அரிசி கூழ் செய்வது எப்படி?
அரிசி கூழ் தமிழர்களோட பாரம்பரிய உணவுகளில மிக முக்கியமானது. ஒரு காலத்தில ஒவ்வொரு வீட்லயும் காலை உணவா அரிசி கூழ் பரிமாறப்பட்டுச்சு. இது இதனோட ஆரோக்கிய நன்மைகளுக்காக மட்டும் இல்லாம, எளிதா செய்யக்கூடிய தன்மைக்காகவும் அன்றாட உணவா மாறிடுச்சு. இன்றைக்கு இருக்கற நவீன வாழ்க்கை முறையில மறந்து போன இந்த பாரம்பரிய உணவ மீண்டும் நாம தெரிஞ்சுக்கிட்டு சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சா, நம் ஆரோக்கியத்தையும், பாரம்பரியத்தையும் நல்லா பாதுகாக்க முடியும். இந்த வலைப்பதிவுல அரிசி கூழ் செய்வது எப்படி அப்படீன்னு பார்க்கலாம் வாங்க.
அரிசி கூழின் வரலாறு
அரிசி கூழ் பத்தி சங்க இலக்கியங்களில கூட பல தகவல்கள் காணப்படுது. விவசாயிகளின் அன்றாட உழவு வேளைக்கு அப்புறம், உடல ஆற்றல் குறையாம வெச்சுக்க, இந்த கூழ் சிறந்த உணவா இருக்கு. இது உடல் வெப்பநிலைய குறைச்சு, ஜீரண சக்திய மேம்படுத்தும். கிராமங்களில இன்னைக்கு கூட செய்யப்படும் அரிசி கூழ், நம் மூதாதையர்களோட ஆரோக்கியமிக்க வாழ்க்கை முறைய நியாபகப்படுத்துது.
அரிசி கூழின் ஆரோக்கிய நன்மைகள்
- கூழில அதிகமா இருக்க நார்ச்சத்து, ஜீரணத்த எளிதாக்கி வயிற்ற சுகமா வைத்திருக்க உதவுது.
- கோடைக்காலங்களில கூழ் உடல் வெப்பத்த குறைச்சு குளிர்ச்சியூட்டுது.
- கூழில இருக்க அரிசியும், தண்ணீரும் உடல நீண்ட நேரம் பசியில்லாம சுறுசுறுப்பா வெச்சுக்க உதவுது.
- இதுல பயன்படுத்தப்படுற புளி அப்புறம் தயிர்ல இருக்க நுண்ணுயிரிகளால, வயிற்றின் ஆரோக்கியம் மேம்படுது.
- கூழ வெல்லம் அல்லது சிறிது உப்புடன் சேர்த்து சாப்பிடுவதால, உடல் தசைகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
அரிசி கூழ் செய்ய தேவையான பொருட்கள்
- அரிசி – 1 கப்
- தண்ணீர் – 4 கப்
- உப்பு – தேவைக்கு
- தயிர் அல்லது புளி – ருசிக்கு
- வெல்லம் (இயற்கை இனிப்புக்கு)
- நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
அரிசி கூழ் செய்வது எப்படி?
- அரிசிய ஓரிரு முறை நன்றா கழுவி, சுத்தம் செஞ்சுக்கணும்.
- பெரிய அடிகனமான பாத்திரத்தில 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வெச்சுக்கணும்.
- கொதிக்கும் தண்ணீரில அரிசி சேர்த்து, மிதமான தீயில நன்றா வேகும் வரை சமைக்கணும்.
- அரிசி கஞ்சி போன்ற அளவுக்கு கூழா மாறும் வரை சமைக்கணும்.
- கூழில உப்பு சேர்த்து நன்றா கிளறி, மிதமான சூட்டில பரிமாறலாம்.
- கூழ தனியா பரிமாறலாம் இல்லைனா, தயிர் அல்லது புளிய கலந்தும் பரிமாறலாம்.
- வெல்லம், நறுக்கிய வெங்காயம் அப்புறம் பச்சை மிளகாயுடன் கூழ அலங்கரித்தும் பரிமாறலாம்.
அரிசி கூழை பரிமாறும் முறைகள்
- கோடைக்காலத்தில கூழ புளியோட சேர்த்து சாப்பிட்டா வெப்பத்த குறைக்கும்.
- சாம்பார் அல்லது காய்கறி குழம்போட கூழின் சுவை இன்னும் அதிகமாகும்.
- தயிர் சேர்த்து நல்லா குளிர்ச்சியான உணவாவும் சாப்பிடலாம்.
- வெல்லம் சேர்த்து இனிப்பான ஆரோக்கிய உணவாவும் பரிமாறலாம்.
உயிர் பொருட்களோடு சுத்தமான அரிசி கூழ்
உயிர் இயற்கை உழவர் சந்தையிலிருந்து கிடைக்கும் தரமான அரிசி, தயிர் அப்புறம் வெல்லம் போன்ற பொருட்கள வாங்கி பயன்படுத்துனீங்கன்னா உங்க கூழ் ஆரோக்கியமாவும் சுவையாவும் சமைக்கலாம். Uyir Organic Farmers Market-ல கிடைக்கும் பொருட்கள்:
- நேரடியா இயற்கை விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட எந்த ஒரு வேதி பொருட்களும் இல்லாத இயற்கையானது.
- இயற்கை உணவு பொருட்கள பார்த்தோம்னா அது உணவோட உண்மையான சுவைய நமக்கு வழங்குது.
- மேலும் இது உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது.
மேலும், நீங்க உயிர் உணவுப் பொருட்கள நேரடியா கடைகல்லையோ அல்லது uyironline.in வலைத்தளம் மூலமாவோ வாங்கிக்கலாம்.
முடிவுரை
அரிசி கூழ், நம் முன்னோர்களின் பாரம்பரியத்த பிரதிபலிக்கும் ஒரு சுவையான, ஆரோக்கியமான உணவா இருந்து வருது. இன்னைக்கு இந்த கூழ அடிக்கடி உணவில சேர்த்து, நம் உடல் நலத்தையும் பாரம்பரியத்தையும் நம்மனால காக்க முடியும். உயிர் இயற்கை உழவர் சந்தைல இருந்து தரமான பொருட்கள வாங்கி, ஆரோக்கியமான அரிசி கூழ இன்றைக்கே வீட்டில செய்ய முயற்சி செய்யுங்க. இதன் சுவையையும், நன்மைகளையும் அனுபவிக்க ஆரம்பிங்க!