அதிரசம் செய்வது எப்படி?
அதிரசம் தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு உணவுகளில இன்றைக்கு வரை செய்யப்படும் ஒன்னு. திருவிழாக்கள், திருமணங்கள், அப்புறம் வீட்டுத் திருநாள்களில இது தவிர்க்க முடியாத இனிப்பா இருக்கு. அதிரசம் சுவையாலும், பாரம்பரியதாலும் மட்டும் சிறந்து விளங்கள, இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருது. இன்னைக்கு இந்த வலைப்பதிவுல, அதிரசம் எப்படி செய்வது அப்படீன்னு பாக்கலாம் வாங்க.
அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்
- அரிசி மாவு – 1 கப்
- கருப்பட்டி (Palm Jaggery) – 3/4 கப்
- நெய் – 1 டீஸ்பூன் (கலவைக்கு)
- நெய் அல்லது எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
- எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன் (கருப்பட்டி திரவத்திற்கு)
- நீர் – தேவையான அளவு
அதிரசம் செய்வது எப்படி?
- நல்ல தரமான பச்சரிசிய எடுத்து கழுவி, வெயிலில நல்லா உலர்த்தி, மாவா அரைச்சு எடுத்து வெச்சுக்கணும்.
- இந்த அரைச்ச மாவு மென்மையாவும், பொடியாவும் இருக்கனும்.
- ஒரு கடாயில கருப்பட்டிய சிறிதளவு தண்ணீரில கரைச்சு எடுத்துக்கோங்க.
- அது நல்லா கரைஞ்சதும், மாசுகள நீக்கிட்டு தண்ணீர வடிகட்டி எடுத்துக்கோங்க.
- பின் இத குறைந்த தீயில ஒரு கம்பி பதம் வர்ற நிலைக்கு (soft-ball consistency) கொண்டு வந்துக்கணும்.
- இறுதியில எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கிக்கணும்.
- அரிசி மாவ, சுண்டி வந்த கருப்பட்டி திரவத்தோட சேர்த்து நல்லா கலக்கிக்கணும்.
- இந்த கலவைய கைகளால தட்ட முடியும் நிலைக்கு கொண்டு வந்து, ஒரு பாத்திரத்தில எடுத்துக்கோங்க.
- இத 6-8 மணி நேரம் வரை அப்படியே விட்ருங்க.
- ஒரு பெரிய கடாயில நெய் இல்லைனா எண்ணெய சூடாக்கிக்கோங்க.
- அதிரசத்த தட்டையா உருட்டி எண்ணெயில மெதுவாக விடவும்.
- மிதமான தீயில பொன்னிறமா வரும் வர பொறிச்சுக்கணும்.
- அதிரசத்த எண்ணெய சரியா வடிக்கவிட்டு எடுத்து வெச்சுக்கணும்.
அதிரசத்தின் சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
அதிரசத்தில இருக்க முக்கிய பொருட்களான அரிசி மாவு, கருப்பட்டி, அப்புறம் நெய் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள தருது.
கருப்பட்டியின் நன்மைகள்
- இரும்பு அப்புறம் பல தாதுக்கள் நிறைந்தது, இது இரத்தத்தின் சத்த அதிகரிக்குது.
- உடல் சூட்ட குறைக்குது, நோய் எதிர்ப்பு சக்திய மேம்படுத்துது.
- உடலுக்கு உடனடி ஆற்றல தருது.
அரிசி மாவின் நன்மைகள்
- எளிதில ஜீரணமாகும், அப்புறம் உடல் உஷ்ணத்த சமநிலைப்படுத்துது.
- உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள வழங்குது.
நெய்யின் நன்மைகள்
- ஆரோக்கியமான கொழுப்புகள வழங்கி, இதய ஆரோக்கியத்த மேம்படுத்துது.
- அதிரசத்தோட சுவையையும், மென்மையையும் அதிகரிக்குது.
Uyir Organic Farmers Market – உங்கள் ஆரோக்கியத்தின் தோழன்
உயிர் ஆர்கானிக் பார்மர்ஸ் மார்க்கெட்ல நீங்க நம்பிக்கையுடன் அணுகக்கூடிய ஒரு இயற்கை உணவுப் பொருள் விற்பனை மையம். இங்க உங்களுக்கு சமையலுக்கு தேவ படுற எல்லா பொருட்களுமே கிடைக்கும்.
நீங்க Uyir Organic-ல இருந்து வலைத்தளம், Uyir App, அல்லது நேரடி விற்பனை மையம் மூலமா உங்க தேவைகள எளிதில பூர்த்தி செஞ்சுக்கலாம். Uyir Organic-ஐ தேர்வு செய்யுறது மூலமா நீங்க உங்க குடும்ப ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.
முடிவுரை
அதிரசம் அப்படீங்குறது தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு உணவு மட்டுமல்ல, அது நம் கலாசாரத்தின் சிறந்த அங்கமாவும் இருக்கு. சுவை, ஆரோக்கியம், அப்புறம் பாரம்பரியம் எல்லாம் சேர்ந்த அதிரசம் உங்க வீட்டில செய்ய Uyir Organicல இருந்து பொருட்கள வாங்கி, இன்னைக்கே முயற்சி செஞ்சு பாருங்க. உங்க குடும்பத்தினர் எல்லாரும் அத சுவைத்து ரசித்து பாராட்டுவாங்க!