Foxtail-Millet +தினையின் நன்மைகள்

தினை (Thinai / Foxtail millet)

தினையின் நன்மைகள்

வரலாற்றில் ஒரு பார்வை (History of Foxtail Millet)

பழங்காலத்தில முதல் முதலா மனிதனால பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி. முலயே சீனாவுல பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டுட்டு வந்துருக்கு மேலும், கிழக்காசியாவுல 10,000 ஆண்டுகளா பயிரிடப்படறதா கூறப்படுது.

இது உலகத்துலையே அதிகமா உற்பத்தி செய்யப்படுற இரண்டாவது தானியம். இதுல இந்தியா முதலிடத்துல இருக்கு. தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில அதிகமா பயிரிடப்பட்டு பயன்படுத்தப்படற தானியம் தினை தான். மேலும், தமிழக்கத்துல ஆயிரக்கணக்கான ஆண்டுகளா தினை பயிரிடப்பட்டுட்டு வர்றதா வரலாறு சொல்லுது.

அதுமட்டும் இல்லாம இப்பவும் சீனா, இந்தியா, ஐரோப்பா அப்புறம் ஆப்பிரிக்காவோட பல பகுதிகளில உள்ள தொல்பொருள் தளங்களில தினை கண்டுபிடிக்கபட்டுருக்கு . உலகத்துல இருக்க பல சமூகங்களில ஒரு முக்கிய உணவா தினை இருக்கு.

இலக்கியம், சிற்பங்கள், ஓவியங்கள், மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்ளையும் தினை இடம்பெற்றுக்கு. மேலும், பல்வேறு காலங்கள்ளையும் வெவ்வேறு புவியியல் சூழல்கள்ளையும் தினைய காணமுடியுது.

இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, ரஷ்யா, துருக்கி, எத்தியோப்பியா அப்படீன்னு பல நாடுகளில பாரம்பரிய உணவு வகைகளில பல தினை உணவு வகைகள் இன்னைக்கு வரைக்கும் பயன்பாட்டுல இருக்கறத நம்மளால பாக்க முடியுது.

தினையின் பண்புகள்

இந்த சிறுதானியப் பயிர் தனித்துவமான பண்புகள வெளிப்படுத்துது. தானியங்கள் சிறியதா, கண்ணீர் துளிகள போல இருக்கும். மேலும் மஞ்சள், பழுப்பு அப்புறம் வெள்ளை அப்படீன்னு பல்வேறு வண்ணங்களில இருக்கும்.

ஃபாக்ஸ்டெயில் தினை(Foxtail millet) ஒரு குறுகிய காலத்துலயே வளரக் கூடியது. பொதுவா 60ல இருந்து 90 நாட்களுக்குள்ள முதிர்ச்சி அடைஞ்சுடும். அதுக்கு வறட்சிய தாங்குற தன்மை இருக்கு. அப்புறம், பலவகையான மண்ணுக்கு ஏற்றமாதிரி பல நிலப்பரப்புகள்ல வளரக் கூடியது.

ஆங்கிலத்தில இது மில்லட் அப்படீன்னு கூற படுற தானிய வகையில ஒன்னா வகைப்படுத்தப்பட்ருக்கு. தினைக்கதிர் நரியோட வால் மாதிரியே பச்சை நிறத்தில காட்சியளிக்கும். அதனால, ஆங்கிலத்துல பாக்ஸ் டைல் மில்லட் அப்படீன்னு இன்னோரு பெயரும் இருக்கு. அதுமட்டும் இல்லாம இட்டாலியன் மில்லட் (Italian Millet) அப்படீன்னும் ஆங்கிலத்தில அழைக்கப்படுது.

மேலும் தமிழுல தினைக்கு இறடி, ஏளல், கங்கு அப்படீன்னு பல பெயர்கள் இருக்கு.

தினையின் நன்மைகள்

தினையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients in Thinai)

மத்த தானியங்கள விட தினை அதிக ஊட்டச்சத்து மதிப்ப கொண்டிருக்கு.

இது பசையம் (gluten) இல்லாத தானியம். அதனால பசயம் ஒவ்வாமை இருக்கவங்களுக்கு ஏற்ற உணவு.

இது கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, தாமிரம், கொழுப்பு அப்புறம் வைட்டமின் பி ஆகியவற்ற கொண்டிருக்கு.

எனவே இந்த தானியத்த சாப்பிடறது நம்மளோட உடல் வளர்ச்சி, செல் செயல்பாடுகள் அப்புறம் ஆற்றலுக்கு ரொம்ப அவசியம்.

தினையின் நன்மைகள் (Benefits of Thinai / Foxtail Millet)

