Tips to revive crystalized honey

உறைந்த தேன்: உயிர்பிப்பது எப்படி?

தேன் உறையுமா?

தேன் உறைவது ஒரு மிகச் சாதாரணமான நிகழ்வு. அப்படி உறைந்த தேன் கெட்டுப்போய் விட்டது என்றில்லை. தேன் ஏன் உறைகிறது? அதனை பழையபடி தங்கத் திரவ நிலைக்கு மாற்றுவது எப்படி? என சில குறிப்புகளை இவ்வலைப்பதிவில் காணலாம்.

பூக்களின் அமிர்தத்திலிருந்து தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான இனிப்புப் பொருளாகும் தேன். இந்த அற்புதமான படைப்பு சுவையானது மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாத தூய்மையான தேனானது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து, தனித்துவமான சுவை கொண்டிருக்கும். தூய தேனைத் தேர்ந்தெடுப்பது நல்வாழ்வை ஆதரிப்பது மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலுக்கு உகந்த தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கிறது.

தூய தேனின் நன்மைகள்!

• பல்வேறு பூக்களில் இருந்து தேனீக்களால் உறிஞ்சி தயாரிக்கப்படும் தேனை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

• நினைவாற்றலை அதிகரிக்கும் அதே வேளையில் ஒருவரின் உடல் எடையைப் பாதுகாப்பதற்கான அமுதம் இது.

• தூக்கமின்மையின் விளைவுகளை குறைக்க உதவுகிறது.

• தூய தேன் உங்கள் இருதய அமைப்புக்கு உதவுகிறது.

• செரிமான அமைப்புக்கு உதவுகிறது.

• சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்திருக்கும்.

தேனை எவ்வாறு பயன்படுத்துவது

  • தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் தேனை உட்கொள்வதால் உடலில் ரத்த சுத்திகரிப்பு எற்படும்.
  • தினமும் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளுங்கள், உங்கள் உடல் எடை குறைக்க இது உதவும்.
  • தேன் என்பது தொண்டை புண் மற்றும் இருமலுக்கு உதவும் ஒரு இயற்கை தீர்வாகும்.
  • உங்கள் தொண்டை வலியை குறைக்க, ஒரு தேக்கரண்டி தேனை உட்கொள்ள முயற்சிக்கவும்,
  • தேனின் உள்ளார்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்ற நன்மைகளுடன் இருமலை எதிர்த்துப் போராட உதவும்.

தேன் உறைவதற்கான காரணம்!

தேனில் இயற்கையாக இருக்கும் குளுக்கோஸ் தேன் உறைவதற்கு ஒரு முக்கிய காரணி ஆகும். வெப்பநிலை மாற்றம், எவ்வகை மலரில் இருந்து தேன் சேகரிக்கப்பட்டது, ஈரப்பதம் போன்றவை தேன் உறைவதில் பெரும் பங்காற்றுகின்றன. தேனில் திராட்சைச் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதும் மகரந்தத் தூள்கள், தூசிகள் , மெழுகுத் துகள்கள் மற்றும் காற்று குமிழ்கள் இருப்பதும் தேன் கற்கண்டு போல படிகமாவதைத் தூண்டுகின்றன. இவ்வாறு உறைந்த தேன் உண்பதற்கு மிகவும் பாதுகாப்பானது. மேலும், அது தனது அணைத்து இயற்கை சத்துக்களையும் தன்னுள்  தக்கவைத்துக் கொள்கிறது.

உறைந்த தேன்: உயிர்ப்பிக்கும் வழிமுறை

ஒரு பாத்திரம் அல்லது ஜாடியில் தேனை எடுத்துக்கொள்ளுங்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் அப் பாத்திரத்தை வைக்கவும். மூன்றில் இருந்து நான்கு நிமிடங்களுக்கு பொறுமையாக கரண்டி கொண்டு அத் தேனை கிளறவும். இவ்வாறு செய்தால் தேன் அதனுடைய திரவ நிலையை மீண்டும் அடைந்துவிடும். தேனை சூரிய ஒளியில் வைத்தும் பதப்படுத்தலாம்.

சரியான சேமிப்பு முறை

முறையாக தேனை சேமித்து வைத்தால் நீண்ட காலத்திற்கு திரவ நிலையில் வைத்திருக்க முடியும்.

  • நன்றாக மூடி வைத்தல்.
  • அறை வெப்பநிலையில் வைத்தல்.
  • நேரடி சூரிய ஒளியைத் தவிர்ப்பது.
  • குறைவான ஈரப்பதம் உறிஞ்சும் கண்ணாடி அல்லது உணவு தர பிளாஸ்டிக் ஜாடிகளைத் தேர்ந்தெடுத்தல்.
  • குளிரூட்டத்தை தவிர்த்தல்.

முடிவுரை

தங்களின் உறைந்த தேனை திரவ வடிவத்திற்கு எளிதாகக் கொண்டு வரலாம். உறைதல் ஒரு இயற்கையான செயலாகும். மேலும், உறைநிலையிலும் தேன் சுவையாகவும் சத்தானதாகவும் உள்ளது. எனவே, மேலே கண்டதுபோல, அதனை உயிர்ப்பித்து, மீண்டும் திரவத் தங்கமாக்கி உண்டு மகிழுங்கள்!