அவுலின் நன்மைகள்
அவுல் (Flattened rice / Rice Flakes) அப்படிங்கறது தட்டையாக்கப்பட்ட அரிசி. இது இந்திய துணைக்கண்டத்துல மிகவும் பிரபலமான ஒரு உணவு. அவுல், போஹா, தட்டை அரிசி, இடிக்கப்பட்ட அரிசினு பல விதமான பெயர்கள் இதுக்கு இருக்கு. அரிசியானது தட்டையாக்குவதற்கு முன்னாடி அவிக்கப்படுது. இந்தமாதிரி தயாரிக்கப்படுர அவுல அதிகமா சமைக்காம அப்படியே உணவா சாப்பிடலாம்.
இந்த அவுலோட தண்ணீர், பால் அப்புறம் வேறு எந்த திரவத்த நாம சேர்க்கும்போதும், அது உடனே அத உறிஞ்சிக்குது. சூடான இல்லைனா குளிர்ந்த திரவத்தில அவுலச் சேர்த்தோம்னா அது அந்த திரவத்த உறிஞ்சி செதில்கள் பெருசாகுது. இந்த செதில்களோட தடிமன் ஒரு சாதாரண அரிசிய விட கிட்டத்தட்ட நாலு மடங்கு மாறுது.
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இந்த அவுல் இந்தியா, இலங்கை, நேபாளம் அப்புறம் வங்காளதேசம் முழுதும் மிக பிரபலமானது. மேலும் இது பொதுவா பலவகையான இந்திய உணவு வகைகளில தின்பண்டமாவோ, அல்லது துரித உணவாவோ பயன்படுது.
அவுலின் பண்புகள்
அவுல் நம்ப நாட்டோட பாரம்பரிய உணவு வகைகளில ஒன்னு. பல காலங்களா நம் முன்னோர்களால பயன்படுத்தப்பட்டுட்டு வருது. அவுல் அரிசிய இடிச்சு தயாரிக்கப்படுது.
ஊட்டச்சத்துக்கள் (Nutritional value of Avul/ Rice flakes)
வெள்ளை அவுல்ல வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கு.
சிவப்பு அவுலில நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், அப்படீன்னு பல சத்துக்கள் நிரம்பி இருக்கு. அதுவும் பட்டை தீட்டப்படாத சிவப்பு அரிசில இருந்து செய்யப்பட்ட அவுலா இருந்தா அது இன்னும் அதிக சத்து நிறைந்தது.
அவுலின் நன்மைகள் மற்றும் சிறப்புக்கள் (Benefits of Rice Flakes / Benefits of Flattened Rice)
வளர்ற குழந்தைகளுக்கு அவுல் ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருளா இருக்கு.
- அவுல பால் இல்லைனா தண்ணீரில கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து நாம குழந்தைகளுக்கு சாப்புடறதுக்கு கொடுக்கலாம்.
- அவுல் எளிதில் செரிமானம் ஆக கூடிய உணவு.
- நம்ம உடலோடு சூட்ட குறைகற தன்மை கொண்டது.
- உடல்ல இருக்க செல்கள் புத்துணர்ச்சி பெற உதவி செய்யும்.
- உடல் எடைய குறைக்க உதவுது.
- இதயத்த ஆரோக்கியமா வெச்சுருக்கவும் உதவுது.
- மேலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள குடுத்து நம்ம உடல உறுதியாக்குது.
- நோய் எதிர்ப்பு சக்தியயும் அதிகரிக்குது.
- இரத்தத்துல இருக்க கொழுப்ப குறைக்குது.
- மூளைச் செல்கள புத்துணர்ச்சியாக்குது.
- இரத்தத்துல இருக்க சிவப்பு அணுக்களோட அளவ இதனால அதிகரிக்க செய்ய முடியும்.
- வாயில ஏற்படுற புண்கள கூட குணப்படுத்தும்.
- புற்றுநோய் உண்டாக்கும் செல்கள குடலுக்குள்ள செல்ல விடாம தடுக்கும்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான உணவுப்பொருள்.
- சீதபேதி மாதிரியான நோய்களையும் தடுக்கும் தன்மை கொண்டது.
அவுலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் (Culinary uses of Rice Flakes)
தட்டை அரிசி, பொதுவா இந்தியில “போஹா” (Poha) அப்டீனும் தமிழில “அவுல்”னும் அழைக்கப்படுது. இது பல்வேறு தென்னிந்திய உணவுகளில பயன்படுத்தப்படும் உணவுப்பொருள். தட்டையான அரிசியால செய்யக்கூடிய உணவுகள இப்போ பாக்கலாம்.
அவுல முட்டை, மீன், இறைச்சி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், பூண்டு, இஞ்சி அப்படீன்னு இன்னும் பல வகையான உணவுப் பொருட்களோட சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
பாசிப்பயறு, உளுத்தம் பருப்பு, மிளகாய் அப்புறம் கறிவேப்பிலை எல்லாம் அவுலோட சேர்த்து விரைவான ஒரு அவுல் உப்புமா செஞ்சு சாப்பிடலாம். கூடுதலா பட்டாணி, கேரட் அப்புறம் உருளைக்கிழங்கு மாதிரியான காய்கறிகளயும் சேர்த்துக்கலாம்.
அவுல் புட்டு, அவுல் தோசை, அவுல் கொழுக்கட்டை, அவுல் பொங்கல், அவுல் கேசரி, அவுல் பாயசம், அவுல் கிச்சடி, இப்படி பல விதமான உணவு பொருட்கள செய்ய முடியும்.
இவை சில உதாரணங்கள் தான், மேலும் தமிழ் சமையலில தட்டையாக்கப்பட்ட அரிசியைப் பயன்படுத்த இன்னும் பல வழிகள் இருக்கு. இதனோட பன்முகத்தன்மையால இனிப்பு அப்புறம் காரமான பல உணவுகளை செய்யமுடியுது.
மேலும் அவுல் தமிழர்களோட பண்பாடு மற்றும் கலாச்சார நிகழ்வுகள்ளையும் பயன்படுத்தப்படுது.
முடிவுரை
அவுல உணவுல சரியான அளவுல சேர்த்துட்டு வர்ரது பல ஆரோக்கிய நன்மைகள குடுக்கும். நம்ம உயிர் இயற்கை உழவர் சந்தைல நீங்க கருப்புகவுணி அவுல், கருங்குறுவை அவுல், குள்ளங்கார் அவுல், மாப்பிள்ளை அவுல் மற்றும் சிவப்புஅரிசிசம்பா அவுல் அப்படீன்னு பல வகைகளால செய்யப்பட்ட அவுல வாங்கிக்கலாம்.
மேலும், நாம ஆரோகியமா வாழறதுக்கு தேவையான அனைத்து இயற்கை முறைல விளைவிக்க பட்ட உணவுப் பொருட்களையும் Uyir Organic Farmers Marketல நீங்க வாங்கிக்கலாம். பிற உணவு பொருட்களோட ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பயன்பாடுகள தெரிஞ்சுக்க நீங்க எங்க மற்ற வலைப்பதிவுகள பாருங்க.