அரிசி பாயசம் செய்வது எப்படி

அரிசி பாயசம் செய்வது எப்படி?

அரிசி பாயசம் செய்வது எப்படி?

அரிசி பாயசம் நம்ம தமிழர்களோட பாரம்பரிய அப்புறம் விசேஷ உணவுகளில ஒன்னு. இது பண்டிகை காலங்களில, திருமணங்களில, அப்புறம் பிற சிறப்பு நிகழ்ச்சிகளில பரிமாறப்படும் பிரபலமான இனிப்பு வகை. பசுமாட்டு பால், அரிசி, அப்புறம் சர்க்கரை இல்லைனா கருப்பட்டி எல்லாத்தையும் மெல்லிய கலவையா சேர்த்து செய்யுற  இந்த பாயசம் நெஞ்ச எளிதில கவர்ந்துடும். இன்னைக்கு நாம அரிசி பாயசம் செய்வது எப்படி என்பத இந்த வலைப்பதிவுல விரிவா பார்க்கலாம் வாங்க. 

அரிசி பாயசத்தின் சிறப்புகள் 

  • நம் தமிழ் சமையலோட அடையாளமா பாயசம் எல்லோருக்கும் பிடிக்கக்கூடியது. 
  • இது பால், அரிசி, அப்புறம் ஏலக்காய் போன்ற பொருட்கள் கொண்டு செய்யுறதால ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள வழங்குது. 
  • இது தீபாவளி, பொங்கல் அப்புறம் பிற விழாக்களில முக்கிய இடம் பெறுது. 
  • எளிதா செய்யக்கூடியது – குறைந்த பொருட்களுடன் ஒரு ஸ்பெஷல் இனிப்பு உணவா இது நாம செய்யலாம். 

அரிசி பாயசம் செய்ய தேவையான பொருட்கள் 

அரிசி பாயசம் செய்வது எப்படி? 

  • முதலில, அரிசிய நல்லா கழுவி 10 -15 நிமிடங்கள் தண்ணீரில ஊவெய்யுங்க. 
  • ஒரு பாத்திரத்தில 2 கப் தண்ணீர் சேர்த்து, அரிசிய மிதமான தீயில சமைக்கணும். 
  • அரிசி வெந்து மென்மையா மாறனும். 
  • அரிசி வெந்ததும், அதில 4 கப் பால சேர்த்து நன்றா கிளறிக்கனும். 
  • மிதமான தீயில, பால அடிக்கடி கிளறி, பாயசம் தடிமனான ஆகுற வரை சமைச்சுக்கணும்.   
  • சர்க்கரை இல்லைனா கருப்பட்டிய சேர்த்து, சரியான அளவுக்கு சுவையா சமைச்சுக்கணும். 
  • கருப்பட்டி சேர்த்து இத கொஞ்ச நேரம் கரைய விட்டுக்கணும். சர்க்கரை சேர்க்கும் போது உடனடியா காலத்துக்கும். 
  • இறுதியில, ஏலக்காய் பொடிய சேர்த்து பாயாசத்துக்கு ஒரு நல்ல மணத்த குடுங்க. 
  • ஒரு சிறிய கடாயில நெய்ய சூடாக்கி, முந்திரி அப்புறம் திராட்சிய பொன்னிறமா வறுத்து பாயசத்தில சேர்த்துக்கோங்க. 
  • பாயசத்த சூடா அல்லது குளிர்ந்த நிலையில பரிமாறனும். 
  • மேலே முந்திரி இல்லைனா பாதாம் துண்டுகள அலங்கரிக்க பயன்படுத்தலாம். 

சில சிறப்பு குறிப்புகள் 

  • அரிசி வகை: பாசுமதி அரிசி அல்லது சீரகசம்பா அரிசி பாயசத்திற்கு சிறந்த தேர்வா இருக்கும். 
  • பால காய்ச்சும் போது அடிக்கடி கிளறினா அது ஆதி பிடிக்காம இருக்கும். 
  • ஆரோக்கியமா சாப்பிட விரும்பினா, கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பாயசத்த நீங்க தயாரிக்கலாம். 
  • நறுக்கிய பாதாம் அப்புறம் பிஸ்தாவ சேர்த்தா உங்களுக்கு கூடுதல் சுவை கிடைக்கும். 
  • பாயசத்தை செஞ்ச உடனே சூட பரிமாறினா அதனோட சுவை மறக்கவே முடியாது. 

அரிசி பாயசத்தின் ஆரோக்கிய நன்மைகள் 

1. இது உடலுக்கு ஆற்றல் தரும். அரிசி அப்புறம் சர்கரைல இருக்க கார்போஹைட்ரெட்ஸ் உடனடி ஆற்றல் குடுக்கும். 

2. ஜீரணத்திற்கு நல்லது – பால் அப்புறம் ஏலக்காய் ஜீரண சக்திய மேம்படுத்துது. 

3. பாலுள்ள மூலமா இருக்க கால்சியம் உங்க உடலுக்கு கிடைக்கும்.

4. இயற்கையான இனிப்பான கருப்பாட்டியோட ஊட்டச்சத்துகள் ரத்தசத்தத்த அதிகரிக்க உதவும். 

Uyir Organic Farmers Market

Uyir Organic Farmers Marketல கிடைக்கும் பச்சரிசி, பால், அப்புறம் கருப்பட்டி எல்லாமே இயற்கை முறையில சுத்தமா தயாரிக்கப்படுது. Uyir Organic பொருட்கள உங்க சமையலில பயன்படுத்தி உங்க குடும்பத்தினரோட ஆரோக்கியத்தையும் சுவையையும் பாதுகாத்துடுங்க! உங்களுக்கு தேவையான அனைத்து உணவு அப்புறம் பிற கலப்படம் இல்லாத பொருட்கள் எல்லாமே நீங்க நம்ம உயிர் இயற்கை உழவர் சந்தை கடைகல்லையோ அல்லது வலைத்தளம் அல்லது Uyir app மூலமோ நீங்க வாங்கிக்கலாம்.

முடிவுரை 

அரிசி பாயசம் அப்படீங்குறது நம் பாரம்பரியத்தில ஒரு இனிய சுவையான அடையாளமா இருக்கு. உங்க சமையல சிறப்பா மாத்த நீங்க Uyir Organic பொருட்கள பயன்படுத்தி இந்த இனிப்பு பாயசத்த செஞ்சு பாருங்க. உங்க குடும்பத்துல இருக்க எல்லாரும் இத ரசித்து சுவைத்து மகிழ்வார்கள்!

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *