கருப்புகவுனி அரிசி

பர்மா கருப்புகவுனி அரிசி (Burma Black Rice)

வரலாற்றில் ஒரு பார்வை

கருப்புகவுனி அரிசி (Burma Black Rice) பண்டைய சீனாவ பூர்விகமா கொண்டது. பண்டைய சீன மன்னர்கள், அரச குடும்பத்த சேர்ந்தவங்க, மந்திரிகள், அப்புறம் பெரிய வியாபாரிகள் மட்டும் பயன்படுத்திட்டு வந்துருக்காங்க.

பண்டைய தமிழ் மன்னர்கள் சீன மன்னர்களோட வைத்திருந்த கப்பல் போக்குவரத்து அப்புறம் வியாபாரம் காரணமா இந்த கருப்பு கவுனி அரிசி தமிழகம் வந்தடைந்தது. கருப்புகவுனி இதனால தமிழ்நாட்டோட பாரம்பரிய அரிசி வகைகள்ல ஒன்னா இருக்கு.

சீன அரசர்கள் அவுங்களோட நாட்டுக்கு வர்ற மற்ற நாட்டு அரசர்களுக்கும் அப்புறம் கப்பல் மூலமா வரும் வியாபாரிகளுக்கும், கருப்பு கவுனி அரிசியால செய்யப்படற உணவ விருந்தா கொடுத்துருக்காங்க.

சீனாவுல இந்த அரிசிய பொது மக்கள் பயன்படுத்த தடை கூட செய்யப்பட்டு இருந்துச்சு. ஏன்னா இந்த அரிசில அவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கு. அவுங்க கடவுளே அவங்களுக்கு குடுத்த பரிசா இத கருத்தினாங்க.

இது அரசர்களுக்கும் அவனுங்களோட குடும்பத்தார்களுக்கும் மட்டுமே குடுக்கப்படற அரிசி அப்படீன்னு நினைச்சாங்க. அதனால பிற மக்கள் அத சாப்பிடக்கூடாதுனு தடை செஞ்சுட்டாங்க.

வரலாற்றுல இதுக்கு தடை செய்யப்பட்ட அரிசி “Forbidden Rice” அப்படீன்னு இன்னோரு பெயரும் இருக்கு. அரசரோட இந்த கட்டளைய மீறி பொது மக்கள் யாராவது இந்த அரிசிய சாப்பிட்டா அதுக்கு அவங்களுக்கு தண்டனை குடுக்கப்பட்டுச்சு.

கருப்புகவுனி அரிசி பண்புகள்

கருப்புகவுனி அரிசி

இந்த அரிசி சமைக்கறதுக்கு முன்னாடி கருப்பா தெரிஞ்சாலும் சமைத்த அப்புறம் ஊதா நிறத்தில இருக்கும்.

சிவகங்கை மாவட்டத்துல இருக்க அனுமந்தக்குடி அப்படீங்குற நாட்டுப்புற பகுதியில அதிக அளவுல பயிர்ப்பட்டு வருது.

இது ஒரு நீண்டகால நெற்பயிர். சுமார் ஐந்து மாத காலம் முதல் ஆறு மாத காலத்தோட முடிவுல (150 – 170 நாட்கள்) அறுவடைக்கு வர கூடிய நெற் பயிர் வகை இது.

மேலும் இந்த வகை நெற்பயிர், இயற்கை உரங்களான பசுந்தாள், பசுந்தழை, அப்புறம் சிதைவடைந்த இயற்கை உரங்கள கொண்டு வேளாண்மை செய்ய உகந்தாக கருதப்படுது.

கருப்புகவுனி அரிசி ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள்

  • கருப்பு கவுனி அரிசியோட நிறம் கருப்பா இருக்கறதுக்கு காரணம், அதுல இருக்கிற அந்தோசினனின் (Anthocyanins) அப்படீங்குற ஒரு மூல வேதிப்பொருள் தான்.
  • இந்த அந்தோசினனின் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடண்டா செயல்படுது. மேலும்,  புற்றுநோய எதிர்த்துப் போராடறதுக்கும், இருதய நோய தடுக்கறதுக்கும், மூளை செயல்பாட்ட மேம்படுத்தறதுக்கும் உதவுது.
  • கருப்புகவுனி அரிசி புற்று நோய்க்கு எதிரானது அப்படீங்குறத ஒரு சீன பல்கலைக்கழகம் ஒரு ஆய்வில கண்டுபிடிச்சுருக்காங்க. இது கான்செர் செல்கள குறைச்சதோட மார்பக புற்று நோயையும் குறைச்சுருக்கு.
  • மேலும், ஆராய்ச்சியாளர்கள் கருப்பு அரிசி வீக்கத்த குறைக்கிற தன்மை கொண்டது அப்படீன்னு கண்டுபிடிச்சுருக்காங்க. கருப்பு அரிசியோட சாறு நீர்கட்டிகள குறைக்க உதவுது.
  • கருப்பு கவுனி அரிசில நார்ச்சத்து அப்புறம் குறைந்த கார்போஹைடிரேட்கள் இருக்கறதால உடலின் தேவையற்ற கொழுப்புகள குறைகுது. இதனால உடல் எடை குறையுது.
  • இதயத்தோட ரத்த குழாய்கள்ல கொழுப்பு சென்றதையும் இது தவிர்க்குது. இதனால இதயம் பாதுகாக்கப்படுது.
  • கல்லீரல்ல இருக்க நச்சுத்தன்மைய சுத்திகரிக்க உதவுது. கல்லீரல் கொழுப்பு நோய் (Fatty liver disease) அப்படிங்கறது, கல்லீரல்ல அதிகப்படியான கொழுப்பு சேர்வதால உருவாகுது. கருப்பு அரிசி செயல்பாடு அமிலங்களோட வளர்சிதை மாற்றத்த ஒழுங்கு படுத்தி மொத்த கொழுப்பு அளவ குறைச்சு, இந்த நோய் வர்ரதுக்கான வாய்ப்ப குறைக்குது.
  • இதுல இருக்க ஆன்தோசயனின் மன அழுத்தத்தால மூளைல ஏற்படுற அழுத்தத்த குறைக்க உதவுது.

இதன் மூலமாக நாம முக்கியமா தெரிஞ்சுக்கறது என்னனா மற்ற அரிசிக்கு மாறா கருப்புகவுனி பயன்படுத்தினா இன்னும் உடலுக்கு நல்லது.

சமையல் பயன்பாடுகள்

தமிழ்நாட்ல பல்வேறு சுவையான உணவுகள கருப்பு கவுனி அரிசி கொண்டு காலம் காலமா செஞ்சுட்டு வர்ராங்க. சாதம், கஞ்சி, கூழ், இட்லி, தோசை, பொங்கல், பிரியாணி, பாயசம், உப்புமா, அல்வா மாதிரி பல வகையான உணவுகள நம்மளால இந்த அரிசி கொண்டு சமைக்க முடியும்.

பிற பயன்பாடுகள்

அதனோட சமையல் பயன்பாடுகள தாண்டி, பல தனித்துவமான பண்புகள கொண்டிருக்கு.

  • கருப்பு அரிசிய அலங்காரப் பொருளா பயன்படுத்தலாம். கலை அப்புறம் கைவினை பொருட்கள்ல கருப்பு அரிசிய சேர்த்து இருண்ட நிற வடிவமைப்புகள உருவாக்கலாம்.
  • அரைத்த கருப்பு அரிசிய சருமப் பராமரிப்புல இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்டாக பயன்படுத்தலாம். முகம் அல்லது உடலுக்கு மென்மைய தர்ரதுக்கு தண்ணீர், எண்ணெய் இல்லைனா தயிரோட சேர்த்து பயன்படுத்தலாம்.
  • இளம் செடிகளுக்கு காற்றோட்டம் அப்புறம் வடிகால் வசதிய மேம்படுத்தறதுக்கு, விதை தொடக்க கலவைல கருப்பு அரிசியோட உமிய சேர்க்கலாம்.
  • அரிசிய வேகவைத்து, அதன் விளைவா நமக்கு கிடைக்குற திரவத்த சாயக் குளியலா பயன்படுத்தி, இருண்ட நிறத்த துணிகள் அல்லது பிற பொருட்களுக்கு இயற்கையான சாயமா பயன்படுத்தலாம்.

முடிவுரை

கருப்பு கவுனி அரிசிய பர்மா கருப்பு கவுனி அப்படினும் அழைப்பாங்க. இதோட பல்வேறு சிறப்பு குணங்கள இந்த வலைப்பதிவுல நாம பார்த்தோம்.

இந்த மாதிரி பல வகையான சத்துள்ள பாரம்பரிய நெல் வகைகள நாங்க இயற்கை விவசாயிகள் கிட்ட இருந்து நேரடி முறைல கொள்முதல் செய்து நல்ல முறைல விக்குறோம்.

இயற்கையான மற்றும் தரமான முறைல விளைவிக்கப்பட்ட இந்த அரிசிய வாங்கணும் அப்படீன்னா நீங்க உயிர் இயற்கை உழவர் சந்தைல (Uyir Organic Farmers Market) வாங்கிக்கலாம்.