கொழுக்கட்டை செய்வது எப்படி

கொழுக்கட்டை செய்வது எப்படி?

கொழுக்கட்டை செய்வது எப்படி?

கொழுக்கட்டை, நம் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில முக்கியமான ஒரு இடத்த பிடிச்சுருக்கிற இனிப்பு உணவு. இன்றைக்கும் விநாயகர் சதுர்த்தி வந்தாலே, ஒவ்வொருத்தர் வீடுகள்ளையும் கொழுக்கட்டையின் நறுமணம் பரவாம இருக்காது! இதுக்கு மோதகம் அப்படீன்னு இன்னோரு பெயரும் இருக்கு. வாட மாநிலங்கள்ல இத மோதக் அப்படீன்னு அழைப்பாங்க. கொழுக்கட்டை அப்படீனாலே, சங்கு போன்ற ஒரு வடிவம் நினைவுக்கு வரும். பாரம்பரியமா, நம் முன்னோர்கள் காலத்தில, கோவில்களில விசேஷங்கள ஒட்டி, பக்தர்களுக்கு பகிர்ந்து தரும் பிரசாதமாவும், குடும்ப விழாக்களில பிள்ளைகளின் விருப்ப பலகாரமாவும் இது இருந்துட்டு வந்துருக்கு. இந்த வலைப்பதிவுல கொழுக்கட்டை செய்வது எப்படி அப்படீன்னு பார்க்கலாம் வாங்க.

இன்றைக்கு, கொழுக்கட்டை அதன் இனிப்பான சுவை, மென்மையான பிசுப்புத்தனம், அப்புறம் அதீதமான சத்துக்களோட உணவா பரிமாறப்படுது. சுவையான தேங்காய் பூரணம் நிரப்பி, அரிசிமாவால செய்த மெது மெதுப்பான கொழுக்கட்டை, சுவைத்த உடனே உடல் மனம் அப்படீன்னு அனைத்தும் மகிழ்ச்சி அடையும்.

தேவையான பொருட்கள்

புறம் செய்ய

  • அரிசி மாவு – 1 கப்
  • நீர் – 1 1/4 கப்
  • உப்பு – 1 சிட்டிகை
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்

பூரணத்துக்காக

  • தேங்காய் துருவல் – 1 கப்
  • வெல்லம் – 3/4 கப் (சிறு துண்டுகளாக உடைத்தது)
  • ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
  • நெய் – 1 டீஸ்பூன்

கொழுக்கட்டை செய்முறை

1. முதலில், பூரணம்

  • ஒரு கடாயில நெய் ஊற்றி, அதில துருவிய தேங்காய சேர்த்து, மெதுவா வதக்கிக்கணும்.
  • வெல்லத்த சேர்த்து, அது கரைந்து, தேங்காயுடன் நன்றா கலங்குற வரைக்கும் சிறிய தீயில வைங்க.
  • ஏலக்காய் பொடிய சேர்த்து, நன்றா கிளறி, வற்றாம இருக்க தனியா வெச்சுக்கோங்க.

2. புறத்தை தயார் செய்வது

  • ஒரு பாத்திரத்தில நீர கொதிக்க வெச்சு, அதில உப்பும், எண்ணெயும் சேர்த்துக்கோங்க.
  • அது கொதிச்சதும், அரிசி மாவ மெல்ல வேக வெச்சு, கிளறிக்கோங்க. இது நல்ல கெட்டியான மாவா வரும்.
  • இந்த மாவ ஒரு பிளேட்டில போட்டு, கைகளால நன்றா பிசைந்து, மென்மையா கரைச்சுக்கோங்க.

3. கொழுக்கட்டை வடிவமைப்பது

மாவ சிறு சிறு உருண்டைகளா எடுத்து, அது நடுவில ஒரு குழி போட்டு, பூரணத்த நிரப்பிக்கொங்க.  இழுத்து மூடி கொழுக்கட்டைய மடித்த வெற்றிலை போன்ற வடிவத்துல செஞ்சுக்கோங்க.

4. ஆவியில் வேகவைத்தல்

ஒரு இட்லி தட்டில இல்லைன்னா குக்கரில, கொழுக்கட்டைகள ஆவியில வெச்சு, 10-12 நிமிடங்கள் வேக வெச்சுக்கோங்க.

5. பரிமாறல்

அது நல்லா வெந்ததும், ஆவியில இருந்து எடுத்து, சிறிது நேரம் விட்டு, பின் சூடா பரிமாறுங்க.

கொழுக்கட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • கொழுக்கட்டையில இருக்கும் தேங்காய் அப்புறம் வெல்லம், உடலுக்கு தேவையான ஆரோக்கிய சத்துக்களையும், நார்ச்சத்துக்களையும் வழங்குது.
  • மேலும் இது செய்ய பயன்படுத்தப்படும் அரிசி மாவும், தேங்காயும் செரிமானத்த எளிதாக்கும்.
  • வெள்ளை சர்க்கரைக்கு பதிலா வெல்லம் பயன்படுத்தப்படுவதால, உடலுக்கு ஆரோக்கியமான இயற்கை இனிப்பு கிடைக்குது.
  • கொழுக்கட்டைய ஒரு முறை சுவைத்தாலே, அதன் இனிப்பு அப்புறம் சுவைக்கு அடிமையாகிப் போயிடுவீங்க.

முடிவுரை

பாரம்பரியமாவே நம் கலாச்சாரத்தோட அடையாளமா இருக்க கொழுக்கட்டை, ஒவ்வொரு முறை சுவைத்தாலும், அது நம்மளோட முன்னோரின் பாரம்பரியத்த நினைவில கொண்டு வந்துடும். உயிர் இயற்கை உழவர் சந்தையில கிடைக்கும் தரமான, இயற்கையான வெல்லம், அரிசி மாவு, நெய் போன்ற பொருட்கள கொண்டு, உங்கள் அடுத்த சமையலில அல்லது இந்த விநாயகர் சதுர்த்திக்கு இந்த அசத்தலான கொழுக்கட்டைய செஞ்சு பாருங்க.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *