தட்டைப்பயிரின் நன்மைகள்
(Cowpeas – Thatta payaru – Karamani)
வரலாற்றில் ஒரு பார்வை (History of Cowpeas)
இது மேற்கு ஆப்பிரிக்காவில தோன்றியதா நம்பப்படுது. 5,000 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்த பகுதில பயிரிட்டுருக்கறதா தொல்லியல் சான்றுகள் சொல்லுது.
அப்புறம் வர்த்தக மற்றும் இடம்பெயர்வு மூலமா அங்க இருந்து உலகம் முழுவதும் பரவுச்சு. பல நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்க விவசாயத்தில தட்டப்பயிறு முக்கிய பங்க கொண்டிருக்கு.
அதேபோல இந்தியாவில, தட்டைபயிறு நீண்ட வரலாற்ற கொண்டிருக்கு. பல நூற்றாண்டுகளா பாரம்பரிய விவசாய முறைல பயிரிடப்பட்டு வருது.
பண்புகள் (Characteristics of Cowpeas)
இது பெரும்பாலும் காரிஃப் (மழைக்காலம்) மற்றும் ராபி (குளிர்காலம்) ஆகிய இரு பருவங்களில மானாவாரி பயிரா வளர்க்கப்படுது.
விஞ்ஞான ரீதியா விக்னா அங்கிகுலாட்டா (Vigna Unguiculata) அப்படீன்னு அழைக்கப்படுது. காராமணி (cowpea) அப்படீங்குறது பயறு வகைய சேர்ந்தது. இத தட்டைப்பயறுனும் சொல்லுவாங்க. இது கருப்பு நிறத்தலையும், சிவப்பு நிறத்தலையும் இருக்கும்.
தட்டைபயிரின் ஆரோகிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் (Nutrients and health benefits of Cowpeas)
தட்டைப்பயிறு பல ஊட்டச்சத்து நன்மைகள வழங்குது.
- இதுல புரதம் நிரம்பி இருக்கு. அவை சிறந்த தாவர அடிப்படையிலான புரதமா நமக்கு கிடைக்குது. திசுக்கள சரி செய்யுறதுக்கும், தசை வளர்ச்சிய ஆதரிக்கவும், ஒட்டுமொத்த உடல் செயல்பாட்ட பராமரிகாரத்துக்கும் புரதம் அவசியம்.
- மேலும், தட்டைப்பயிறுல கரையக்கூடிய அப்புறம் கரையாத உணவு நார்ச்சத்து இருக்கு. நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுது.
- இது குடல் இயக்கத்த சீராக்க உதவுது. அதன் மூலமா உடல் எடைய குறைக்க உதவுது
- தட்டைப்பயிறு வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, மற்றும் ஃபோலேட், தயாமின், ரிபோஃப்ளேவின் போன்ற பல பி வைட்டமின்கள் உட்பட பல்வேறு வைட்டமின்கள் இதுல இருக்கு. இந்த வைட்டமின்கள் ஆற்றல் வளர்சிதை மாற்றம், நோயெதிர்ப்பு செயல்பாடு, பார்வை ஆரோக்கியம் அப்புறம் செல் வளர்ச்சி அப்படீன்னு எல்லா வகைகள்ளையும் முக்கிய பங்கு வகிக்குது.
- இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களும் இதுல நிரம்பி இருக்கு. இரத்தத்தில ஆக்ஸிஜன கொண்டு செல்றதுக்கு இரும்பு ரொம்ப முக்கியம். பொட்டாசியம் இரத்த அழுத்தம் அப்புறம் திரவ சமநிலைய சீராக்க உதவுது.
- தட்டைப்பயிறுல ஃபிளாவனாய்டுகள் அப்புறம் பினாலிக் கலவைகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கு. இது செல்கள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில இருந்து பாதுகாக்க உதவுது. மேலும், இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் வர்ரதுக்கான அபாயத்தையும் குறைக்குது.
- தட்டைப்பயிறுல இயற்கையாவே கொழுப்பு அப்புறம் கொலஸ்ட்ரால் குறைவா இருக்கு. அதனால இது இதயத்துக்கு நல்லது.
