Subtotal: ₹27.00
View cart “Traditonal Coriander seed Powder 100g / நாட்டு கொத்துமல்லி பொடி” has been added to your cart.
Show:
Showing all 8 results
உடலுக்கு பலம் தரும் கம்பு தோசை - கம்புமாவு, இட்லி மாவு, தயிர், உப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் நறுக்கியது. சிறிது கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து, மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
தினை உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் சிருதானியம். இனிப்புச் சுவை கொண்டது. உடலை வலுவாக்கும், சிறுநீர் பெருக்கும் தன்மைகள் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். கனிமச் சத்துக்கள்: இரும்புசத்தின் அளவு, மற்ற தானியங்களைவிட, குறிப்பாக அரிசி,கோதுமை, ராகியைவிட, இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
நாம் இன்னும் தொடர்ந்து எடுத்து வரும் ஒரு சிறு தானியம் ராகி. ராகி பக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா ஆகியவை பரிச்சயம். ராகியில், பாலில் உள்ளதை விட அதிகமான கால்சியம் உள்ளது. அதேபோல 100 கி ராகியில் 4 மி.கி. வரை இரும்பு சத்து நிறைந்துள்ளது. ராகி அதிக நார்ச்சத்து உடையது. குளுட்டன் இல்லாதது. தையமின், ரிபோபிளேவின் ஆகிய உடலுக்குத் தேவையான அமினோ அமினோ அமிலங்கள் கொண்டது. ராகியில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். ராகி உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.
இது உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். கோதுமைக் கூழில் வெந்தயத் தூளும் ஒரு சிட்டிகை மஞ்சளும் சேர்த்துச் சாப்பிட்டால், மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும். சருமத்தைப் பொலிவாக்கும். கார்போஹைட்ரேட், நார்ச் சத்து, மெக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், ஃபோலிக் அமிலம், தைமின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ரிபோஃப்ளோவின், புரதம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் ஆகியவை ஓரளவும்... குரோமியம், கால்சியம் மிகக் குறைந்த அளவும் இருக்கின்றன.
இந்த மாவு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டும். எளிதில் ஜீரணமாகும். சருமத்தைப் பொலிவாக்கும் தன்மையும் இதற்கு உண்டு. புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், நார்ச் சத்து ஆகியவை இதில் அதிகமாக உள்ளன. இரும்பும் குரோமியமும் ஓரளவு இருக்கின்றன. எண்ணெய்ச் சத்து, கால்சியம், பீட்டா கரோட்டின், தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன