கோங்க.

பிற உணவுப்பொருட்கள பத்தி தெரிஞ்சுக்க எங்களோட மற்ற வலைப்பதிவுகள பாருங்க. மேலும், சிறந்த இயற்கை விவசாய்களால விளைவிக்கப்பட்ட தரமான உணவு பொருட்கள நீங்க உயிர் இயற்கை உழவர் சந்தைல (Uyir Organic Farmers Market) வாங்கிக்கலாம்.