வெள்ளரியின் நன்மைகள்
வரலாற்றில் ஒரு பார்வை (History of Cucumber)
வெள்ளரிகள் 3,000 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவில தோன்றியதா நம்பப்படுது. அவை முதல்ல இமயமலை அடிவாரத்தில பயிரிடப்பட்டிருக்கலாம்.
அப்புறம் அங்க இருந்து, சீனா உட்பட ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் பரவுச்சு. இன்று, வெள்ளரிகள் உலகத்தோடு பல பகுதிகளில வளர்க்கப்படுது.
மேலும், பல்வேறு கலாச்சார நடைமுறைகள்ல அப்புறம் நம்பிக்கைகளில வெள்ளரிகள் பங்கு வகிச்சுருக்கறதா வரலாறு சொல்லுது. உதாரணமா, சில பழங்கால சமூகங்களில, வெள்ளரிய கருவுறுதலின் சின்னமா கருதி இருகாங்க. வெள்ளரி உற்பத்தியில சீனா முதலிடத்துல இருக்கு.
வெள்ளரியின் பண்புகள் (Characteristics of Cucumber)
வெள்ளரி (Cucumber) ஒரு கொடி வகைச் செடி (creeper). வெள்ளரிகள் கோடை கால பருவ பயிர்கள். அப்புறம், நன்கு வடிகட்டிய, வளமான மண்ணுல செழித்து வளரும்.
வெள்ளரியோட தாவரவியல் பெயர் Cucumis sativus. இவை பொதுவா நீளமா, உருளை வடிவத்துல இருக்கும். காலப்போக்குல, சிறிய ஊறுகாய் வெள்ளரிகள் முதல் பெரிய வெட்டுதல் வெள்ளரிகள் வரை உருவாக்கப்பட்டு பயிடப்பட்டுட்டு வருது. இந்த ஒரு ஒரு வகை வெள்ளரியும் ஒரு தனித்துவமான பண்புகள கொண்டிருக்கு. அவை குறிப்பிட்ட சமையல் பயன்பாடுகளுக்கு பொருத்தமா இருக்கு.
நல்ல வெள்ளரிக்காயின் தோல் மென்மையானது. அது பச்சை, மஞ்சள் அப்புறம் வெள்ளை அப்படீன்னு நிறத்தில மாறுபடலாம்.
வெள்ளரிக்காய் செடிகள் தரையில பரவி வளர கூடியது. மேலும் ஆதரவு குடுத்தோம்னா செங்குத்தாகவும் வளர்க்கலாம். இலைகள் நல்லா பெருசாவும், மடல்களாகவும் இருக்கும். வளரும் பழங்களுக்கு நிழல் தரும்.
வெள்ளரியின் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் (Benefits of cucumber)
- வெள்ளரிகள் பெரும்பாலும் நீரால ஆனது. அதனால நம்ம உடம்ப நீர்ச்சத்து குறையாம பாத்துக்கும். நீரேற்றமா இருக்கறது நம்மளோட ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அவசியம்.
- இதுல பல வகையான வைட்டமின்கள் இருக்கு.
- வைட்டமின் கே இரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு முக்கியமானது.
- வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்திய குடுக்குது. மேலும், தோல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்குது.
- வைட்டமின் ஏ பார்வை, தோல் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டுக்கு அவசியம்.
- இதுல இருக்க பொட்டாசியம் இரத்த அழுத்தத்த சீராக்க உதவுது.
- மக்னீசியம் தசை, நரம்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு பங்களிக்குது.
- வெள்ளரிகள் உணவு நார்ச்சத்து கொண்டு செரிமானத்துக்கு உதவுது. மேலும், ஆரோக்கியமான எடைய பராமரிக்க உதவது.
- வெள்ளரில ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட பல்வேறு ஃபிளாவனாய்டுகள் இருக்கு. அவை நம்ம செல்கள சேதமாகாம பாதுகாக்குது.
- மேலும் இதுல குக்குர்பிடசின்கள் அப்புறம் லிக்னான்ஸ் போன்ற கலவைகள் இருக்கு. இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் வராம தடுக்குற பண்புகள கொண்டிருக்கு.
- வெள்ளரில இருக்க சிலிக்கா தோல், முடி மற்றும் நகங்கள் போன்ற இணைப்பு திசுக்களோட ஆரோக்கியத்துக்கும் வலிமைக்கும் பங்களிக்குது.
- கடைசியா வெள்ளரில கலோரிகள் குறைவா இருக்கறதால, ஆரோக்கியமான சிற்றுண்டியா அமையுது.
சமையல் பயன்பாடுகள் (Culinary uses of cucumber)
வெள்ளரிகள் பல்வேறு சமையல் பயன்பாடுகளில பரவலா பயன்படுத்தப்படுது.
