திணை அடை செய்வது எப்படி?
திணை (Foxtail Millet) என்பது நம் தமிழரின் பாரம்பரிய உணவுகளில மிக முக்கியமான சிறுதானியமா இருந்து வருது. இது சத்துக்களால நிரம்பியது அப்புறம் பல ஆரோக்கிய நன்மைகளக் கொண்டது. இன்றைக்கு திணை போன்ற சிறுதானியங்கள நாம மீண்டும் உணவில சேர்த்துக்கறது, நம்ம ஆரோக்கியத்தையும் காக்குது, நம் பாரம்பரியத்தையும் மறக்காம காப்பாத்துற ஒரு செயலா அமையுது. இந்த வலைப்பதிவுல திணை அடை செய்வது எப்படி அப்படீன்னு பாக்கலாம் வாங்க.
திணையின் பாரம்பரியம்
சங்க கால இலக்கியங்கள் திணைய அடிக்கடி குறிப்பிட்டுருக்கு. இந்த சிறுதானியம் பல காலம் வரை சேமிக்கக்கூடியது. கம்மியான தண்ணீரிலே கூட வளரக்கூடியது அப்டீங்கறதுனால, விவசாயிகளின் நம்பகமான பயிரா இருக்கு. தமிழ்நாட்டின் பல பகுதிகளில, குறிப்பா கிராமப்புறங்களில, இது ஒரு அடிப்படை உணவா பயன்படுத்தப்படுது. பழமையான பாரம்பரியத்த இன்று மீண்டும் நிறைவேற்ற, திணை உணவுகள நம் சமையலறையில கொண்டு வருவது அவசியம்.
திணை அடை செய்முறை
தேவையான பொருட்கள்
– திணை அரிசி – 1 கப்
– துவரம்பருப்பு – 1/4 கப்
– கடலைப்பருப்பு – 1/4 கப்
– உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
– சிவப்பு மிளகாய் – 4-5
– பெருங்காயம் – ஒரு சிட்டிகை
– கறிவேப்பிலை – 1 கொத்து
– இஞ்சி – 1 துண்டு
– வெங்காயம் – 1 (நறுக்கப்பட்டது)
– தேங்காய்துருவல் – 1/4 கப்
– உப்பு – தேவைக்கு
– எண்ணெய் – அடை சுட்டதற்கு
செய்முறை:
- திணை அரிசிய 3-4 மணி நேரம் தண்ணீருல ஊறவெச்சுக்கோங்க.
- பருப்புகள ஒன்றா 3 மணி நேரம் ஊறவெக்கணும்.
- திணை அரிசி, பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவற்ற சேர்த்து தருதருபான மாவா அரைச்சுக்கோங்க.
- அடுத்து மாவில நறுக்கிய வெங்காயம், தேங்காய்துருவல், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு ஆகியவற்ற சேர்த்து நன்றா கலக்கிக்கோங்க.
- தோசை கல்ல சூடாக்கி, சிறிது எண்ணெய் தடவி, மாவ ஊத்தி அடை போல சுட்டுக்கணும்.
- பொன்னிறமா வந்ததும் திருப்பி மறுபக்கமும் சுட்டுருங்க. அவ்ளோதாங்க சூடான சுவையான திணை அடை தயார்.
பரிமாறும் முறைகள்:
திணை அடைய தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, அல்லது அவியல் போன்ற உணவுகள்கூட பரிமாறலாம்.
உயிர் பொருட்களோட ஆரோக்கியமான திணை அடை
இந்த திணை அடைக்கு தேவையான திணை அரிசி, பருப்புகள், தேங்காய் போன்ற அனைத்துப் பொருட்களையும் நீங்க நேரடியா Uyir Organic Farmers Market-ல இருந்து வாங்கலாம். வீட்டுல இருந்தபடியே Uyironline.in வலைத்தளம் மூலமாவும் வாங்கிக்கலாம். நாங்க விக்குற அனைத்து உணவுப் பொருட்களும் எந்த ஒரு வேதி பொருட்களும் பயன்படுத்தாம இயற்கையான முறையில விளைவிக்கப்பட்ட உணவுகள்.
Uyir Organic Farmers Market-இன் சிறப்புகள்
- எல்லா பொருட்களும் இயற்கையான முறையில தயாரிக்கப்படுது.
- உழவர்களிடம் இருந்து நேரடியா கொள்முதல் செய்யப்பட்டு, தரம் பார்க்கப்பட்டு உங்ககிட்ட கொண்டு சேர்க்குறோம்.
- சுத்தமான, தூய்மையான முறையில சிறிது அளவுல பார்த்து பார்த்து விளைவிக்கப்பட்டு சுவையும் தரமும் உறுதி செய்யப்படுது.
- உங்க ஆரோக்கியத்த மட்டும்மில்லாம, இயற்கைய பாதுகாக்கவும் Uyir முக்கிய பங்கு வகிக்குது.
Uyir-இல் கிடைக்கும் பொருட்கள பயன்படுத்தி, திணை அடைய சுவையோட ஆரோக்கியமா செஞ்சு பாருங்க!
திணையின் ஆரோக்கிய நன்மைகள்
- இதுல நார்ச்சத்து அதிகம். எனவே ஜீரணத்த மேம்படுத்தி மலச்சிக்கல தடுக்குது.
- இது குறைந்த குளுக்கோஸ் குறியீடு கொண்டிருக்கு. இதனால சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
- உயர் புரதச்சத்து இதுல இருக்கறதால உடல் வளர்ச்சிக்கும், தசை வலிமைக்கும் உதவுது.
- இது தாது சத்துக்கள் நிறைந்தது. அதாவது இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை எலும்பு ஆரோக்கியத்த மேம்படுத்தி, இரத்த சோகைய தடுக்குது.
- கோடைக்கால சூட்ட குறைக்கும் அப்புறம் உடம்புக்கு குளிர்ச்சியூட்டுற தன்மையும் இது கொண்டிருக்கு.
முடிவுரை
திணை அடை போன்ற பாரம்பரிய உணவுகள மீண்டும் நம் சமையலறையில கொண்டு வருவதால, ஆரோக்கியம் மட்டுமல்ல, நம் முன்னோர்களின் பழக்கமான உணவுகளையும் நம்மலால சுவைக்க முடியுது. Uyir Organic Farmers Market-ல் இருந்து தரமான பொருட்கள வாங்கி, திணை அடைய சுவையோட செஞ்சு பாருங்க. இது சுவைக்கு மட்டுமல்ல, உங்க உடல் நலத்துக்கும் ஒரு நல்ல தேர்வா இருக்கும். இன்றைக்கே உங்க வீட்டில திணை அடை செஞ்சு பாருங்க, அதன் சுவையும் ஆரோக்கிய நன்மைகளையும் அனுபவியுங்க!