  • இதய ஆரோக்கியத்துக்கு சிறந்தது. இதயத்துக்கு தேவையான விட்டமின்கள், தாதுப் பொருட்கள கொண்டிருக்கு. அதனால மாரடைப்பு அப்புறம் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வர்றத குறைக்கும்.
  • தினை மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்ட கொண்டிருக்கு. அதனால சர்க்கரை நோய் வர்ற வாய்ப்ப குறைக்குது.
  • மேலும் இதுல சல்பர், குரோமியம் அப்புறம் அமினோ அமிலங்கள் இருக்கு. இந்த சத்துக்கள் நீரிழிவு நோய கட்டுப்படுத்த உதவுது.
  • மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவ கட்டுப்படுத்த தினை சாப்பிடறது ஒரு நல்ல வழி அப்படீன்னு சில ஆராய்ச்சிகள் கூறுது.
  • தினைல அதிக நார்ச்சத்து இருக்கறதால ஜீரண சக்திய அதிகரிச்சு, மலச்சிக்கலையும் எளிதாக்கி மற்ற செரிமான செயல்கள மேம்படுத்துது.
  • இது பசிய சீக்கிரமா போக்கி வயிறு நிரம்புன ஒரு உணர்வ கொடுக்குது. அதனால நாம சரியான அளவுல உணவ சாப்புடறோம். இதன் மூலமா நம்மளோட உடல் எடை குறைய உதவி செய்யுது.
  • இதுல இருக்க இரும்புச்சத்து இரத்த சோகை (அனிமியா) பிரச்சினைய தடுக்குது.
  • ஃபோலிக் அமிலம் அப்புறம் பிற அமினோ அமிலங்களும் இதுல இருக்கு. அவை கர்ப்ப காலத்துல கருவில வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியா இருக்குது.
  • சிஸ்டைன் அப்புறம் மெத்தியோனைன் அப்படீங்குற அமினோ அமிலங்கள் கல்லீரலையும் உடலையும் நச்சுத் தன்மைய நீக்கி சுத்தம் செய்யுது. இரத்த ஓட்டத்துல இருந்து தேவையற்ற நச்சுக்கள அகற்றவும் உதவுது.
  • கல்லீரல் நோய்கள தடுக்க உதவும்னு ஆய்வுகள் சொல்லுது.
  • மேலும், உடலுக்கு தேவையான ஆற்றல குடுத்து உடல நல்லா செயல்பட உதவுது.
  • தினையில மெத்தியோனைன் அப்படீங்குற ஒரு அமினோ அமிலம் இருக்கு. இது உடல்ல குருத்தெலும்பு உற்பத்தியாகுறதுக்கு முக்கியமானது. இது முடி உதிர்வத தடுத்து அப்புறம் நகங்கள வலுப்படுத்த உதவுது.

தினையில இருக்க கால்சியம், மெக்னீசியம் அப்புறம் பாஸ்பரஸ் வலுவான பற்கள் அப்புறம் எலும்புகள உருவாக்க உதவுது. எனவே இது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நல்லது. வயதானவர்களுக்கு வர்ற ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள தடுக்கவும் செய்யுது

இத்தனை நன்மைகளை தர்ற தினைய நாம சூப்பர் புட் அப்படீனே சொல்லலாம்.

சமையல் பயன்பாடுகள் (Culinary Uses of Foxtail millet)

பல நூற்றாண்டுகளாக தென்னிந்திய உணவு வகைகளில ஒரு முக்கிய  சமையல் பொருளா இருந்துட்டு வருது. இட்லி அப்புறம் தோசை போன்ற பாரம்பரிய காலை உணவுகள்ள இருந்து பலவகையான உணவு வகைகளில இது பயன்படுது. மேலும், இதுல கஞ்சி, உப்புமா அப்புறம் இனிப்புகள் செஞ்சு சுவையா சாப்பிடலாம்.

மேலும் தினை கொண்டு லட்டு, பொங்கல், பூரி, பனியாரம், ஊத்தப்பம், வடை, இடியப்பம், பாயசம், கொழுக்கட்டை, கேசரி, சேமியா, பர்பி, போண்டா, பஜ்ஜி அப்புறம் தட்டை அப்படீன்னு பல விதமான உணவுகள செஞ்சு சாப்பிட முடியும்.

சமையல் அல்லாத பிற பயன்பாடுகள்

தினை பல்வேறு சமையல் அல்லாத பிற பயன்பாடுகளையும் கொண்டிருக்கு.

  • இது கால்நடைகளுக்கு தீவனமா பயன்படுத்தப்படுது.
  • தினையின் விரிவான வேர் அமைப்பு மண் அரிப்ப தடுக்க உதவுது.
  • அறுவடை முடிஞ்ச அப்புறம் இந்த செடிய மண்ணுல உழுது மண் வளத்த அதிகரிக்கலாம்.
  • சில கலாச்சாரங்களில பாரம்பரிய சடங்குகள் அப்புறம் விழாக்களில பயன்படுத்தப்படுது.
  • தினை இல்லைனா அதனோட உலர்ந்த தண்ட வெச்சு அலங்கார பொருட்கள உருவாக்கலாம்.
  • மேலும், மூலிகை மருத்துவ முறைல பயன்படுத்தப்படுது.

முடிவுரை

நாம இந்த வலை பதிவுல தினைய பத்தி எல்லா தகவல்களையும் தெரிஞ்சுக்கிட்டோம். இத தினசரி உணவுல எதோ ஒரு வகைல சேர்த்துக்கோங்க. அதுல இருந்து கிடைக்குற நன்மைகள பெற்று மகிழுங்க.

உங்களுக்கு சிறந்த இயற்கையான முறைல உருவாக்கப்படற தரமான தினை மற்றும் பிற உணவு பொருட்களும் வேணும் அப்படீன்னா நீங்க நம்ம உயிர் இயற்கை உழவர் சந்தைல (Uyir Organic Farmers Market) வாங்கிக்கலாம். மேலும் எங்களோட பிற உணவு பொருட்கள பத்தி தெரிஞ்சுக்க எங்களோட பிற வலைப்பதிவுகள பாருங்க.