முந்திரிப் பருப்பு (Cashew)

முந்திரிப் பருப்பு (Cashew)

முந்திரிப் பருப்பு

வரலாற்றில் ஒரு பார்வை (History of Cashews)

முந்திரிப் பருப்பு, அறிவியல் ரீதியா அனாகார்டியம் ஆக்சிடென்டேல் அப்படீன்னு அழைக்கப்படுது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்ற கொண்டிருக்கு. முந்திரி மரங்கள் வடகிழக்கு பிரேசில பூர்வீகமா கொண்டது. அவை பல நூற்றாண்டுகளா காடுகள்ல வளர்ந்துருக்கு.

பல்வேறு தட்பவெப்ப நிலைகள் மற்றும் மண் வகைகளுக்கு தகவமைத்துக் கொள்ளும் தன்மை காரணமாக முந்திரி உலகின் பிற பகுதிகளுக்கும் விரைவாக பரவுது. 16 ஆம் நூற்றாண்டில போர்த்துகீசிய ஆய்வாளர்கள் இந்தியா, ஆப்பிரிக்கா அப்புறம் தென்கிழக்கு ஆசியா போன்ற பிற வெப்பமண்டல பகுதிகளுக்கு அவற்ற அறிமுகப்படுத்தறாங்க.

முந்திரி மரங்கள் சூடான, வெப்பமண்டல காலநிலையில செழித்து வளரும். அவை பொதுவா இந்தியா, வியட்நாம், நைஜீரியா, ஐவரி கோஸ்ட் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில வளர்க்கப்படுது.

மேலும், முந்திரி அதனோட பொருளாதார மதிப்பு காரணமா பல வெப்பமண்டல பகுதிகளில ஒரு முக்கிய பயிரா மாறுச்சு.

முந்திரியின் பண்புகள் (Characteristics of Cashews)

  • முந்திரிப் பருப்பு மற்றும் பழம் இரண்டும் பல தனித்துவமான பண்புகள கொண்டிருக்கு. இது ஒரு மென்மையான மேற்பரப்போட கிட்னி வடிவத்துல இருக்கும்.
  • ஒவ்வொரு பருப்பும் கடினமான ஒரு ஒட்டுக்குள்ள அடைக்கப்பட்டுருக்கு. இதுல உருஷியோல் அப்படீங்குற நச்சுப் பிசின் இருக்கு. கொட்டைகள பாதுகாப்பா உட்கொள்ளும் முன்னாடி இந்த நச்சுக் கலவைய அகற்ற சரியான செயலாக்கம் தேவைப்படுது.
  • முந்திரிப் பருப்புகள் மற்ற நட் வகைகளோட ஒப்பிடற அப்போ லேசான, இனிப்பு சுவை கொண்டிருக்கும்.
  • முந்திரி ஆப்பிள் பேரிக்காய் வடிவ பழம். இது முந்திரி மரத்துல இருந்து பருப்போட சேர்ந்து வளரும்.
  • முந்திரி ஆப்பிள்கள் அதனோட வகைய பொறுத்து மஞ்சள் நிறத்தில இருந்து சிவப்பு நிறத்தில இருக்கும்.
  • முந்திரி மரம் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மேலும், மரங்கள் மஞ்சள் அப்புறம் இளஞ்சிவப்பு நிறத்தில சிறிய, மணம் கொண்ட பூக்கள உருவாக்குது.
  • முந்திரி ஆப்பிள் முதலில உருவாகுது, அப்புறம் அதன் கீழ புருப்பு உருவாகுது. இது பழத்தின் அடிப்பகுதியில இருந்து வெளியே வரும்.

