புட்டு செய்வது எப்படி?
புட்டு, நம்ம தொன்மையான பாரம்பரிய உணவுகளில ஒரு சத்தான, சுவையான உணவு. புட்டுன்னா நமக்கு உடனே கேரளா தான் நினைவுக்கு வரும். அங்க இத காலை உணவா கடலை கறி அல்லது வாழைப்பழத்துடன் பரிமாறுவாங்க. ஆனா தமிழ்நாட்டிலேயும் புட்டுக்கு தனித்துவமான இடம் இருக்கு. குறிப்பா தென்மாவட்டங்களில வெல்லம், தேங்காய் சேர்த்து இனிப்பு வகையாவும், கொஞ்சம் கடலை மசியலோட சேர்த்தும் சாப்பிடப்படுது. இந்த புட்டு, நம்ம முன்னோர்கள் காலத்தில இருந்தே ஒரு ஆரோக்கியமான அனைவருக்கும் பிடிச்சு போன ஒரு உணவா இருந்துட்டு வருது. இந்த வலைப்பதிவுல புட்டு செய்வது எப்படி அப்படீன்னு பாக்கலாம் வாங்க.
புட்டு உணவின் வரலாறு
புட்டு என்பது கேரளாவோட அடையாள உணவா இருக்கு, தமிழ்நாட்டுலையும் இது பாரம்பரிய உணவா இருக்கு. கேரளாவில பலவகையா, கோதுமை புட்டு, ராகி புட்டு, கம்பு புட்டு என எல்லாமே செய்வாங்க. தமிழ்நாட்டில ராகி புட்டு மற்றும் வெல்லம் சேர்த்த இனிப்பு புட்டு பொதுவா பிரபலம். இத பழங்காலத்தில படை வீரர்களும், பல நேரம் உழைக்கும் உழவர்களும் உடல் ஆற்றலுக்காக சாப்பிட்டாங்க. உடல் முழுக்க நார்ச்சத்து குடுக்கிறதால, செரிமானத்துக்கு, குளிர்ச்சிக்கெல்லாம் உதவற மாதிரி இத அன்றாட உணவா பயன்படுத்தினாங்க.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு அல்லது ராகி மாவு: 1 கப்
- தண்ணீர்: தேவையான அளவு (தூளில் ஈரப்பதம் சேர்க்க)
- உப்பு: சிறிதளவு
- தேங்காய் துருவல்: ½ கப்
- வெல்லம் அல்லது சர்க்கரை: தேவையான அளவு (இனிப்புக்கு)
- ஏலக்காய் பொடி: 1/4 தேக்கரண்டி
புட்டு செய்முறை
1. மாவு தயாரித்தல்
- அரிசி அல்லது ராகி மாவ ஒரு பாத்திரத்தில எடுத்து, தேவையான அளவு தண்ணீர் மெல்ல சேர்த்து, ஈரமான தூள் போல செஞ்சுக்கணும்.
- மாவு பொடியாவே, கட்டிகள் இல்லாம இருக்கணும். அது பாக்க ஈரமான மணல் மாதிரி தோணணும்.
2. ஆவியில் வேகவைத்தல்
- இட்லி தட்டில அல்லது புட்டு பாத்திரத்தில மாவ போட்டு, அதோட தேங்காய் துருவல தூவி, அவிக்கணும்.
- சுமார் 10-12 நிமிடங்கள் வேகவெச்சு, மென்மையா இருக்கா அப்படீன்னு பாருங்க.
3. இனிப்பு சேர்த்தல்
- வெல்லம் இல்லைனா சர்க்கரைய கொஞ்சம் தண்ணீரில கரைச்சு, வேகவைத்த புட்டில சேர்த்து நல்லா கலக்கணும்.
- ஏலக்காய் பொடியும் கூட சேர்த்து சுவைய கூட்டலாம்.
4. பரிமாறுதல்
சூடான புட்ட சிறிது துருவிய தேங்காய் தூவி, தேநீருடன் சாப்பிடலாம். இல்லனா நல்ல கடலை மசியல் கூட சேர்த்து சாப்பிடலாம்.
புட்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- புட்டுல இருக்கும் நார்ச்சத்து செரிமானத்த சுலபமாக்கி உதவுது.
- கோடைக்காலங்களில புட்டு சாப்பிட்டா உடலுக்குள் நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.
- வெல்லமும் தேங்காயும் உடலுக்கு நல்ல ஆற்றல் குடுக்கும்.
- ராகி அல்லது அரிசி மாவ பயன்படுத்தறதால, இது தினசரி ஆரோக்கிய உணவாவும் இருக்கும்.
உயிர் உழவர் சந்தை பொருட்கள் கொண்டு ஆரோக்கியமான புட்டு
இந்த புட்டு ரெசிபி செய்வதற்கான அரிசி மாவு, ராகி மாவு, தேங்காய், வெல்லம் போன்ற பொருட்கள Uyir Organic Farmers Market-ல நீங்க வாங்கிக்கலாம். Uyir-ல கிடைக்கும் பொருட்கள் இயற்கை முறையில எந்த ஒரு வேதி பொருளும் சேர்க்காம தயாரிக்கப்படற உழவர்களிடமிருந்து நேரடியா கொள்முதல் செய்யப்படுது. இப்படி சுத்தமான கலப்படம் இல்லாத பொருட்களோட புட்டு செஞ்சா, உங்களுக்கு ஆரோக்கியமும், சுவையும் ஒரே நேரத்துல கிடைக்கும்!
முடிவுரை
இன்று, நவீன வாழ்க்கை முறை அப்புறம் மாறும் உணவுப் பழக்கங்களில, புட்டு போன்ற பாரம்பரிய உணவுகள மீண்டும் முறைப்படுத்தி உண்ணும் பழக்கம் மிகவும் அவசியமாகுது. நம் மூதாதையரின் வாழ்க்கை முறையையும் அவர்களின் புத்திசாலித்தனமான உணவுப் பழக்கங்களையும் நினைவில கொண்டுவருது. நம்மளோட சமையல்ளையும் புட்டு போன்ற பாரம்பரிய உணவுகள சேர்த்தா, அது புது தலைமுறைக்கும் ஆரோக்கியத்தையும் பாரம்பரியத்தின் பெருமையையும் சேர்த்து வழங்கும். இப்போவே புட்ட செஞ்சு சுவைத்து பாருங்க, உயிர் இயற்கை உழவர் சந்தையோட ஆரோக்கியமான மற்றும் தரமான பொருட்கள்கூட சுவை மட்டும் இல்லாம நம் பாரம்பரியத்தின் பெருமையையும் சேர்த்து அனுபவிங்க!