Description
உப்பு என்பது ருசிக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல அது, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.கருப்பு உப்பில், கடல் உப்பைவிட சோடியம் குறைவாகக் காணப்படுகிறது. வட இந்தியாவில் ‘காலா நமக்’ என்று பெயர் கொண்ட கருப்பு உப்பையே அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
- மூட்டு வலி, தசை பிடிப்பிற்கு, கருப்பு உப்பை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவும். அதை, கொட்டி விடாதபடி ஒரு கெட்டியான துணியில் மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும். வலி இருக்கும் இடங்களில் உப்பு ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் தெரியும்.
- சாப்பிட்ட பின், வயிறு உப்புசம், போன்ற பிரச்னைகள் இருந்தால், சமையலில் கடல் உப்பிற்குப் பதிலாக கருப்பு உப்பைச் சேர்த்துக் கொள்ளவும். மருந்துக்கு கடைகளில் விற்கும் ஜீரண மாத்திரைகளில், கருப்பு உப்பு தான் சேர்க்கப்படுகிறது.
- ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்திரவு, ஏன் சாதாரண ஜலதோஷத்திற்குக் கூட, மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அந்த நேரங்களில், இன்ஹேலரில், கருப்பு உப்பினை பொடித்துப் போட்டு சுவாசித்தால், மூச்சுத்திணறல் இருக்காது.
- உடல் எடையைக் குறைக்க, உணவில் கருப்பு உப்பு மட்டுமே சேர்த்து சமைப்பது உசிதமானது. ஏனென்றால், உடல் எடை குறைவதை கண் கூடாகப் பார்க்கலாம்.
- மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்தாகவும் பயன்படுகிறது. சிறிது கருப்பு உப்பை நீரில் கரைத்துக் கொண்டு, அத்துடன், இஞ்சி, எலுமிச்சை சாறினை சேர்த்துப் பருகினால், மலம் இளகி வெளிப்பட்டுவிடும்.
- கெட்ட கொழுப்புத் தன்மையை மட்டுப்படுத்துகிறது. கருப்பு உப்பினை உணவில் சேர்த்துக் கொள்வதால், கொலாஸ்ட்ரல் அளவு அடிக்கடி வேறுபடாமல், ஆரோக்கியமான ஒரே நிலையில் பாதுகாக்கப் படுகிறது. சீரான ரத்த ஓட்டம் உடலுக்குக் கிடைக்கிறது.
- நெஞ்செரிச்சல் நீங்குகிறது. வயிற்றில் அமிலத்தன்மை கூடுவதால்தான் நெஞ்சரிச்சல் உண்டாகிறது. கருப்பு உப்பில், ஆல்கலைன் நிரம்பி இருப்பதால், அதற்கு அமிலத் தன்மையைக் கட்டுப் படுத்தும் தன்மை உண்டு.
- ஆகாரம் உண்டவுடன், ஜீரணம் ஆகாமல், மேலுக்கு உணவு எதிர்த்து வரும் சங்கடம் சிலருக்கு இருக்கும். அந்த அவஸ்தையில் இருந்து விடுபட, ஒரு தாமிரப் பாத்திரத்தில் சிறிது கருப்பு உப்பைப் போட்டு, மிதமான தீயில் வைக்கவும். உப்பு நிறம் மாறியவுடன், தீயிலிருந்து நீக்கி, அந்த உப்பினை சிறிது எடுத்து, நீரில் கரைத்துக் குடித்தால், உணவு மேலே வருவது நிற்கும்.
Reviews
There are no reviews yet.