துவரம்பருப்பு

Toor Dhal / Tuvaram paruppu (துவரம்பருப்பு)

துவரம்பருப்பு

வரலாற்றில் ஒரு பார்வை (History of Toor Dhal / Tuvaram paruppu)

துவரம் பருப்பு, புறா பட்டாணி (Pigeon Peas) அல்லது ஸ்பிலிட் பீஜியன் பட்டாணி (Split Pigeon Peas) அப்படீன்னு அழைக்கப்படுது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்ற கொண்டிருக்கு. இந்தியாவில தோன்றியதா நம்பப்படுது.

இது 5,000 ஆண்டுகளுக்கு மேலா பயிரிடப்படுது. இது இந்தியாவுல விளைவிக்கப்படுற பழமையான பருப்பு வகைகளில ஒன்னு. பழங்காலத்தில இருந்தே இந்திய உணவு வகைகளில துவரம் பருப்பு முக்கிய உணவா இருந்துட்டு வருது.

பல நூற்றாண்டுகளா, துவரம் பருப்பு இந்தியாவிற்குள்ள மட்டும் இல்லாம  பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருது.

டெக்கான் பீடபூமியில 5400 ஆண்டுகளுக்கும் மேல பழமையான துவரம் பருப்பு விதைகள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க. துவரம் பருப்பு இந்தியாவில் தோன்றியது என்பதை இது நிரூபிக்குது.

இந்தியாவில இருந்து, வணிகர்கள் இந்த சுவையான பருப்ப ஆப்பிரிக்காவிற்கு கொண்டு போயிருக்காங்க. ஐரோப்பியர்கள் இதை சாப்பிட தொடங்கும்போது இத காங்கோ பட்டாணி (Congo peas) அப்படீன்னு அழைச்சிருக்காங்க.

இந்த நவீன காலத்துலையும், துவரம் பருப்பு இந்தியாவில ஒரு முக்கிய பயிரா இருக்கு. இயந்திரமயமாக்கல் அப்புறம் நவீன நீர்ப்பாசனம் மூலமா இதனோட உற்பத்தி திறன மேம்படுத்தி இருகாங்க.

துவரம் பருப்பின் பண்புகள்

  • வரலாற்று ரீதியாக, துவரம் பருப்பு பாரம்பரிய விவசாய முறைகள பயன்படுத்தி பயிரிடப்படுது.
  • எல்லா காலநிலைலையும் வளர கூடிய தன்மை கொண்டது.
  • வறண்ட நிலம் மற்றும் நீர்ப்பாசனப் பகுதிகள் இரண்டுளையுமே இந்த பயிர வளர்க்குறாங்க.
  • இந்தப் பயிர வளர்க்க விவசாயிகள் முக்கியமா இயற்கை மழை அப்புறம் இயற்கை உரங்கள நம்பி இருகாங்க.

துவரம் பருப்பின் ஊட்டச்சத்துக்கள்

இயற்கை துவரம் பருப்பு, அல்லது புறா பட்டாணி உயிர் இயற்கை உழவர் சந்தையில கிடைக்குற ஒரு நல்ல விளைவிப்பு. துவரம் பருப்பு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள கொண்ட சத்தான பருப்பு வகை.

இதுல கொழுப்புச் சத்து கொஞ்சம்கூட இல்ல. மேலும் புரதசத்து , வைட்டமின் சி சத்து, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகமா இருக்கு.

இது தாவர அடிப்படையிலான புரதம், உணவு நார்ச்சத்து, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் (B1, B9 மற்றும் B6 போன்றவை), தாதுக்கள் (இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ்) அப்புறம் ஆக்ஸிஜனேற்றங்களின் ஆதாரமா இருக்கு.

இந்த பருப்பை சாப்பிடறது மூலமா செரிமானம், இதய ஆரோக்கியம், ஆற்றல் அளவுகள் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு எல்லாமே கிடைக்கும்.

