மாப்பிள்ளைச் சாம்பா

மாப்பிள்ளை சாம்பா

வரலாற்றில் ஒரு பார்வை

மாப்பிள்ளை சாம்பா (Mapillai Samba) அப்படினு அழைக்கப்படற நெல் வகை, தமிழ்நாட்டோட பாரம்பரிய நெல் வகை. இன்னைக்கு வரைக்கும்  அதனோட மதிப்பு குறையவே இல்ல.

பழங்காலத்துல திருமணம் செய்துகொள்ற இளைஞனான மணமகன் (மாப்பிள்ளை), திருமணத்துக்கு முன்னாடி தன்னோட பலத்த நிரூபிக்கற விதத்துல இளவட்டக் கல்ல தூக்குற வழக்கம் தமிழர்களோட ஒரு மரபா இருந்துருக்கு.

அதனால  மணமகனோட உடல்வலிமைய அதிகரிக்க இந்த நெல்ல வெச்சு பலகாரங்கள் செஞ்சு மாப்பிள்ளைக்கு குடுப்பாங்க. ஏன்னா உடல வலிமை ஆக்குற தன்மை இதுக்கு இருக்கு.

தற்கால மக்களுக்கு 1940-கள்ல மறுஅறிமுக செய்யப்பட்டுச்சு. பசுமை புரட்சிக்கு அப்புறம் குறைஞ்சுபோய் திரும்பவும் இப்போ பயன்பாட்டுக்கு வந்துருக்கு.

வளரும் பருவம்

இந்த செடி ஒரு நீண்ட காலம் வளரக்கூடிய (155 – 160) நெல் வகை. அதாவது 155  – 160 நாட்கள் வரை வளரும். இது சம்பா பருவத்துலையும், மற்றும் பின் சம்பா பருவத்துலையும் பொதுவா பயிரிடப்படுது.

இந்த நெற்பயிர்கள், களிமண் அப்புறம் மணல் கலந்த களிமண் அந்த மாதிரியான நிலங்கள்ல சுமார் 120 செமீ உயரத்துக்கு வளருது.

பண்புகள்

சொரசொரப்பான தானியத்த கொண்டிருக்கிற இந்த அரிசி சாம்பல் கலந்த செந்நிறமா காணப்படுது.

நிலத்தில தண்ணீரே இல்லாம நிலம் காய்ந்து ஒரு மாத காலம் இருந்தாக்கூட மாப்பிள்ளைச் சம்பா வாடாது. அதேமாதிரி கனமழையால பல நாட்கள் நீருல மூழ்கிக் கிடந்தாலும் மாப்பிள்ளை சம்பா அழுகிப் போகாது.

இயற்கைச் சீற்றங்கள எல்லாம் தாங்கி வளரக்கூடிய இந்த ரகம், பூச்சித்தாக்குதல்களாலும் எளிதா பாதிக்கப்படாது. ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள பயன்படுத்தாம, இயற்கையான முறையில சாகுபடி செய்றதே இந்த நெல் ரகத்துக்கு ஏத்தது.

ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள்

மாப்பிள்ளை சாம்பா
மாப்பிள்ளை சாம்பா
மாப்பிள்ளை சாம்பா
  • மற்ற எல்லா அரிசிய போலவே இதுலயும் தாராளமா கார்போஹைட்ரேட்டுகள் கொண்டிருக்கு.
  • இந்த அரிசியில இருக்கற அதிக நார்ச்சத்து செரிமானத்த எளிதாக்குது.
  • இதுல இருக்கற வைட்டமின் பி1 வயிறு அப்புறம் வாய் புண்கள குணப்படுத்த உதவுது.
  • கூடுதலா, இது மிக அதிக அளவு நுண்ணூட்டச்சத்துக்கள கொண்டிருக்கு. இது மற்ற அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சரத்துக்கு உதவுது.
  • மற்ற அரிசியோட நாம ஒப்பிட்டு பார்த்தோம் அப்படினா இது இரத்தத்தில குளுக்கோஸ கலக்குற சதவீதம் குறைவா இருக்கு. அதனால இது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகமா பரிந்துரைக்கப்படுது. மேலும், இது உடம்புல இருக்கிற கொழுப்பையும் குறைக்குது.
  • இது சிறந்த வளர்ச்சிய அடைய உதவறதால குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுது.
  • இது இரும்பு அப்புறம் துத்தநாகத்தின் நல்ல ஆதாரமா இருப்பதால இரத்தத்தில் ஹீமோகுளோபின் உள்ளடக்கத்த மேம்படுத்துது. இது நரம்புகள், தசைகள், அப்புறம் இரத்தத்துக்கு ஊட்டமளிக்குது அப்புறம் பலப்படுத்துது.
  • இந்த அரிசிய சாப்புடறதால ஹெமிபிலீஜியா (முடக்குவாதம்) உட்பட பல நரம்பு தொடர்பான பிரச்சனைகள குணப்படுத்த முடியும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, அப்புறம் சகிப்புத்தன்மை மேம்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுது.