முந்திரியின் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் (Health benefits of Cashews and its nutritional composition)

  • முந்திரியில மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிரம்பி இருக்கு. இவை கெட்ட கொழுப்பின் அளவ (எல்டிஎல் கொலஸ்ட்ரால்) குறைக்கறதுக்கும், இதய நோய் அபாயத்த குறைக்கறதுக்கும் உதவுது.
  • இதுல ஃபோலிக் அமிலமும் இருக்கு.
  • முந்திரியில தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ் அப்புறம் துத்தநாகம் போன்ற தாதுகளோட வைட்டமின்கள் ஈ, கே அப்புறம் பி6 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கு. நோயெதிர்ப்பு செயல்பாட்ட ஆதரிக்குது, எலும்பு ஆரோக்கியத்த மேம்படுத்துது அப்புறம் ஆற்றல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுவது உட்பட உடலில பல வகையா இந்த தாதுக்கள் வேலை செய்யுது.
  • இதுல கலோரிகள் அதிகமா இருந்தாலும் முந்திரிய அளவா உட்கொள்ளும் போது எடை மேலாண்மைக்கு பயனுள்ளதா இருக்கும். இதுல இருக்க புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் அப்புறம் நார்ச்சத்து ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளல குறைக்க உதவும்.
  • முந்திரி குறைந்த கிளைசெமிக் குறியீட்ட கொண்டிருக்கு. எனவே இரத்த சர்க்கரை அளவ குறைக்குது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஆரோகியமான தேர்வா அமையுது. இருந்தாலும் மருத்துவரோட ஆலோசனையோட சாப்பிடறது எப்பவுமே நல்லது.
  • மேலும் முந்திரியில மெக்னீசியம், பாஸ்பரஸ் அப்புறம் கால்சியம் போன்ற தாதுக்கள் இருக்கு. அவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகள பராமரிக்க உதவுது.
  • இந்த கனிமங்கள சரியான அளவுல சேர்த்துக்கறது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள தடுக்க உதவுது.
  • மேலும் இதுல இருக்க வைட்டமின் ஈ மற்றும் செலினியம் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மூளைக்கு ஊட்டம் அளிக்குது, உடலில தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள நடுநிலையாக்க உதவுது.
  • புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நோய்களோட தொடர்புடைய ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்த குறைக்க ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கு வகிக்குது.
  • சில ஆய்வுகள் முந்திரியில உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயது தொடர்பான நினைவாற்றல் குறையும் அல்சைமர் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்னு கூறுது.
முந்திரிப்-பருப்பு

முந்திரியின் சமையல் பயன்பாடுகள் (Culinary uses of Cashews)

  • முந்திரிய பச்சையாகவோ அல்லது வறுத்தோ ஒரு சிற்றுண்டியா சாப்பிடலாம்.
  • முந்திரி வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெய் அல்லது பாதாம் வெண்ணெய்க்கு ஒரு சுவையான மாற்றா அமையுது. இத பிரட் டோஸ்ட், அப்புறம் பழங்கள் அப்புறம் காய்கறிகளோடவும் தொட்டு சாப்பிடலாம்.
  • விலங்கு பாலுக்கு மாற்றா முந்திரி பால் அல்லது முந்திரி கிரீம் செய்ய முந்திரிய தண்ணீரில கலக்கலாம். சூப்கள், சாஸ்கள் அப்புறம் வேகவைத்த பொருட்கள் உட்பட பால் அல்லது கிரீம் தேவைப்படும் சமையல்களில இத பயன்படுத்தப்படலாம்.
  • முந்திரிய தூளா அரைச்சு, பேக்கிங்கில பசையம் இல்லாத மாவுக்கு மாற்றா பயன்படுத்தலாம். அவை கேக்குகள், குக்கீகள் மற்றும் பார்கள் போன்ற இனிப்புகள் செய்ய பயன்படுது.
  • கறிகள், உப்புமா, வறுவல், நூடுல்ஸ், இனிப்புகள் கூட முந்திரிய சேர்த்துக்கலாம். இது எந்த உணவு கூட சேர்த்தாலும் அதுக்கு கூடுதல் சுவை குடுக்குது.
  • தாய் (Thai) மற்றும் சீன உணவுகள் போன்ற ஆசிய உணவு வகைகளில முந்திரி அடிக்கடி பயன்படுத்தப்படுது.
  • பால் இல்லாத சீஸ் மற்றும் கிரீம் மாற்றுகள செய்ய முந்திரிய ஊறவெச்சு ஈஸ்ட், எலுமிச்சை சாறு அப்புறம் மசாலாப் பொருட்களோட கலக்கலாம். பாஸ்தா, மக்கரோனி போன்ற சீஸ் அல்லது கிரீமி உணவு வகைகளில முந்திரி சேர்த்துக்கிட்டா அதிக சுவை தரும்.