துவரம் பருப்பின் நன்மைகள்

  • இதுல அதிக புரதச்சத்து இருக்கு.
  • முக்கியமா கர்பகாலத்துல பெண்களுக்கு தேவைப்படுற ஃபோலிக் அமிலம் (Folic acid) இந்த பருப்புல இருக்கு.
  • மேலும், இவை குறைந்த கிளைசெமிக் குறியீட்ட கொண்டிருக்கு.
  • துவரம் பருப்பு வயிற்றுப்போக்கு சிகிச்சையில் உதவும்.
  • கொழுப்பு சத்து கம்மியா இருக்கறதால எடை மேலாண்மைக்கு உதவுது.
  • உடலில இருக்க அதிக கொலஸ்ட்ரால நிர்வகிக்க உதவும்.
  • இது சீக்கிரமா காயம் ஆறிப்போக உதவுது.
  • ஸ்டோமாடிடிஸ் நோய் சிகிச்சைக்கு உதவுது.
  • இதுல கார்போஹைட்ரேட்டும் நிரம்பி இருக்கு.
  • மேலும் இதுல இரும்புச்சத்து நிறைஞ்சு இருக்கு.
  • சர்க்கரை நோய கட்டுப்பாட்டுல வைக்கவும் உதவுது.

சமையல் பயன்பாடுகள்

பருப்பு அப்படீனாலே அது மஞ்சள் நிறத்துல இருக்க துவரம் பருப்புதான். சாம்பார், பருப்பு சாதம், அரிசி பருப்பு சாதம்ல தொடங்கி பல உணவுப் பண்டங்கள் இத அடிப்படையா வெச்சு தான் செய்யப்படுது.

இந்திய உணவு வகைகளில அதிலும் முக்கியமா தென் இந்தியாவுல கிட்டத்தட்ட தினமும் சாப்பிடற ஒரு உணவுப்பொருள். இது சாதம் அப்புறம் கோதுமை உணவுகளோட சேர்த்து சாப்பிட சுவையா இருக்கும்.

இந்திய பருப்பு உணவுகளில துவரம் பருப்பு ஒரு முக்கியப் பொருளா இருக்கு. இத வெச்சு சுவையான சாம்பார், ரசம், சைவம் மற்றும் அசைவ கறி உணவுகள், பஜ்ஜி, வடை, பகோடா அப்படீன்னு பல வகையான உணவுகள செய்ய முடியும்.

துவரம் பருப்பை எப்படி பயன்படுத்துவது?

துவரம் பருப்ப இரவே சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில ஊற வெச்சுருங்க. அடுத்தநாள் காலைல, ஒரு பிரஷர் குக்கரில் மஞ்சள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 7 முதல் 8 விசில் வரை விட்டு வேகவெச்சுக்கோங்க.

அப்புறம் உங்களுக்கு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக்கோங்க. இது சப்பாத்தி, தினை இல்லைன்னா வெள்ளை/பழுப்பு அரிசியோடு சேர்த்து சாப்பிட சுவையா இருக்கும்.

சமையல் அல்லாத பிற பயன்பாடுகள்

  • பல விவசாயிகள், துவரம் பருப்ப கால்நடைத் தீவனமா பயன்படுத்தறாங்க. இது கோழிகள், கால்நடைகள் அப்புறம் பன்றிகளுக்கு ஒரு நல்ல புரதம் நிறைந்த உணவா அமையுது.
  • துவரம் பருப்பு, மற்ற பருப்பு வகைகள போலவே, தன்னோட வேர்களில உள்ள நைட்ரஜனை நிலைநிறுத்தம் செய்யுற பாக்டீரியாவோட சேர்ந்து மண்ணில நைட்ரஜனை நிலைநிறுத்தும் திறன் கொண்டது. எனவே, மண்ணின் வளம் அப்புறம் கட்டமைப்ப மேம்படுத்த இது உதவுது.
  • சில பாரம்பரிய மருத்துவ நடைமுறைகள்லயும், துவரம் பருப்பு அதனோட ஆரோக்கிய நலன்களுக்காக பயன்படுத்தலாம்.
  • தோல் பராமரிப்புப் பொருட்களில, தோலில் இருக்க இறந்த செல்கள் அப்புறம் அசுத்தங்கள அகற்ற பயன்படுத்தலாம்.

முடிவுரை

இந்த மாதிரி துவரம் பருப்போட நன்மைகள் எக்கச்சக்கமா இருக்கு. அதனால எல்லாருமே துவரம் பருப்ப சீரான அளவுல தினமும் உடம்புக்கு சேர்த்துக்கிட்டு வந்தா ஆரோக்கியமான வாழ்கை வாழலாம்.

உங்களுக்கு இயற்கையான முறைல தரமான துவரம் பருப்போ அல்லது அது சம்பந்தப்பட்ட வேற எந்த வகையான உணவுப் பொருட்களோ வேணும் அப்படினா Uyir Organic Farmer’s Market நீங்க வாங்கிக்கலாம்.