மலைத்தேனின் நன்மைகள்

இயற்கையின் திரவத் தங்கம்! மலைத்தேனின் நன்மைகள்!

மலைத் தேன் என்பது காட்டுத் தேனீக்களால் காட்டுச் சூழலில் மனிதர்களின் தலையீடு பெரிதாக இல்லாத சூழ்நிலையில் உருவாகிறது. இது மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களால் சேகரிக்கப்படும். இவ்வலைப் பதிவில் மலைத்தேனின் நன்மைகள் மற்றும் அதனை எடுப்பது எப்படி என்பதைக் காணலாம்.

மலைத் தேன், அறிவியல் ரீதியாக “பாலிஃப்ளோரல் தேன்” என்று அழைக்கப்படுகிறது. இது பல்வேறு காட்டுப் பூக்களிலிருந்து தேன் சேகரிக்கும் தேனீக்களால் தயாரிக்கப்படுகிறது. மலர் மூலங்களில் உள்ள இந்த பன்முகத்தன்மை கொண்ட மலைத் தேன்; தனித்துவமான சுவை, நறுமணம் மற்றும் ஊட்டச்சத்து கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தேன் வகைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலையில் இருந்து பெறப்படும் கொல்லிமலைத் தேன்; நீலகிரி மலையின் பல்வேறு தாவரங்களில் இருந்து உருவான உயர்த்தரமான நீலகிரி தேன்; மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கிடைக்கும் ஏலக்காய்த்தேன்; அனைத்தும் தனித்துவமான சுவை கொண்டு உள்ளன.

இப்பகுதியில் உள்ள யூகலிப்டஸ் பூக்களிலிருந்து யூகலிப்டஸ் தேன் சேகரிக்கப் படுகிறது.

இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் சுவாச ஆரோகியத்தை தரக்கூடியது. இந்தத் தேன் வகைகள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் வளமான பல்வேறு நிலப்பரப்புகளைப் காட்டுகின்றன.

மலைத்தேன் எடுப்பது எப்படி?

பழங்குடியினர் மற்றும் தேன் வேட்டையாடுபவர்கள் தேனீக்கள் கடிக்காமல் இருக்க, தேனைப் பிரித்தெடுக்க பாதுகாப்பு உடைகள் அணிந்து கொள்வார்கள். தேன் கூட்டில் தேன் உள்ள  பகுதியை மட்டும் வெட்டி எஞ்சிய கூட்டை அப்படியே விட்டுவிட அறுவடை செய்பவருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவர்கள் தேனீக்களின் நல்வாழ்வுக்கு மற்றும் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் முறைகளையே பயன்படுத்தி தேன் எடுக்கின்றனர்.

சில சமயங்களில், மரத்தின் குழிகளில் அல்லது பாறைப் பிளவுகளில் காணப்படும். அந்த தேன் கூட்டில் இருந்து தேன் நிலையான முறையில் அறுவடை செய்யப்படுகிறது. இது நிறுவப்பட்ட காலனிகளின் இடையூறுகளைத் தவிர்க்கிறது.

மலைத்தேனின் நன்மைகள்!

மலைத் தேன் சுவையை மட்டுமல்ல உடலுக்கு மிகுந்த ஆரோகியத்தையும் வழங்குகிறது. தேனில் வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

எளிமையான வகையில், தேன் உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அஜீரணத்தை எதிர்த்துப் போராடுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நிலைகளில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. இருப்பினும் இந்த நன்மைகள் தேன் எந்த பூ ஆதாரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை பொருத்தே அமைகிறது.

தேனீக்களின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை

தேனீக்களின் நல்வாழ்வு சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்துடன் இணைந்து உள்ளது. வாழ்விட இழப்பு, பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற அச்சுறுத்தல்களால் தேனீக்களின் எண்ணிக்கை பாதித்து வருகிறது.

அதன் விளைவாக, மலைத்தேன் உற்பத்தி பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் உள்ளூர் தேனீ வளர்ப்பவர்களை ஆதரிப்பது; இந்த விலைமதிப்பற்ற வளத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு படியாகும்.

முடிவுரை

ஒவ்வொரு ஜாடியிலும் மலைத் தேனின் இனிமையைப் பாராட்டி ருசிப்போம். தேனீக்கள், பூக்கள் மற்றும் அவை வாழும் சூழல்களுக்கு இடையிலான சிக்கலான உறவை அறிந்து அழியாமல் காப்போம்.