ஆடுகள்

ஆடுகள்

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட சிறு குறு விவசாயிகள் அப்புறம் தொழிலாளர்கள் என எல்லார் வீட்லயும் வளர்க்கக் கூடிய விலங்குனு பார்த்தா அது ஆடுகள் தான். கடினமான உழைப்போ அதிக செலவோ எதுவும் இல்லாம வீட்டிற்கு நல்ல வருமானம் ஈட்டித்தரக் கூடியது இந்த ஆடு வளர்ப்பு தான். ஆடுகள் குறித்த பல்வேறு தகவல்கள இந்த வலை பதிவுல பார்க்கலாம்.

வரலாற்றில் பார்வை

ஆடு அப்டீங்கறது ஒரு பொதுவான பெயர். ஆடுகள்ல பல வகை இருக்கு. தமிழ்நாட்டுல மட்டும் கன்னி ஆடுகள், கொடி ஆடுகள் மற்றும் சேலம் கருப்பு அப்டினு மூன்று முக்கிய வகைகள்  இருக்கு.

கற்காலத்துலயே வீட்டு விலங்கா மனுசங்கலால பழக்கபடுத்தப்பட்டு இப்போவரைக்கும் வீடுகளில் வளர்ந்துட்டு வருது. இப்போ பல பேர் வீட்ல செல்ல பிராணிகளாவும் வளர்க்கறாங்க.

பண்புகள்

  • இது செடி கொடிகள், பச்சை காய்கறிகள் அப்றம் புற்கள உண்டு வாழும். அது எந்த வகையோ அதுக்கு ஏத்த மாதிரி அதனோட எடை இருக்கும்.
  • நாம ஆடுகள இறைச்சி, எரு, பால், முடி மற்றும் தோலுக்காக வளர்க்கிறோம்.
  • நல்லா இரு கடினமான கொம்புகளைக் கொண்டது. கொம்பு அதனோட இனத்திற்கு ஏற்றார் போல உருவத்திலயும் நிறத்துலயும்  மாறும்.
  • இவையும் மாடுகள் போலவே நான்கு அறைகள் இருக்க வயிற்றைக் கொண்டது. எனவே அசை போட்டு போட்டு தான் உணவ செரிமானம் செய்யும்.
  • ஆடுகள் 15 ல இருந்து 18 வருஷம் வரை உயிர் வாழக்கூடியது. கோழி இறைச்சிக்கு அடுத்து அதிகமாக உலக அளவுல உண்ணப்படும் இறைச்சி ஆடு தான்.

சமையல் பயன்பாடுகள்

ஆடுகள முக்கியமா எல்லாரும் இறைச்சிக்காக தான் அதிகமா பயன் படுத்தறாங்க. மட்டன் குழம்பு, பிரியாணி, சுக்கா, கறி, மட்டன் வறுவல், மட்டன் பாயா, கீமா அப்புறம் மட்டன் இறால் குழம்புனு பல வகையா உணவுகள சமைக்கலாம்.

அடுத்து ஆட்டுப் பாலை வெச்சும் பல உணவுகளைச் சமைக்க முடியும். ஸ்மூத்தி, தயிர் மற்றும் ஆட்டுப் பால் தேங்காய் மியூஸ் போன்றவற்றை சுவைத்து மகிழலாம்.  

பிற பயன்பாடுகள்

  • ஆட்டு எரு

இது செடிகளோட வளர்ச்சிக்கும் ஒரு நல்ல உரமாக இருக்கு. மண் வளத்த மேம்படுத்தவும் பயன்படுது.  ஆடுகள் நேர்த்தியான துகள்களாக்கப்பட்ட கழிவுகளை உற்பத்தி செய்வது மட்டுமல்லாம, அதனோட உரம் பொதுவா பூச்சிகள ஈர்க்கிறது இல்ல.

பொதுவா பசுக்கள் அல்லது குதிரைகளிலிருந்து வரும் எருவ நேரடியாக  நாம பயன்படுத்தினா அது தாவரங்கள அதனோட சூட்டால எரிச்சிடும். ஆனா நாம ஆட்டு எருவ நேரடியா செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

  • ஆட்டுப்பால்

இது சருமத்திற்கு நல்லது. இப்போல்லாம் ஆட்டு பால்ல குளியல் சோப்பு கூட தயாரிக்கறாங்க. இப் பாலை பருகுவதனால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிக்குது.

இந்த பால் எளிதா ஜீரணிக்கலாம் என்பதால் குழந்தைகளுக்குத் தாய் பாலுக்கு பதிலாகக் கூட இதை குடுக்கலாம்.

  • ஆட்டுத்தோல்

ஆட்டோட தோல் இயற்கையாவே நீர்-எதிர்ப்பு தன்மை கொண்டு ரொம்ப மிருதுவாக இருக்கும். எனவே கையுறைகள், பூட்ஸ், பைகள், புத்தக அட்டை, காலணிகள் என பல வகையா பொருட்கள் செய்வாங்க.

  • ஆட்டு முடி

ஆட்டு முடில வண்ண தூரிகைகள் (Goat Hair Brushes) கூட செய்யலாம். அது இப்போ தற்காலத்துல ரொம்ப பெரிதா பயன்படுத்தப்படுது. ஓவியக்கலையிலும், ஒப்பனைக்கலையிலும் இந்த பிராசஸ் ரொம்ப பயனுள்ளதா இருக்கு.

ஊட்டச்சத்துக்கள்!

  • ஆட்டிறைச்சில அதிக அளவு புரதம் இருக்கு. ஆரோக்கியமான கொழுப்புக்களும் இருக்கு.
  • அது மட்டும் இல்லாம உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு நன்மை தரக்கூடிய நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைய இருக்கு.
  • அதே போல ஆட்டுப் பால்லையும் புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வெளிமம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமா இருக்கு.
  • போதுமான வைட்டமின் ஏ உட்கொள்வது உங்களோட கண்புரை, சில வகையான புற்றுநோய்களோட அபாயத்தைக் குறைக்க கூட உதவும் அப்டினு சில ஆய்வுகள் சொல்லுது.
  • மேலும், இது குழந்தைகளுக்கு வரக்கூடிய அம்மை நோயையும் எதிர்த்துப் போராட உதவி செய்யுது.

முடிவுரை

இவையே ஆடுகளைப் பற்றி நாம் அறியவேண்டிய பல்வேறு சிறப்பு அம்சங்கள் ஆகும்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *