மூங்கில் அரிசி நன்மைகள்

மூங்கில் அரிசி – (Bamboo Rice / Moongil Arisi)

மூங்கில் அரிசி நன்மைகள் பத்தி இந்த வலை பதிவுல பாக்கலாம் வாங்க.

வாழையடி வாழையா வாழ்க. மூங்கில் போல சுற்றம் தளராமல் வாழ்க’ அப்படீன்னு மணமக்கள வாழ்த்தும் பழக்கம் நம் தமிழ் மக்களிடையே இருக்கு. அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டுமே ஒன்னோட ஒன்னு புதர் போல நெருங்கி வளரக்கூடியது.

அதனால்தான் திருமண விழாக்களின் போது, மூங்கில் பந்தல்கால் நடுறதும், வாழை மரம் கட்டுறதும் தவறாமல் இடம் பெறுது.

அப்படி நம் வாழ்க்கையில ஒன்றியிருக்குற பயிர்களில ஒன்றான மூங்கில், மற்ற தாவரங்கள போலவே ஒவ்வோரு வருஷமும் பருவத்தில பூக்காம, தன் வாழ்நாள் முடியும் போது தன் இனத்த பரப்புரதுக்காக பூத்து விதைகள உருவாக்குது.

கிட்டத்தட்ட கோதுமை போல இருக்க இந்த விதைகள்தான் ‘மூங்கில் அரிசி’  அப்படீன்னு அழைக்கப்படுது. இந்த விதையோட மேல நெல் மாதிரியே, மேல தவிடு போல தோலும் இருக்கும் அதுக்கு உள்ள விதையும் இருக்கும். இது மூங்கில் பூவில இருந்து கிடைக்கறதால ‘மூங்கில் அரிசி’ அப்படீன்னு அழைக்கப்படுது.

வரலாற்றில் ஒரு பார்வை

இந்த தனித்துவமான அரிசி 1979 இல், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாடியே தமிழகத்துல பிரபலமாகிடுச்சு.

நார்ச்சத்து அப்புறம் கலோரி அடர்த்தியான மூங்கில் அரிசி கர்நாடகாவோட சில பகுதிகளில காணப்படுது. இது உள்நாட்டில ‘முலாயிரி‘னு அழைக்கப்படுது.

மேலும் தெற்குல, கேரளாவில, வயநாடு சரணாலயத்தோட உட்புறங்களில வசிக்கும் பழங்குடியின சமூகங்கள் மூங்கில் அரிசி அறுவடை ஒரு முக்கிய வருமான ஆதாரமாவும் இருக்கு‌.

மூங்கில் அரிசி பண்புகள்

மூங்கில் அரிசி நன்மைகள்

மூங்கில் அரிசி, உயிர் ஆர்கானிக் உழவர் சந்தையில இருந்து கிடைக்கற சிறந்த தயாரிப்புல ஒன்னு.

இது 60 வயதான மரத்தில்தான் கிடைக்கும். இது மேலும் உடலுக்கு நல்ல ஊட்டம் கொடுக்குது.

பாரம்பரிய மூங்கில் அரிசி கடுமையா இருக்கும். இனிப்பு, வலிமை அப்புறம் சத்தானதும் கூட. இது கபா, பித்த தோஷத்த குணப்படுத்துது. உடலில் இருக்க நச்சுப் பொருட்கள நீக்குது அப்புறம் உடலின் முக்கிய நச்சுக்கள சிறுநீர் மூலம் வெளியேற்றி நோய்கள குணப்படுத்துது.

இந்த மூங்கில் அரிசி காட்டுல வாழற பழங்குடி மக்களுக்கு முக்கிய உணவா இருக்கு. மேலும் சிங்கவால் குரங்கு, யானை, காட்டு மாடு போன்ற விலங்குகளுக்கு மிகவும் பிடித்த உணவா இருக்கு. பழங்குடி மக்கள் கிட்ட இருந்து இது மற்ற மக்களுக்கும் பரவுது.

மூங்கில் அரிசி நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

மூங்கில் அரிசி நன்மைகள்
  • இது நார்ச்சத்து, புரதம் அப்புறம் பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சிறந்த உணவு.
  • இயற்கையான மூங்கில் அரிசி கருவுறுதல அதிகரிக்கும் குணம் கொண்டிருக்கு.
  • இது கோதுமைக்கு இணையான சுவையும் கொண்டிருக்கு.
  • இது குறைந்த கிளைசெமிக் குறியீட்ட கொண்டிருக்கு அதனால நீரிழிவு நோய் இருக்கவங்க சாப்பட்றதுக்கு ஏற்றதா அமையுது.
  • ஆயுர்வேதத்தில, மூங்கில் அரிசி, பல்வேறு நோய்கள குணப்படுத்த பயன்படும் ஒரு சிகிச்சை அரிசி.
  • மூங்கில் அரிசிய பயன்படுத்தறது, நம்ப உடம்ப ஆரோக்கியமாகவும், மாசு இல்லாமையும் வெச்சுருக்க உதவுது.
  • மூங்கில் அரிசி, மற்ற அரிசி அப்புறம் கோதுமைய விட அதிக புரதத்த அளிக்குது.
  • இதுல வைட்டமின் B6 நிரம்பி இருக்கு.
  • நீரிழிவு நோய எதிர்க்கற பண்ப கொண்டிருக்கு.
  • கொலஸ்ட்ரால் அளவ குறைக்குது.
  • இது மேலும் முதுகு அசௌகரியம், வாத வலி அப்புறம் மூட்டு வலி ஆகியவற்ற குறைக்குது.

சமையல் பயன்பாடுகள்

மூங்கில் அரிசிய, சாதாரண அரிசி போலவே, பிரியாணி, இட்லி, தோசை, கிச்சடி, கீர், பாயசம், கஞ்சி அப்புறம் புட்டு போன்ற உணவுகள தயாரிக்க பயன்படுத்தலாம்.

மேலும், கிச்சடி, சாலட், புலாவ், மூங்கில் ரைஸ் ரிசோட்டோ, உப்மா, மூங்கில் அரிசி காய்கறி கேசரோல், மூங்கில் அரிசி தேங்காய் சாதம், பருப்பு சூப், மற்றும் அரிசி கேக்குகள்னு பல விதமான உணவுகள தயாரிக்கலாம்.

முடிவுரை

இந்த மாதிரி பல வகையான நன்மைகளையும் தனித்துவமான பண்புகளையும் மூங்கில் அரிசி கொண்டு இருக்கு. இத மனசுல கொண்டு பிற அரிசிகள் போலவே இதையும் அன்றாட உணவுல பயன்படுத்துங்க. அதனோட அனைத்து நன்மைகளையும் பெற்று மகிழுங்க.

மேலும், மூங்கில் அரிசி மட்டும் இல்லாம இயற்கையான முறையில விளைவிக்கப்பட்ட பிற வகையான அரிசிகளையும், உணவு பொருட்களையும் நீங்க Uyir Organic Farmers Marketல வாங்கிக்கலாம்.