இத்தாலிய தேனீக்கள்

இத்தாலிய தேனீக்கள்

இந்தியா, பல்வேறு மாறுபட்ட காலநிலை கொண்டிருக்கு. மேலும் வளமான விவசாய நிலப்பரப்பும்  கொண்டிருக்கு. இதனால பல வருஷங்களா தேனீ வளர்ப்புல முக்கியமான ஒரு மையமாக இருந்துட்டு வருது. இதுல இத்தாலிய தேனீக்கள் பிரபலமானது.

தேனீக்கள் இன்றைய சூழ்நிலையில பயிர் விளைச்சல், மகரந்த சேர்க்கை, பல உயிர்களோட பெருக்கம் மற்றும் தேன் உற்பத்தி ஆகிய எல்லாத்துக்கும் முக்கிய பங்கு வகிக்குது.

தேனீக்கள்ல பல இனங்கள் இருக்கு. அதுல இத்தாலிய தேனீக்கள்  தேனி வளர்ப்பு தொழில்ல ஒரு முக்கிய பங்களிப்பு தருது. அது மட்டும் இல்லாம சமீப காலத்துல ரொம்ப பிரபலமும் ஆகிடுச்சு. இந்த வலைப்பதிவுல இத்தாலிய தேனீக்களோட பண்புகள், வளர்ப்பு சூழல், பயன்பாடுகள் பத்தி விரிவா தெரிஞ்சுக்கலாம்.

இந்த தேனீக்கள் அதுங்களோட மென்மையான குணம், செழிப்பான தேன் உற்பத்தி செய்யுற திறன் அப்புறம் பல வகையான சூழலுக்கு ஏற்றமாரி வாழக்கூடிய தன்மை போன்ற விஷயங்களுக்காக புகழ்பெற்றது.

இந்த காரணங்களுக்காக இந்தியா மட்டும் இல்லாம உலகத்துல பல்வேறு இடங்கள்ல தேனீ வளர்ப்பவர்களுக்கு ரொம்ப பிடிச்சமான இனமும் இதுதான்.

இத்தாலிய தேனீக்களின் பண்புகள்

இத்தாலிய தேனீக்கள்

இதுங்க ரொம்ப அமைதியான குணத்த கொண்டது, அதனால, தேனீ வளக்குறவங்களுக்கு எந்த உபாதையும் இல்லாம ரொம்ப எளிதா பார்த்துக்க முடியுது. அனுபவம் வாய்ந்தவரா இருந்தாலும் சரி புதுசா வளர்க்குறவங்களா இருந்தாலும் சரி இந்த தேனீக்கள் பொருத்தமா அமையுது.

இது முக்கியமா மக்கள் தொகை அதிகமா இருக்கிற இடங்கள்ல வளர்க்குறதுக்கு பொருத்தமான தேனீ வகையா இருக்கும். இந்த வகை தேனீக்கள் ஒரு தனித்துவமான சுவை கொண்ட தேன உற்பத்தி செய்யுது.

இந்திய காலநிலை

இந்த இத்தாலிய தேனீக்கள் பல வகையான காலநிலையில வாழக்கூடியது. இந்தியாவுல வடக்கிலிருந்து தெற்கு வரைக்கும் பார்த்தோம்னா பலவகையான புவியியல் தற்பவெப்பநிலை நிலை இருக்கு.

இதுல வெப்பமான சமவெளியா இருந்தாலும் சரி; குளிர்ச்சியான மலைப்பகுதியா இருந்தாலும் சரி இந்த தேனீக்களால அத சகித்து வாழ முடியும்.

தேன் உற்பத்தில மட்டும் இல்லாம மகரந்த சேர்க்கையிலையும் முக்கிய பங்கு வகிக்குது. இது மூலமா இந்தியாவோட ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியையும் இது அதிகரிக்குது.

ஓரின மலர்த்தேன்

நம்ம நாட்டுத் தேனீக்கள் எல்லா வகையான பூக்கள்ல இருந்தும் தேனை உறிஞ்சி வந்து அடைகள்ல சேகரிக்குது. அதனால அந்த தேனை பல மலர் தேன் (Multi floral Honey) அப்படினு சொல்லுவாங்க.

ஆனா இத்தாலியத் தேனீக்களுக்கு மலர் விசுவாசம் அதிகம். ஒரு குறிப்பிட்ட வகை மலர்ல இருந்து தேன் சேகரிக்க ஆரம்பிச்சுட்டா, அந்த மலர்கள் பூத்து முடிக்கும் வரை அந்தக் குறிப்பிட்ட வகை மலர்கள்ல இருந்து மட்டுமே தேன உறிஞ்சி வந்து அடைகளில் சேமிக்கும்.

எனவே இத்தாலியத் தேனீக்களால உருவாக்கப்படுற தேன் ஓரின மலர்த்தேன் (Uni Floral Honey) அப்படினு சொல்லப்படுது.

அதனால இவ்வகைத் தேனீக்கள வெச்சு பருவ காலத்துக்கு ஏற்ப முருங்கைத் தேன், தும்பைத் தேன், மாந்தேன், புளியந்தேன், மிளகாய்த்தேன், கொத்தமல்லித்தேன் ஆகிய ஓரின மலர்த்தேன நம்மளால உற்பத்தி செய்ய முடியும்.

உற்பத்தி திறன் மற்றும் தேன் மகசூல்

இத்தாலிய தேனீக்கள்

இந்த தேனீக்கள் பிரபலமானதுக்கு முக்கியமான காரணம்னு பார்த்தோம்னா இவங்களோட தேன் உற்பத்தி திறன் தான். இந்த தேனீக்கள் சாதாரண தேனீக்கள விட பெரிதா இருக்கும்.

ஒரு காலனிக்கு சராசரியா 25 லிருந்து 40 கிலோ வரைக்கும் தேன் உற்பத்தி செய்யும். இந்த தேனீக்கள் ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

பூக்களோட அமிர்தத்த தேனா மாத்துர செயல்பாட சில தேனீக்களோட ஒப்பிட்டு பார்த்தோம்னா அதுவும் அதிகமா இருக்கு.

எனவே அதிகமா தேன் உற்பத்தி செய்யணும் அப்படின்னு விருப்பப்படுற தேனீ வளர்ப்பவர்களுக்கு இது ரொம்ப பயனா இருக்கும்.

சவால்கள்

இத்தாலிய தேனீக்கள்

இந்த இத்தாலிய தேனீக்கள் பல வகையான நன்மைகள நமக்கு கொடுத்தாலும் இந்த தேனீக்கள பாதிக்கக்கூடிய நோய்கள், பூச்சிகள் போன்ற சவால்களும் நிறைய இருக்க தான் செய்யுது.

இந்த தேனீக்களோட காலணிகள ஆரோக்கியமா வெச்சுக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள்ல அதிக கவனம் செலுத்தணும்.

வண்ண மாறுபாடுகள்

இத்தாலிய தேனோட நிறம் தேனீக்கள் சாப்புடற பூக்களோட வகைய பொறுத்து மாறும். பொதுவா, இது வெளிர் தங்க நிறத்தில இருந்து இருண்ட தங்க நிறம் வரை மாறும்.

இந்தியாவில பல்வேறு வகையான தாவரங்கள் இருக்கறதால இந்த தேன பல வகையான தங்க வண்ணங்கள்ல பாக்க முடியுது.

ஊட்டச்சத்து நன்மைகள்

சுவை மட்டும் இல்ல இந்த தேன்ல ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும் இருக்கு. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இது ஒரு இயற்கை ஆற்றல் ஊக்கியாக செயல்படுது.

தேனுக்கு வைரஸ் எதிர்க்கிற தன்மை இருக்கு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் இருக்கு.

தேன் சாப்பிடுவது செரிமான ஆரோக்கியத்த மேம்படுத்துது. அஜீரணத்த எதிர்த்துப் போராடுது. நோயெதிர்ப்பு மண்டலத்த பலப்படுத்துது. இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து உடலை பாதுகாக்குது. இருந்தாலும் இந்த நன்மைகள் தேன் எந்த பூ ஆதாரத்தில இருந்து எடுக்கப்படுது என்பத பொருத்தே அமையுது.

மேலும், தேன் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்துல பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமையல் பயன்பாடுகள்

மிகவும் சுவையான அதிரசம்; அரிசி மாவு, வெல்லம் மற்றும் தேன் தொட்டுச் செய்வாங்க. மேலும், ஒப்புட்டு(போலி), கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, சத்துமாவு உருண்டை, நிலக்கடலை பொடி உருண்டை மற்றும் பிற தமிழ் இனிப்பு வகை தின்பண்டங்கள்ல தேன் சேர்த்துப்பாங்க.

இயற்கையான முருங்கை தேனின் நன்மைகள்

இத்தாலிய தேனீக்கள்

உயிர் ஆர்கானிக் உழவர் சந்தையில முருங்கை தேன் ஒரு தனித்துவமான  விற்பனை பொருள். இது முருங்கை பூக்களிலிருந்து மட்டும் அமிர்தத்த உறிஞ்சி தேனீக்களால உற்பத்தி செய்யப்படுது.

இந்த தேன் அடர் தங்க நிறத்துல இருக்கும். மேலும், நல்ல செழுமையாவும், அடர்த்தியாவும் இருக்கும். இதுல ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு முகவர்கள், திசுக்கள பாதுகாக்கும் பண்புகள் மற்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கி இருக்கு.

ஆனா இயற்கையான முருங்கை தேன கண்டுபிடிக்கிறது சவாலான வேலை. இருந்தாலும், உயிர் ஆர்கானிக் உழவர் சந்தை முருங்கை மரங்கள வளர்க்கறதுல நிபுணத்துவம் பெற்ற விவசாயிகளின் தனி குழுவுடன் இணைந்து செயல்பட்டு இந்த தேன சேகரிக்கறாங்க.

  • கால்சியத்த நம்மளோட உடம்புல பராமரிக்க மிக திறமையா உதவுது.
  • ஒவ்வாமை அறிகுறிகள சில சமயங்கள்ல குறைக்குது.
  • முருங்கை மரத் தேன் வாத நோய் மற்றும் மூட்டுவலிய போக்க உதவும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி, வலிமை மற்றும் சகிப்புத்தன்மை எல்லாமே இத சாப்பிடும்போது மேம்படுத்தப்படுது.

இதனை எவ்வாறு பயன்படுத்துவது?

• உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்த வலுப்படுத்த தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி இயற்கை முருங்கை தேன எடுத்துக்கலாம்.

• இயற்கையாவே இருமல் மற்றும் தொண்டை வலிக்கு தேன் உதவும். தொண்டை வலிக்கு ஒரு தேக்கரண்டி முருங்கை தேன எடுத்துக்கலாம். தேனில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல நோய்கள தீர்க்கவும் உதவுது.

முடிவுரை

இந்த வலைப்பதிவுல இத்தாலிய தேனீக்கள் மற்றும் அவற்றின் ஓரின மலர் தேன் பற்றி பார்த்தோம். அதனோட நன்மைகளையும் அறிஞ்சுக்கிட்டோம்.

எனவே இதனை உங்களோட தினசரி வாழ்க்கைல பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்கைய வாழுங்க.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *