வரலாற்றில் ஒரு பார்வை
வாழைப்பழம் முதல்ல இப்போ இருக்கற மாதிரி பெருசு பெருசாலாம் இருக்காது. ஒரு விரல் நீளம்தா இருக்கும். அரேபிய மொழியில “பனானா’ அப்படீன்னா விரல்னு அர்த்தம். அதனால அரேபியர்கள் வாழைப்பழத்த ‘பனானானு’ பெயரிட்டு அழைச்சாங்க. அப்புறம் நாள் போக போக ஆங்கிலத்துலையும் இந்த பெயர பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ உலகம் முழுக்க “பனானா’ அப்படீனே அழைக்கப்படுது. இந்த வலைப்பதிவுல வாழையின் நன்மைகள் பற்றி பாக்கலாம் வாங்க.
முதல் முதல்ல வாழைப்பழம் ஆசியாவிலதான் தோன்றுச்சு. வாழை பத்திய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு 600 ஆம் ஆண்ட சேர்ந்த புத்த மத ஏடுகளில காணப்படுது.
கி.மு. 327-ல் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தப்போ, வாழைப்பழத்த விரும்பிச் சாப்பிட்ருக்காரு.
திரும்பி போகும்போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதா கூறப்படுது.
அதுக்கப்புறம் அரேபியர்கள் இத விற்பனை செஞ்சாங்க. கி.பி 200 ஆம் ஆண்டில சீனாவுல வாழை சாகுபடி நடந்துச்சு அப்படீங்குறதுக்கான ஆதாரங்கள் இருக்கு.
பண்புகள்
மா, பலா, வாழை அப்படீன்னு முக்கனிகளில கடைசி பழமா இருந்தாலும் உலக மக்களால தினமும் விரும்பி சாப்பிடப்படற முதல் பழம் வாழைப்பழம் தான்.
வாழைல சமையலுக்கு பயன்படுவது வாழைக்காய்னும் (plantain), பழமாக அப்படியே சாப்பிட கூடியது வாழைப்பழம்னும் (banana) சொல்லப்படுது.
பலவகைய சேர்ந்த தாவரங்களுக்கு மத்தியில வாழைமரம் மட்டும்தா ஒரு விதைஇலை தாவரமா இருக்கு. மற்ற பழமரங்கள் எல்லாமே இருவிதையிலைத் தாவரங்கள்.
வாழைப்பழங்கள் 12 ‘Cக்கும் குறைவான வெப்பநிலையில வெச்சா கருக்கத் தொடங்கிடும்.
மனிதன் முதன் முதலா பயன்படுத்தின காட்டுவாழையோட, பழங்கள் விதையோட தான் இருந்துச்சு. இதுல மூசா அக்கியூமினாட்டா (Musa acuminata) அப்படிங்கறது முக்கியமா ஒரு வகை. இந்தியாவில பழங்காலத்த சேர்ந்த காட்டுவாழை மூசா பால்பிசியனாவும் (Musa balbisiana) விதையோட தான் இருந்துச்சு. அதுமட்டும் இல்லாம, இது பூச்சி அப்புறம் நோய் தாங்குற குணத்த கொண்டிருக்கு. இயற்கையாகவே இந்த இரு சிற்றினமும் சேர்ந்து விதை இல்லாத மூசா சாப்பியென்ட்டம் (Musa X sapientum) அப்படீங்குற இனம் தோன்றுச்சு. அதுக்கப்புறம், நிலத்தடி வாழைக்கிழங்கு மூலமா இனவிருத்தி செய்யப்பட்டுட்டு வருது.
வாழைப்பழ வகைகள்
வாழைப்பழத்துல பல வகைகள் இருக்கு. அவை பேயன், ரஸ்தாளி, பச்சை, நாட்டு, மலை, நவரை, சர்க்கரை, செவ்வாழை , பூவன், கற்பூர, மொந்தன், நேந்திர, கரு, அடுக்கு, வெள்ளை, ஏலரிசி, மோரீஸ், மட்டி இப்படி பல இருக்கு.
சமையல் பயன்பாடுகள்
வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய், பழம், அப்படீன்னு எல்லா பாகங்களையும் நாம சமையலுக்கு பயன்படுத்தலாம்.
- வாழைப்பழம் முக்காவாசி அப்படியே பழமா சாப்பிடப்படுது.
- பாலோட கலந்து கூழாவும் நாம பருகலாம்.
- பனிக்கூழ் (ice cream), அப்புறம் பிற குழந்தைகளுக்காக செய்யப்படுற உணவுகள்ல அப்புறம் மேலும் பழக்கலவைகள்ல பயன்படுத்தப்படுது.
- பழத்த நல்லா உலர வெச்சு பொடியாக்கி, மாவோட கலந்து பேக்கரி வகை உணவுகள்ல சேர்க்கப்படுது.
- வாழைக்காய் அப்புறம் சில வகை வாழைப் பழத்த மெல்லிய துண்டுகளா சீவி, வாழைப் பொரிப்புகள் செய்ய பயன்படுத்தலாம்.
- ஆசியாவில, குறிப்பா இந்தியாவில வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு அப்படீன்னு வாழைமரத்துல இருக்குற பல பாகங்கள சமையலுக்கு பயன்படுத்தறோம்.
- வாழைக்காய் பொறியல், நீராவியில் வேகவைத்த வாழையிலை பசை அரிசி, வாழைப்பழப்பாகு, வாழைக்காய் பஜ்ஜி, வாழைக்காய் வறுவல், நேந்திரம் சிப்சு, வாழைப் பொடி அப்புறம் பனானா மில்க்சேக் அப்படீன்னு பல வகையான உணவுகள வாழை கொண்டு தயாரிக்கப்படுது.
பிற பயன்பாடுகள்
- வாழை இலை இந்தியாவில உணவு உண்ண தட்டா பயன்படுது.
- வாழைமரங்கள அறுவடை முடிஞ்சதுக்கப்புறம் மீதி இருக்கற மரங்களையும் மர பாகங்களையும் வெட்டி மண்ணுல சாச்சு அப்படியே மக்க விட்ருவாங்க. இந்த மரத்தோட தண்டுகள் உரங்கள உறிஞ்சி சேமிச்சு வெச்சுருக்கறதால, இது நல்ல உரமா பயன்படுது.
- வாழைப்பூ, காய், தண்டு போன்ற வாழ மரத்தோட பாகங்கள் சித்த மருத்துவதுளையும் பயன்படுது.
- வாழை பட்டைகளும் பல வகையா பயன்படுது. இதுல இருந்து நார் பிரிச்சு எடுக்கப்படுது. வாழைநார வெச்சு தரைவிரிப்புகள், பல வகையான தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய துணிகளும் செய்யப்படுது.
- தமிழ்நாட்டில இதனோட நார மலர் மாலைகள் தொடுக்க கூட பயன்படுத்தறாங்க.
- விவசாயிகள் இத பல விதமான பொருட்கள கட்ட கயிற்றுக்கு பதிலா பயன்படுத்தறாங்க.
- இத ஊற வெச்சு எந்திரத்துல அடிச்சு பேப்பரும் செய்யப்படுது.
ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள்
இது ஒரு மிக சத்தான பழம். இது பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள வழங்குது. வாழைப்பழத்தில காணப்படுற சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் என்னனு பாக்கலாம்.
- வாழைப்பழங்கள் நல்ல உணவு நார்ச்சத்து கொண்டிருக்கு, இது செரிமானத்த சீராக்க உதவுது.
- வாழைப்பழத்தில வைட்டமின் சி இருக்கு. இது நோயெதிர்ப்பு மண்டலத்த ஆதரிக்குது. மேலும், உடலுக்கு தேவையான இரும்ப உறிஞ்சறதுக்கும் உதவுது.
- பைரிடாக்சின் அப்படீன்னு அழைக்கப்படுற வைட்டமின் பி6 மூளை வளர்ச்சி அப்புறம் செயல்பாட்டுக்கு, நரம்பியக்கடத்திகளோட உற்பத்திக்கும் முக்கியமானது.
- இதுல இருக்க பொட்டாசியம் சரியான இதயம், தசை செயல்பாடு, இரத்த அழுத்தம் அப்புறம் திரவ சமநிலைய சீராக்க பயன்படுது.
- தசை, நரம்பு செயல்பாடு அப்புறம் எலும்பு ஆரோக்கியம் அப்படீன்னு உடலில பல்வேறு உயிர்வேதியியல் செயல்முறைகள்ல இந்த தாது ஈடுபட்டுருக்கு.
- வாழைப்பழத்துல இயற்கையான சர்க்கரை நிறைய இருக்கு. அதுல முக்கியமா குளுக்கோஸ், பிரக்டோஸ் அப்புறம் சுக்ரோஸ் இருக்கு. இவை விரைவா எளிதில ஜீரணிக்கக்கூடிய ஆற்றல வழங்குது.
- வாழைப்பழத்தில சிறிய அளவில புரதமும் இருக்கு.
- டோபமைன் அப்புறம் கேடசின்கள் உள்ளிட்ட பல ஆக்ஸிஜனேற்றங்கள் இருக்கு. அவை உடலில உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்த எதிர்த்துப் போராட உதவுது.
- மேலும் வாழைப்பழத்தோட ஊட்டச்சத்து அளவு அதனோட வகை, அளவு, எவ்வளவு பழுத்துருக்கு அப்படீங்குறத பொறுத்து மாறுது.
- வாழைத்தண்டு சிறுநீர் பாதையில ஏற்படுற கற்கள நீக்க வல்லது அப்படீன்னு நம்பப்படுது.
- நீரிழிவு நோய் இருக்கறவங்க வாழைப்பூ அவியல சாப்பிடறது ரொம்ப நல்லது.
பண்பாட்டு முக்கியத்துவம்
வாழைப்பழங்கள் இந்து கடவுள்களோட வழிபாட்டுல முக்கிய இடம் பிடிக்குது. பண்டைய இந்தியாவுல வாழை கடவுள்களின் உணவாக கருத்தப்பட்டுச்சு. குறிப்பா தென்னிந்தியாவுல வாழை இலைகளும் இறைவழிபாட்டில முக்கிய இடம்பெட்ருச்சு.
விருந்தாளிகளுக்கு வாழை இலையில, குறிப்பா தலை வாழை இலையில அதாவது நுனி இலைல உணவு பரிமாறுறது தமிழர்களோட பண்பாடு மற்றும் கலாச்சாரம்.
தமிழர்களோட திருமணம், புதுமனை புகுவிழா போல அனைத்து வகையான மங்கல நிகழ்ச்சிகள்ளையுமே கட்டாயமா குழையோட இருக்க கூடிய வாழை மரங்கள வாசல்ல தோரணமா கட்டுவாங்க.
முடிவுரை
இந்த வலைப்பதிவுல பொதுவா வாழைப்பழங்கள பத்தி பல்வேறு தகவல்கள பார்த்தோம். தினமும் வாழைப்பழத்த சாப்பிடறது ரொம்ப நல்லது. வாழைப்பழங்கள் பல்வேறு வகைகள்ல பலவிதமான சுவைகள்ல இருக்கு. உங்களுக்கு பிடிச்ச வாழைப்பழத்த தேர்ந்தெடுத்து அத சாப்பிடுங்க; அதனோட ஆரோக்கிய நன்மைகள பெற்று மகிழுங்க.
மேலும், இயற்கையான முறைல எந்த வேதிப்பொருட்களும் பயன்படுத்தாம விளைவிக்கப்பட்ட வாழைப்பழங்கள தேர்ந்தெடுத்து வாங்கி சாப்பிடுங்க. நீங்க இயற்கையான முறைல விளைவிக்கப்பட்ட தரமான உணவு பொருட்கள நம்ம உயிர் இயற்கை உழவர் சந்தைல (UYIR ORGANIC FARMERS MARKET) வாங்கிக்கலாம்.