சம்பாகோதுமைரவை

சம்பா கோதுமை ரவை (Samba Wheat Rawa)

சம்பா கோதுமை ரவை

வரலாற்றில் ஒரு பார்வை (History of Samba Wheat Rawa)

சம்பா கோதுமை ரவை அப்படீன்னு அழைக்கப்படும் உடைந்த கோதுமை, இந்திய சமையல்ல பழமையான வரலாறு கொண்டிருக்கு. இது முழு கோதுமைய கரடுமுரடா, துகள்களா அரைக்கறதுனால கிடைக்கறது. கோதுமை தானியங்கள அதிகமா எளிமையான முறைல பயன்படுத்த இந்த செயல்முறை பல தலைமுறைகளாக நடைமுறையில இருக்கு.

சம்பா கோதுமை ரவா முதன்மையா தமிழ்நாடு அப்புறம் ஆந்திரப் பிரதேசம் போன்ற தென்னிந்திய பகுதிகளில தோன்றியதா நம்பப்படுது. இது பல நூற்றாண்டுகளா பிரபலமா இருக்கு.

காலப்போக்கில, அதனோட ஊட்டச்சத்து அளவு, எளிமையா சமைக்கக்கூடிய அமைப்பு காரணமா இது இந்தியாவில மட்டுமில்லாம, உலகளவில பிரபலமாகிடுச்சு.

சம்பா கோதுமை ரவியின் நன்மைகள்  மற்றும் ஊட்டச்சத்துக்கள் (Benefits of Samba Wheat Rawa)

  • சம்பா கோதுமை ரவையில் நார்ச்சத்து நிரம்பி இருக்கு. இது செரிமானத்துக்கு உதவுது.
  • இரத்த சர்க்கரை அளவையும் சீராக்க உதவுது.
  • இதுல அதிக அளவு புரதம் இருக்கு, இது சைவ உணவு சாப்பிடறவங்களுக்கு தேவையான அடிப்படை புரதத்த குடுக்குது.
  • மேலும், இதுல மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு அப்புறம் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் இருக்கு.
  • இது எலும்பு ஆரோக்கியம், ஆற்றல் உற்பத்தி அப்புறம் நோயெதிர்ப்பு செயல்பாடு அப்படீன்னு எல்லாத்துலயும் பங்காற்றுது.
  • இது குறைந்த கிளைசெமிக் குறியீட்ட கொண்டது.
  • இதுல இருக்க அதிக நார்ச்சத்து, எடைய குறைக்க உதவுது.
  • மேலும், கொழுப்பின் அளவ குறைச்சு இதயத்த பாதுகாக்குது.

உங்க உணவில சம்பா கோதுமை ரவைய சேர்த்துக்கறது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பங்களிக்குது.

சமையல் பயன்பாடுகள் (Culinary uses of Samba Wheat Rawa)

  • சம்பா கோதுமை ரவைய வெச்சு தயாரிக்கப்படுற ஒரு பிரபலமான காலை உணவுனா அது உப்புமா தான். இது கூட காய்கறிகள், மசாலாப் பொருட்கள் எல்லாம் சேர்த்து சுவையான சத்தான உப்புமா செய்யப்படுது.
  • இத வெச்சு நாம கிச்சடி செய்யலாம். இது அரிசி சார்ந்த கிச்சடிக்கு சத்தான பாரம்பரிய மாற்றா அமையுது.
  • சம்பா கோதுமை ரவைய பால் இல்லைனா தண்ணீரோட சேர்த்து கஞ்சியும் செய்யலாம்.
  • ரவையில் தேன் அப்புறம் சர்க்கரையோட, பழங்கள், விதைகள், மசாலாப் பொருட்கள சேர்த்து சுவையான காலை உணவு செஞ்சு சாப்பிடலாம்.
  • பொங்கல் அறுவடைத் திருநாள் அப்போ செய்யப்படுற தென்னிந்திய பாரம்பரிய உணவு. பொங்கல நாம சம்பா கோதுமை ரவை, பச்சைப்பயறு, கருப்பு மிளகு, சீரகம் அப்புறம் நெய் சேர்த்து சமைத்தும் சாப்பிடலாம்.
  • சம்பா கோதுமை ரவைய வெச்சு பிலாஃப் ரெசிபிகள்  அரிசி அல்லது பிற தானியங்களுக்கு மாற்றா பயன்படுத்தலாம்.
  • கீர் (ஒரு வகை புட்டு) அப்புறம் ஹல்வா, கேசரி போன்ற இனிப்பு உணவுகள செய்யுறதுக்கும் சம்பா கோதுமை ரவைய பயன்படுத்தலாம்.
  • பால், சர்க்கரை சேர்த்து சமைத்து, ஏலக்காய், கொட்டைகள் அப்புறம் திராட்சையும் சேர்த்து சுவையூட்டப்பட்ட ஒரு ஆறுதலான மற்றும் மகிழ்ச்சியான இனிப்ப உருவாக்குது.

சமையல் அல்லாத பிற பயன்பாடுகள்

  • சம்பா கோதுமை ரவைய தோல் பராமரிப்பு பொருட்களில எக்ஸ்ஃபோலியண்டா (EXFOLIANT) பயன்படுத்தலாம். நல்லா தூளா அரைச்சு முகத்துக்கு பூசும்போது, ​​​​அது இறந்த சரும செல்கள அகற்றவும், தோல் அமைப்ப மேம்படுத்தவும் உதவுது.
  • சில கைவினைப்பொருட்கள் செய்யுறதுக்கும் இவை பயன்படுத்தப்படுது.
  • விவசாயிகள் கால்நடைகளுக்கு உணவா கூட இத பயன்படுத்தறாங்க.

முடிவுரை

சம்பா கோதுமை ரவை நாம சாப்பிடறதால கிடைக்குற ஆரோகிய நன்மைகள பத்தி நாம இந்த வலைப்பதிவுல பார்த்தோம். மேலும், பிற உணவுகள பத்தி அனைத்து தகவல்களையும் தெரிஞ்சுக்க எங்களோட பிற வலைப்பதிகள படியுங்க.

நாம சாப்பிடற உணவு சுவையானதாவும், சத்தானதாவும் எந்த விதமா வேதிப்பொருட்களும் பயன்படுத்தாம விளைவிக்கப்பட்டதா இருக்கனும்.

அப்போ தான் அதுல இருக்க ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும். நம்ம உயிர் இயற்கை உழவர் சந்தைல (UYR ORGANIC FARMERS MARKET) இதே குறிக்கோளோட தரமான இயற்கை உணவுகள விற்பனை செஞ்சுட்டுவர்றோம். உடனே உங்களுக்கு தேவையான உணவு பொருட்கள உயிர் அங்காடில வாங்கி பயன்படுத்துங்க.