சமையல் பயன்பாடு

மாப்பிள்ளை சாம்பா
மாப்பிள்ளை சாம்பா
  • இத பயன்படுத்தி பலவிதமான உணவு பொருட்கள் செய்யலாம். உயிர் இயற்கை உழவர் சந்தைல குக்கீஸ், அவுல், சம்பா மாவு, பலதானிய தோசை மிக்ஸ், உயிர் சத்து மாவு அப்படினு பல பொருட்கள செய்யறாங்க.
  • மாப்பிளை சம்பா அரிசிய மசாலாகள் அப்புறம் காய்கறிகள் அல்லது இறைச்சியோட சேர்த்து நல்ல மணம் அப்புறம் சுவை நிறைந்த பிரியாணி சாப்பிடலாம்.
  • தமிழகத்துல மிகப் பிரபலமான அரிசிகளுள் ஒன்றான மாப்பிளை சம்பா அரிசி, பருப்பு, மிளகு, சீரகம் அப்புறம் நெய் சேர்த்து பழங்காலத்துல இருந்து அறுவடைத் திருநாளில பொங்கல் செய்ய பயன்படுத்த பட்டுச்சு.
  • இதுல சுவையான சாம்பார் சாதம் கூட செய்யலாம். ஒரு பாத்திரத்தில மாப்பிளை சம்பா அரிசிய மசாலா, பருப்பு அப்புறம் காய்கறிகளோட கலந்து ஒரு சுவையான, ஆரோக்கியமான உணவ சாப்பிடலாம்.
  • கடுகு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கப்பட்ட தயிருடன் கலந்து சமைத்த தயிர் சாதம் செஞ்சும் சுவைச்சு சாப்பிடலாம்.
  • அரிசிய தண்ணீர் அல்லது பாலில சமைத்து, சீரகம் அப்புறம் மிளகு சேர்த்து தாளிக்கப்பட்ட சத்தான அப்புறம் எளிதில ஜீரணமாகுற கஞ்சி செய்யலாம்.
  • மேலும் குழம்பு சாதம், நெய் சோறு அப்புறம் பொங்கல் மாதிரி பல வகையான அரிசி சம்பந்தபட்ட உணவுகளையும் இதுல சமைக்கலாம்.
  • இது தனித்துவமான நல்ல மணத்தையும் வாசனையையும் கொண்டிருக்கறதால ஆரோக்கியம் மட்டும் இல்லாம நல்ல சுவையையும் தருது.

பிற பயன்பாடுகள்

  • அரிசி நீரை அதனோட ஈரப்பதம் நிறைந்த பண்புக்காக தோல் பராமரிப்பு நடைமுறைகள்ல பயன்படுத்தறாங்க.
  • நன்றாக அரைத்த அரிசிய, தோல் பராமரிப்புப் பொருட்கள்ல பயன்படுத்தறாங்க. அது சருமம் மென்மையாக உதவி செய்யுது, இயற்கையான அழுக்கு நீக்கியாவும் பயன்படுது.
  • அரிசி தானியங்கள வெச்சு பல்வேறு கைவினை பொருட்கள் கூட செய்யப்படுது. இதனோட தனித்துவமான நிறம் இத மேலும் ஊக்குவிக்கும். இதுல கடினமான ஓவியங்கள் மட்டும் இல்லாம பாரம்பரிய கலை வடிவங்கள் கூட அடங்கும்.

முடிவுரை

இந்த நெல் ரகம் முக்கியமா பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்த படாம பயிர்செய்ய படுது. மேலும், வெள்ளை அரிசிக்கு ஒரு நல்ல மாற்றா அமையுது.

உங்களுக்கு நல்ல தரமான இயற்கை முறைல பயிர் செய்யப்பட்ட மாப்பிளை சம்பா அரிசியோ அல்லது அது சம்பந்தப்பட்ட வேற எந்த பொருட்கள் வேணும் அப்படினாலும் நீங்க Uyir Organic Farmers Marketல வாங்கிக்கலாம்.