- வெள்ளரிகள் சாலட்களில ஒரு பிரபலமான பொருளா இருக்கு. இது சாப்பிடறதுக்கு புத்துணர்ச்சியாவும், மொறுமொறுப்பாவும் இருக்கும். இத சிறு துண்டுகளா வெட்டி நாம அப்படியே சாப்பிடலாம்.
- குளிர்ந்த சூப்கள் செய்ய வெள்ளரிகள் பயன்படுது.
- உலக அளவில வெள்ளரிய வெச்சு அதிகமா செய்யப்படுற உணவு அப்படீன்னா அது ஊறுகாய் தான்.
- சாண்ட்விச்கள், பர்கர்கள் போன்ற உணவுகளில கூட வெள்ளரி சேர்க்கப்படுது.
- மிக பிரபலமான சுஷி ரோல்களில ஒரு பொதுவான பொருளா வெள்ளரிக்கா இடம்பெருது.
- இந்திய உணவு வகைகளில பார்த்தோம்னா, வெள்ளரிக்காய் ரைதா அப்படீங்குறது ஒரு தயிர் சார்ந்த சைட் டிஷ். வெள்ளரிகள், புதினா அப்புறம் மசாலாப் பொருட்கள சேர்த்து செய்யப்படுது. இது காரமான உணவுகளோடு சேர்த்து சாப்பிடப்படுது.
பிற பயன்பாடுகள் (Various Uses of Cucumber)
- வெள்ளரிகள் அதனோட சருமத்த மென்மையாக்கும் பண்புகளுக்காக ஸ்பா சிகிச்சையில பயன்படுத்தப்படுது.
- வெள்ளரிகள் நம்மளோட சருமத்துக்கு ரொம்ப நல்லது.
- கண்கள் மேல வெள்ளரிக்காய் துண்டுகள வைக்கறது மூலம் கண்களின் வீக்கம் குறையும்.
- வெள்ளரி கிரீம்கள் உங்களோட சருமத்துக்கு உதவும்.
- வெயிலால உங்களோட சருமம் அவதிப்பட்டு சிவப்பா இருந்தா, வெள்ளரி சாற்ற அதன் மீது தடவுவதன் மூலம் அது குணமாகும்.
- மேலும், உங்க சருமம் மென்மையாவும், சுருக்கம் ஏற்படாமையும் இருக்கும்.
- வீட்டுல இருக்க உலோக மற்றும் கண்ணாடி பொருட்கள சுத்தம் செய்ய வெள்ளரிகள பயன்படுத்தலாம். கறைகள அகற்ற ஒரு சிறந்த பொருள்.
- வெள்ளரிகள் செடிகளில பூச்சிகள விரட்டும். அதனால தோட்ட மண்ணுக்கு அதனோட தோல்கள பயன்படுத்தலாம்.
- குளிர்சாதனப்பெட்டி அல்லது அறைகளில ஏற்படுற துர்நாற்றத்த அகற்றும்.
- வெள்ளரி துண்டுகள் கொண்ட தண்ணீர் உங்கள் செடிகள் நன்றாக வளர உதவும். வெள்ளரில தாவரங்களுக்கு நன்மை பயக்கும் பொருட்கள் இருக்கு.
இறுதி சுருக்கம்
வெள்ளரிக்காய் அதனோட வகை அப்புறம் நாம தோலோட சேர்த்து சாப்பிடறோமா என்பத பொறுத்து அதனோட சத்துக்கள் மாறுது.
அதனோட தோலுள குறிப்பிடத்தக்க அளவு ஊட்டச்சத்து இருக்கறதால, உரிக்கப்படாத வெள்ளரிகள சாப்பிடறது நல்லது. சீரான உணவுல ஒரு பகுதியா வெள்ளரிகள சேர்த்துக்கறது பல வைட்டமின்கள், தாதுக்கள் அப்புறம் நீரேற்றத்த உங்க உடம்புக்கு தருது.
வெள்ளரிக்காய் பற்றி இந்த வலைப்பதிவு மூலம் உங்களுக்கு நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கும். மேலும் மற்ற உணவு பொருட்கள பத்தி தெரிஞ்சுக்கணும்னு விருப்பப்பட்டா எங்களோட பிற வலைப்பதிவுகள பாருங்க.
மேலும், இயற்கையான மற்றும் தரமான உணவு பொருட்கள மட்டுமே விற்பனை செய்யுற எங்களோட உயிர் இயற்கை உழவர் சந்தைல (Uyir Organic Farmers Market) உங்க வீட்டுக்கு தேவையான அணைத்து உணவு பொருட்களையும் நீங்க வாங்கிக்கலாம்.