முந்திரியின் சமையல் அல்லாத பிற பயன்பாடுகள் (Non-culinary uses of Cashews)

  • முந்திரிப் பருப்பு பதப்படுத்தறப்போ துணை உற்பத்திப்பொருளா நமக்கு கிடைக்குற முந்திரிப் பருப்பு ஓடு திரவம் (CNSL), பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளில பயன்படுத்தப்படுது.
  • அதன் இரசாயன பண்புகள் மற்றும் வெப்பம், நீருக்கான எதிர்ப்பின் காரணமா  உராய்வு புறணிகள், வண்ணப்பூச்சுகள், வார்னிஷ்கள், பிசின்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பில இது பயன்படுத்தப்படுது.
  • CNSL பினால்கமைன்களின் உற்பத்திலயும் பயன்படுத்தப்படுது.
  • இவை எபோக்சி ரெசின்களில உலர்த்து கருவியா பயன்படுத்தப்படுது.
  • முந்திரி பருப்பில இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முந்திரி எண்ணெய், அதன் ஈரப்பதமூட்டுற பண்புகளுக்காக அழகுசாதனத் தொழிலில பயன்படுத்தப்படுது. இது சருமத்துக்கு ஊட்டமளிக்க உதவுது.
  • முந்திரி ஓடுகள் தனித்துவமான வடிவங்கள் மணிகள், பொத்தான்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற அலங்கார பொருட்கள உருவாக்க ஏற்றதா அமையுது.
  • முந்திரி இலைகள் மற்றும் பட்டைகளில டானின்கள் இருக்கு. அவை இயற்கை சாயங்களா பயன்படுத்தப்படுது. சில கலாச்சாரங்களில, அவை துணிகள் அப்புறம் இழைகளுக்கு சாயமிட பயன்படுத்தப்படுது. பழுப்பு, மஞ்சள் அப்புறம் சிவப்பு நிறங்கள உருவாக்குது.
  • சில பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளில, முந்திரிப் பருப்புகள், முந்திரி பட்டை அப்புறம் முந்திரி இலைகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுது. உதாரணமா, பிரேசிலிய பாரம்பரிய மருத்துவத்தில, முந்திரி பட்டை வயிற்றுப்போக்குக்கு பயன்படுத்தப்படுது. அதே நேரத்தில முந்திரி இலைகள் பல்வலி மற்றும் தொண்டை புண்கள போக்க உதவுது.
  • முந்திரி கொட்டை ஓடு திரவம் (CNSL) பூச்சிக்கொல்லி பண்புகள கொண்டிருக்கு. மேலும், பூச்சிகள கட்டுப்படுத்த, மண்ணின் ஆரோக்கியத்த மேம்படுத்த, மண் திருத்தம் செய்ய பயன்படுத்தலாம்.

முடிவுரை

முந்திரி நாம மேற்கண்ட மாதிரி  பலவகையா நமக்கு பயன்படுது. உயிர் இயற்கை உழவர் சந்தையில, நீங்க தூய்மையான முந்திரி மற்றும் பிற உணவு பொருட்கள வாங்கிக்கலாம். மேலும், பிற உணவுப் பொருட்கள பத்தி தெரிஞ்சுக்க எங்களோட பிற வலைப்பதிவுகள பாருங்க.

வீட்டுல இருந்தபடியே எங்களோட உணவுப் பொருட்கள வாங்க எங்க Uyir Organic Farmers Market வலைத்தளம் மூலமாவோ அல்லது எங்களோட Uyir app மூலமாவோ ஆர்டர் செய்யுங்க.