உங்க உணவுல தட்டைப்பயிர சேர்த்துக்கறது பலவிதமான ஊட்டச்சத்து நன்மைகள வழங்குறதோட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆதரிக்குது.
சமையல் பயன்பாடுகள் (Culinary Uses of Cowpeas)
- இந்த பயிர தனியா வேகவெச்சும் சாப்பிடலாம். இல்லைனா குழம்பு, பொரியல், அவியல், துவையல் மாதிரி செய்தும் சாப்பிடலாம்.
- தென்னிந்தியாவுல, சாம்பார், ரசம் அப்புறம் சுண்டல் போன்ற உணவுகளில தட்டைப்பயிறு பயன்படுத்தப்படுது.
- வட இந்தியாவுல, பெரும்பாலும் கறி அப்புறம் பருப்பு உணவுகளில பயன்படுத்தப்படுது.
- இத ஊறவெச்சு அரைச்சு பலகாரமும் செய்யலாம்.
- இதனோட பயிறு மட்டும் இல்லாம மொத்த காயுமே காய்கறிகளில ஒன்றா சமையலுக்குப் பயன்படுத்தப்படுது.
- கறிகள், குழம்புகள், சாலடுகள் அப்புறம் சிற்றுண்டிகள் உட்பட பல்வேறு வடிவங்களில இது பொதுவா உட்கொள்ளப்படுது.
- தட்டைப்பயிர வெச்சு தட்டப்பயிறு கடைசல், கறி, தக்காளி ரசம், சுண்டைக்காய் தட்டைப்பயிறு, சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு, தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு, தட்டப்பயிறு சாதம், தட்டைப் பயிறு பொரியல், கூட்டு, தட்டை பயறு மசாலா குழம்பு, தட்டப்பயறு புளிக்குழம்பு, தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு, தட்டபயறு சுண்டல், தட்டபயறு பிரியாணி, அடை தோசை, ஐந்து பருப்பு உருண்டை, மோர்க்குழம்பு, மற்றும் முளைக்கட்டிய தட்டைபயறு குழம்பு அப்படீன்னு பல வகையான உணவுகள சமைக்க முடியும்.
பிற பயன்பாடுகள் (Other uses of Cowpeas)
- ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி அப்போ தட்டைப்பயிறு சுண்டல் சில பகுதிகளில ஒரு சிறப்பு உணவா தயாரிக்கப்பட்டு பிரசாதமா வழங்கப்படுது.
- பசுக்கள் அப்புறம் செம்மறி ஆடுகள் போன்ற விலங்குகளுக்கு இது உணவா குடுக்கப்படுது.
- விவசாயிகள் தங்கள் வயல்களில தட்டைப்பயிர பயிரிடும்போது, அதுல நல்ல பொருட்கள சேர்த்து மண்ண மேம்படுத்த உதவுது. இது மற்ற தாவரங்கள வளர்க்கறதுக்கு மண்ண ஆரோக்கியமாக்குது.
- இந்த பயிரோட இலைகள் மற்றும் வேர்களால தரைய நல்லா மூடீறதால வயல்களில களைகள வளரவிடாம தடுக்குது.
- இதனோட வண்ணமயமான பூக்கள் மிகவும் அழகாக இருக்கும். அதுக்காக மக்கள் அவற்ற தோட்டங்களில கூட நடுராங்க.
முடிவுரை
நீங்க உயிர் இயற்கை உழவர் சந்தைல (Uyir Organic Farmers Market) இயற்கையான முறைல விளைவிக்கப்பட்ட நல்ல தரமான தட்டைப்பயிர வாங்கிக்கலாம். மேலும், சமையலுக்கு தேவையான அணைத்து வகை உணவுப் பொருட்களுமே எங்க சந்தைல கிடைக்கும்.
எங்களோட எந்த வகையான வேதிப்பொருட்களும் சேர்க்கமா பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள தேர்ந்தெடுத்து வாங்கி பயன்படுத்துங்க ஆரோகியமா வாழுங்க.