Description
உயிர் அங்ககப் பூச்சி விரட்டி:
உயிர் அங்ககப் பூச்சி விரட்டி வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய், மர வெப்பச் சிதைவு எண்ணெய், நாட்டு மாட்டு கோமியம், மூலிகைச் சாறு ஆகியவை துல்லியமாகக் கலந்த ஒரு இயற்கைக் கலவையாகும்.
பயன்கள்:
1. பயிர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோயை எதிர் கொள்ளும் திறனை அளிக்கிறது; மற்றும் நோயுள்ள பயிர்களைக் குணப்படுத்துகிறது.
2. உயிர் அங்ககப் பூச்சி விரட்டி பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் குறிப்பாகத் தாக்கும். மனிதருக்கோ மற்ற நன்மை செய்யும் பூச்சிகளுக்கோ இது எவ்வித தீங்கையும் விளைவிப்பதில்லை.
3. உயிர் அங்ககப் பூச்சி விரட்டி உபயோகப்படுத்தும்போது, பூச்சிகள், பூச்சி விரட்டிக்கு எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக் கொள்வதில்லை. மற்றும் இது சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் எந்த நச்சையும் சேர்ப்பது இல்லை.
4. உயிர் அங்ககப் பூச்சி விரட்டி, ஒரு பூச்சிக் கொல்லியாகச் செயல்படாமல் ஒரு பூச்சி தடுப்பானாகச் செயல்படுவதால், பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
5. உயிர் அங்ககப் பூச்சி விரட்டி, இலைகளில் பூச்சிகள் விரும்பாத சுவையை உண்டு பண்ணுவதால், பூச்சிகள் உணவு எடுத்துக் கொள்வது குறைகிறது. ஸ்பைரகில்ஸ் எனப்படும் சுவாச உறுப்பை அடைத்து பூச்சிகளுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. பூச்சிகளின் மேல் தோல் பகுதியில் உள்ள மெழுகு போன்ற பாதுகாப்பு அமைப்பைத் தகர்க்கிறது.
6. உயிர் அங்ககப் பூச்சி விரட்டி பூக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.
7. உயிர் அங்ககப் பூச்சி விரட்டி, சாறு உறிஞ்சும் பூச்சிகள், கடித்துச் சாப்பிடும் பூச்சிகள் போன்ற அனைத்து விதமான பூச்சிகளையும் திறம்படக் கட்டுப்படுத்துகிறது.
உபயோகப் படுத்தும் முறைகள்:
தெளிப்பு:
8 முதல் 10 மில்லி வரை உயிர் அங்ககப் பூச்சி விரட்டி, 10 மில்லி அரிசிக்கஞ்சி ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, இதனுடன் மற்ற உயிர் உயிரியல் பூச்சிக் கொல்லிகளையும் தேவையான அளவு சேர்த்துக் கொண்டு மாலை வேளையில் தெளிக்க வேண்டும். 15 நாட்கள் இடைவெளியில், 2 முதல் 3 தடவைகள் பூசித்த தாக்குதலின் தீவிரத்தைப் பொருத்துத் தெளிக்கவும்.
Benefits :
- Increases immunity of plants to fight diseases; cures already infested plants.
- Uyir Organic Pest Repellant has high degree of specificity for the target pest, no adverse effect on non target and beneficial organisms or man.
- Uyir Organic Pest Repellant application – means absence of pest resistance development also absence of residual build up in the environment.
- Exhibit an insect deterrent rather than insecticidal effect, hence inhibit normal development in insects.
- Work as anti feedants, suffocation (by blocking the spiracles) or disruption of cuticular waxes and membranes in the integument.
- Improves flower formation.
- Effective against all type of plant pests –both biting and sucking pests.
Method Of Application:
Foliar Application:
Mix 8 to 10 ml per lit of Uyir Organic Pest Repellant and 10 ml per lit of Rice Kanji along with other Uyir biopesticides and spray during evening hours and spray periodically to control the pests effectively.
Reviews
There are no reviews yet.