கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில்
வரலாற்றில் ஒரு பார்வை (History of Aseel chickens)
நாட்டுக் கோழி இனங்களில அதனோட தனித்துவமான உருவம், வலிமை அப்புறம் சண்டையிடுற பண்புக்காக பெயர் பெற்ற கோழி அப்படீன்னா அது அசீல்கள் தான்.
இந்த அசில் கோழி ஆந்திரா அப்புறம் தமிழ்நாட்டோட மேற்கு பகுதிகளான கொங்கு மண்டலத்த தாயகமாக கொண்டிருக்கு.
இந்த வகை அசில் பொதுவா தென்னிந்தியாவில குறிப்பா தமிழ்நாட்டில மட்டும் காணப்படுது. இவை அக்காலத்தில சண்டை சேவல்களா வளர்த்தாங்க. ஆனா தற்காலத்தில அழகுக்காக தா முக்கியமா வளர்க்குறாங்க. அதுக்காகவே இது ரொம்ப மதிப்பு மிக்கதா இருக்கு.
இதுலயும் தனித்துவமான ஒரு வகையான கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில் பத்தி பார்க்கலாம் வாங்க.
உருவ அமைப்பு
இந்தக் கோழி இனங்கள் கிளிய போன்ற அலக கொண்டிருக்கறதால கிளி மூக்கு சேவல் அப்படீனும், இதுங்களுக்கு மயில போல நீண்ட வால்கள் இருக்கறதால விசிறிவால் சேவல் அப்படீனும் அழைக்கப்படுது.
ஒரு வயதான கிளிமூக்கு அசில் ஐந்து கிலோ கிராம் எடைல இருந்து ஏழு கிலோகிராம் எடை வரை வளரும். இந்த அசில்கள் ஒரு காலத்துல சீனா அப்புறம் தாய்லாந்துக்கு கூட ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுங்களோட சராசரி ஆயுட்காலம் 5 முதல் 8 ஆண்டுகள் வரை இருக்கும். இருந்தாலும் இதுங்க 10 வயதுவரை கூட வாழ்றதும் உண்டு.
கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசிலின் வகைகள்(Varieties of Parrot Beak Aseel Chickens)
இந்த கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில்கள மேலும் அதுங்களோட உடலமைப்பு அப்புறம் இயற்கையான வண்ண அடிப்படையில வகைப்படுத்தப்படுத்து
· மயில் கருப்பு (கருப்பு அப்புறம் மஞ்சள் நிறம்)
· காகம்/செங்கருப்பு (கருப்பு அப்புறம் சிவப்பு நிறம்)
· செவலை (சிவப்பு நிறம்)
· கருங்கீரி/செங்கீரி (கருப்பு/சிவப்பு வண்ண புள்ளி கொண்டது)
· சாம்பல் பூதி (சாம்பல் நிறம்)
· கொக்கு வெள்ளை (வெண்மை நிறம்)
· நூலன் (வெண்மை அப்புறம் கருப்பு நிறம்)
· பொன்ரம் (தங்க பழுப்பு நிறம்)
இதன் புகழ்
அசிலோட அதிகரிச்சுட்டு வர்ற தேவையின் காரணமா இத வளர்க்கறவங்க எண்ணிக்கையும் அதிகரிச்சுட்டே வருது. அதனால இந்தக் கோழியோட மதிப்பும் உயர்ந்துட்டே வருது.
கிளிமூக்கு விசிறிவால் அசில் விலை
இவற்றோட நிறம், நீளம், வால் அமைப்பு, அலகின் தடிமன் அப்புறம் வளைவு, தலையோட வடிவம், அப்புறம் ஒட்டுமொத்த உடல் அமைப்பு, அளவு, நிலைத்தன்மை ஆகிய எல்லாவற்றையும் பொறுத்து இதனோட விலை ரூ. 7000துல இருந்து ரூ.1,50,000 வரை இருக்கு.
இவை காணப்படும் ஊர்கள்
இந்த வகை சேவல்கள தென்தமிழக கிராமங்களில பல நூற்றாண்டுகளா வளர்த்துட்டு வர்ராங்க. மதுரை, அலங்காநல்லூர், திண்டுக்கல், திருச்சி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதிகள்ல இவை மிக அதிக அளவுல காணப்படுது. பல நூற்றாண்டுகளா தலைமுறை தலைமுறையா தேர்ந்தெடுத்த கோழி இனங்கள வளர்த்து கிளி மூக்கு அசில்கள உருவாக்கி இருகாங்க.
ஒவ்வொரு ஆண்டும் அசில் கண்காட்சிகள் கூட நடைபெறுது. இந்தக் கண்காட்சியில இந்தியா முழுவதும் இருந்து அசில் வளர்க்குறவங்க அவுங்க வளர்க்குர அசில் சேவல்கள பெருமையா காட்சிப்படுத்துவாங்க.
இறைச்சி மற்றும் முட்டை
அசில் கோழிகள் அதிகமா முட்டை இடறது இல்ல. ஆனா விடுற கொஞ்சம் முட்டைகள நல்ல முறைல அடைகாத்து குஞ்சுகள பொறிக்குது. இந்த கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில் ஆண்டுக்கு 40 முட்டை வரை கூட இடும். பிற கோழி இனங்கள் போலவே இறைச்சிக்கு பயன்படுத்தப்பட்டாலும் இது முக்கியமா சண்டைக்காகவே வளர்க்கப்படுது.
முடிவுரை
இந்த வலைப்பதிவுல நாம அசில் கோழி இனங்கள்ல ஒன்னான கிளி மூக்கு பெருவெடை அசில் பத்தி பாத்தோம். இத நம்ம ஊர்கள்ல கோழி பிரியர்கள் வீட்டுல செல்லப்பிராணியா கூட வளர்த்துட்டு வர்ராங்க. இந்த மாதிரி பிற பாரம்பரிய உள்நாட்டு இன விலங்குகள் அல்லது பறவைகள் பத்தி தெரிஞ்சுக்கணும் அப்படீன்னா எங்களோட பிற வலைபதிவுகள பாருங்க. மேலும், ஆரோக்கியமான கலப்படம் இல்லாத இயற்கையான முறைல விளைவிக்கப்பட்ட உணவுகள வாங்கணும் அப்படீனாலும் எங்களோட Uyir Organic Farmers Market வலைத்தளம் மூலமாவோ app மூலமாவோ நீங்க வாங்கிக்கலாம்.