கன்னி ஆடு (Kanni Goats)

கன்னிஆடு (Kanni Goats)

கன்னி ஆடு

கன்னி ஆடு அப்படீங்குறது இந்தியாவோட தென் தமிழகத்தில காணப்படுற ஒரு இறைச்சி வகை ஆடு. இது தமிழகத்த பூர்வீகமா கொண்டது. இந்த ஆடுகள் தமிழகத்தோட வெப்பம் அப்புறம் வறண்ட காலநிலைக்கு நல்லா பொருந்தி அமஞ்சுருக்கு.

இது ஒரு பாரம்பரிய கால்நடை வகை அப்புறம் பல நூற்றாண்டுகளா, தமிழ்நாட்டுல கிராமப்புற வாழ்வாதாரத்தோட முக்கிய பங்க இதுக்கு இருக்கு.

இத முக்கியமா இறைச்சி, பால் அப்புறம் தோல் போன்ற பொருட்களுக்காக வளர்க்குறாங்க.

கன்னி ஆடுகள் உருவ அமைப்பு (Characteristics of Kanni Goats)

இவை பொதுவா உருவ அமைப்பில சிறிய அப்புறம் நடுத்தர அளவுல இருக்கும். வெள்ளை அல்லது கருப்பு நிறத்துல இருக்கும்.

கன்னி ஆடுகளுக்கு காதுகள் நடுத்தர அளவில நிமிர்ந்து இல்லைனா அரை நிமிர்ந்து இருக்கும். அவற்றோட கொம்புகள் ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒவ்வொரு மாதிரி வளைந்து அல்லது நேரா இருக்கலாம்.

ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் (Nutrients in Goat Meat)

கன்னி ஆடுகள், மற்ற ஆடு இனங்கள போலவே இறைச்சி அப்புறம் பால் மூலமா நமக்கு ஊட்டச்சத்துக்கள அப்புறம் ஆரோக்கிய நன்மைகள வழங்குது.

இறைச்சி (Benefits of Goat meat)

  • ஆட்டு இறைச்சில உயர்தர புரதம் இருக்கு. இது நம்மளோட தசை வளர்ச்சி அப்புறம் உடல் பழுதுபார்ப்புக்கு பயன்படுது.
  • ஆற்றல் வளர்சிதை மாற்றம் அப்புறம் ஒட்டுமொத்த ஆரோகியத்துக்கும்  முக்கியமான பி வைட்டமின்கள் (பி12, நியாசின், ரிபோஃப்ளேவின் போன்றவை) இதுல இருக்கு.
  • மேலும், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் போன்ற தாதுக்களும் இருக்கு. இது நோயெதிர்ப்பு செயல்பாடு, எலும்பு ஆரோக்கியம் அப்புறம் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில முக்கிய பங்கு வகிக்குது.
  • மற்ற வகை சிவப்பு இறைச்சிகளோட ஒப்பிடும்போது, ​​ஆட்டு இறைச்சியில கொழுப்பு அப்புறம் கொலஸ்ட்ரால் அளவு குறைவா இருக்கும்.

பால் (Benefits of Goat Milk)

  • இது சருமத்திற்கு நல்லது. எனவே ஆட்டு பால் கொண்டு குளியல் சோப்பு தயாரிக்கப்படுது. எங்க உயிர் இயற்கை உழவர் சந்தைல நாங்க தரமான ஆட்டு பாலுல சோப்பு செஞ்சு விக்கறோம்.
  • இதன் பாலில பரதமும், அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இருக்கு.
  • மேலும், இதுல கால்சியம் இருக்கு. இது எலும்பு ஆரோக்கியத்துக்கும் தசை செயல்பாட்டிற்கும் ரொம்ப அவசியம்.
  • வைட்டமின்கள் ஏ, டி அப்புறம் பி வைட்டமின்கள் இதுல இருக்கு. இது ஒட்டுமொத்த ஆரோக்கியம் அப்புறம் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு பங்களிக்குது.
  • பசும்பாலை விட ஆட்டு பால் எளிதா ஜீரணிக்கக்கூடியது. அதனால, இது லாக்டோஸ் சகிப்புத்தன்மை அப்புறம் பிற செரிமான பிரச்சினைகள் இருக்கவங்களுக்கு சரியானதா அமையுது.

கன்னி ஆடுகள் சமையல் பயன்பாடுகள் (Culinary uses of Goat Meat)

கன்னி ஆட்டு இறைச்சி பல்வேறு சமையல் தயாரிப்புகள்ல பயன்படுது. செட்டிநாட்டு ஆட்டு கறி, கேரள ஆட்டு கறி, கிரில், பார்பிக்யூட் ஆட்டு கறி, ஸ்கெவெர்ஸ், கெபாப்ஸ், சூப்கள், பிரியாணி, புலாவ், கிரேவிகள், சாஸ்கள், தந்தூரி அப்படீன்னு எக்கச்சக்கமான வகையான ஆட்டு கறி உணவுகள செஞ்சு சாப்பிடலாம்.

சமையல் அல்லாத பிற பயன்பாடுகள் (Uses and Benefits of Rearing Kanni Goats)

சமையல் பயன்பாடுகள் தவிர, கன்னி ஆடுகள் பல தயாரிப்புகளுக்கு பயன்படுது.

  • ஆட்டு தோல் அதனோட ஆயுள் அப்புறம் நெகிழ்வுத்தன்மைக்கு பெயர் பெற்றது. கன்னி ஆட்டு தோல் பெரும்பாலும் காலணிகள், பைகள், பெல்ட்கள், கையுறைகள் அப்புறம் பிற தோல் பொருட்கள் தயாரிப்பில பயன்படுத்தப்படுது.
  • கன்னி ஆடுகள் உட்பட சில ஆட்டு இனங்கள், நார்கள உற்பத்தி செய்யுதுங்க. அத நூலா சுழற்றி ஜவுளிக்கு பயன்படுத்தலாம். ஆடுகளிலிருந்து வரும் கம்பளி, காஷ்மீர் இல்லைனா மொஹேர் அப்படீன்னு அழைக்கப்படுது.
  • ஆட்டு எருவில செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கு. இது பயிர்கள் அப்புறம் தோட்டங்களுக்கு சிறந்த கரிம உரமா செயல்படுது. இது மண்ணின் அமைப்பு, வளம் அப்புறம் நீர் தக்கவைப்ப மேம்படுத்த உதவுது. ஆரோக்கியமான தாவர வளர்ச்சிக்கும் பயிர் விளைச்சல அதிகரிப்பதற்கும் பங்களிக்குது.
  • ஆட்டு முடிகள வண்ண தூரிகைகள் செய்ய அல்லது கம்பளி மாதிரியான பாரம்பரிய கைவினைப்பொருட்கள் செய்ய கூட நாம பயன்படுத்தலாம்.
  • இது மட்டும் இல்லாம இந்த ஆடுகள் ரொம்ப அன்பானது. அதனால சிலர் செல்ல பிராணிகளாவும் வளர்த்துட்டு வர்ராங்க.
  • கன்னி ஆடுகள் கூடுதலா கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கு. உள்ளூர் திருவிழாக்கள், சடங்குகள் அப்புறம் விழாக்களில இடம்பெறுது.

சவால்கள்

இந்த ஆடுகள் முக்கியமானதா இருந்தாலும் பல சவால்கள சந்திக்குதுங்க.  அயல்நாட்டு இனங்களோட போட்டி, மேய்ச்சல் நில இழப்பு அப்புறம் கால்நடை தேவைகளுக்கு குறைந்து போன மதிப்பு அப்படீன்னு பல காரணங்கள் இந்த ஆடுகள அச்சுறுத்திட்டு இருக்கு.

பாதுகாப்பு முயற்சிகள்

சமீப ஆண்டுகளில, கன்னி ஆடு போன்ற உள்நாட்டு கால்நடை இனங்கள பாதுகாக்க வேண்டியதன் அவசியத்த எல்லாரும் அங்கீகரிச்சுருக்காங்க. இந்த ஆடுகளோட மரபியல் பன்முகத்தன்மைய பாதுகாக்கரத்துக்கும், நிலையான இனப்பெருக்க முறைகள மேம்படுத்தவும் அரசு அப்புறம் அரசு சார்பு நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டது வர்ராங்க.

முடிவுரை

ஒட்டுமொத்தமா, கன்னி ஆடுகள் தங்கள் பங்குக்கு மனித வாழ்க்கையில பல்வேறு விதமா பங்களிக்குது. இந்த வலைப்பதிவுல நாம கன்னி ஆடுகள பத்தி பாத்தோம். இந்த மாதிரி நம்முடைய பாரம்பரியமான வீட்டு விலங்குகள பத்தி தெரிஞ்சுக்கணும் அப்படீன்னா எங்களோட பிற வலைப்பதிவுகள படியுங்க. மேலும் எங்களோட உயிர் இயற்கை உழவர் சந்தைல (Uyir Organic Farmers Market) எந்த வேதி பொருட்களும் பயன்படுத்தாம விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் வாங்கி மகிழுங்க.